3051. தங்கத்தின் வேதி குறியீடு?
Au
3052. Au என்பதன் விரிவு?
Aurum (ஆரம்)
[ஆரம் என்றால் இலத்தீனில் மின்னும் காலை உதயம் என பொருளாம்....]
3053. தங்கம் தமிழர்தமக்கு எவ்வாறு கிடைத்தது?
ரோமானிய கிரேக்க நாடுகளோடு ஏற்றுமதி-இறக்குமதி செய்த தமிழ் பெருங்குடிகள் , மிளகை (Pepper) கொடுத்து தங்கத்தை இறக்குமதி செய்ததாக சங்க இலக்கியங்கள் மொழிகின்றன.
3054. ஐரோப்பியர்களின் Gold Rush எனப்படுவது?
ஐரோப்பியர்களை தங்கவெறியர்கள் எனலாம்! எங்கு தங்கம் கிடைக்குமென பாய்ந்து தேடுவர்! அதற்காக சண்டையிடுவர்! கொலை செய்வர்! ஐரோப்பிய நாடுகளில் ஆங்காங்கே தங்கவேட்டைகள் அரங்கேறின.
3055. தங்கத்தை உலகிற்கு வழங்குவதில் ஆப்ரிக்காவின் பங்கு?
காண்பவற்றையெல்லாம் தங்கமோ என சந்தேகிக்கும் ஐரோப்பியர்களுக்கு, ஆப்ரிக்கா ஒரு சுவர்க்க பூமியாக தென்பட்டது. காரணம் , ஆப்ரிக்காவின் நிலத்தில் தங்கம் தங்குவதால் தான் ! Golden Valley (தங்கப் பள்ளத்தாக்கு) என பெயரிட்டு அங்கிருந்த பூர்வகுடி மக்களை அடிமையாக்கி தங்கம் தோண்டவைத்தனர் ஐரோப்பியர்கள் ! இப்போது உள்ள ஆப்ரிக்க அரசியலமைப்பும் ஏதோ ஒரு விதத்தில் அம்மக்களை அடிமைகளாக உழைக்கும் வர்க்கமாகவே வைத்துள்ளது என்பது வருத்தத்திற்குரியது. குழந்தை தொழிலாளிகளையும் நெருக்கி வேலை வாங்கும் அதிகாரகேடு ஆப்ரிக்காவில் இன்றளவும் அரங்கேறுகிறதாம் ! நாம் அணியும் தங்கங்கள் , ஏதோ ஒரு சிறுமி/சிறுவனின் கண்ணீராலும் வியர்வையாலும் கிடைத்தது என உணர்ந்தால் அதை அணிவதால் கிடைக்கும் சமூகநிலை நமக்கு வேண்டுமா.....!?
3056. அன்றாட தங்கத்தின் விலையை தீர்மானிப்பது?
இலண்டனில் உள்ள புல்லியன் சந்தை கூட்டமைப்பு (London Bullion Market Association) தங்கத்தின் விலையை நிர்ணயிக்கும். அடுத்த இரண்டு மணிநேரங்களில் அந்த விலை அமைவுகளுக்கு ஏற்றவாறு இந்தியாவில் அமையும் விலையை மும்பையிலுள்ள புல்லியன் சந்தை கூட்டமைப்பு தீர்மானிக்கும்.
3057. தங்கத்தின் விலை எந்த நேரங்களில் தீர்மானிக்கப்படும்?
காலை 11 மணியளவில் தீர்மானிக்கப்படும் விலையானது மாலை 6 மணி வரை நடைமுறையிலிருக்கும். 6 மணிக்கு தீர்மானிக்கப்படும் விலையானது மறுநாள் 11 மணி வரை நடைமுறையாகும். ஆக , ஒருநாளுக்கு இருமுறை தங்க விலைநிர்ணயம் நடைபெறுகிறது.
3058. காணம் என்றால் என்ன?
தங்கம் என பொருள்
3059. தங்கம் ஏன் துருபிடிப்பதில்லை?
துருபிடித்தல் என்பது உலோகங்கள், சுற்றுசூழலில் உள்ள ஆக்சிஜனோடு வினைபுரிந்து உலோக ஆக்சைடாக மாறுவதுதான்! உதாரணமாக , இரும்பு (Fe) ஆக்சிஜனோடு வினைபுரிந்து, இரும்பு ஆக்சைடு (Fe2O3) எனும் துருவை உருவாக்கும். தங்கமோ பெரும்பாலும் தனித்தது. அவ்வளவு எளிதில் தங்கம் ஆக்சிஜனோடு வினைபுரியாது.
3060. வெள்ளை தங்கம் எனப்படுவது?
பிளாட்டினம்

கருத்துகள்