முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (307)

3061. வெள்ளியின் வேதி குறியீடு?
     Ag [Ag என்பதன் விரிவாக்கம்  Argentum என்பதாகும்.]

3062. முந்திரி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு?
     இந்தியா

3063. ஆண்டுதோறும் கழுதைக் கண்காட்சி நடக்கும் இடம்?
     உஜ்ஜைனி

3064. தாவரங்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுப்பது?
     பொட்டாசியம்

3065. 'பிக் ஆப்பிள்' என்று அழைக்கப்படும் அமெரிக்க நகரம்?
    நியூயார்க்

3066. சுரப்பிகளின் (Glands) பணி யாது?
     உடல் இயக்கமானது சரியான முறையில் நடைபெற தேவையான முக்கிய பொருட்களை சுரக்கும் சீரிய பணியை செய்பவை, சுரப்பிகள்.

3067. சுரப்பிகளின் இரண்டு வகைகள் யாவை?
     நாளமுள்ள சுரப்பிகள் மற்றும் நாளமில்லா சுரப்பிகள். நாளம் என்றால் குழாய் என பொருள்.

3068. நாளமுள்ள சுரப்பிகள் (Ducted Glands) எத்தகையவை?
     தாம் சுரக்கும் பொருளை குழாய்களின் மூலமாக பிற பகுதிகளுக்கு எடுத்து செல்பவை, நாளமுள்ள சுரப்பிகள். (உதாரணம் : வியர்வை , கண்ணீர் மற்றும் கல்லீரல் போன்ற சுரப்பிகள்)

3069. நாளமில்லா சுரப்பிகள் (Ductless Glands) எத்தகையவை?
     தாம் சுரக்கும் பொருளை நேரடியாக இரத்தத்தில் கலப்பதன் மூலமாக பிற பகுதிகளுக்கு எடுத்து செல்பவை, நாளமில்லா சுரப்பிகள். (உதாரணம் : பிட்யூட்டரி , அட்ரீனல் மற்றும் தைராய்டு போன்ற சுரப்பிகள்)

3070. கல்லீரல் சுரக்கும் பித்தநீரின் பயன்?
    உணவை செரித்தல் மற்றும் இரத்தத்தில் உள்ள வேதிபொருட்களை அகற்றுதல்

கருத்துகள்