முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (308)

3071. கிறித்துமசு தாத்தாவை குறிக்கும் Santa Clause என்பது எந்த மொழியின் மருவல்?
     டச்சு மொழி
[சண்ட குலோஸ் என்ற சொல் டச்சு மொழியின் சிண்டெர்கிலாஸ் என்னும் சொல்லில் இருந்து மருவியதாகும்.]


3072. நத்தார் தாத்தா எனப்படுவது யார்?
     கிறித்துமசு தாத்தாவே....
[கிறித்துமசின் தமிழ் பெயர்தான் , நத்தார் பண்டிகை என்பது.]


3073. நத்தார் தாத்தாவின் உண்மை பின்னணி?
     Saint Nicholas என்பவரே ஆங்கிலேய நாட்டுப்புறக் கலைப் பின்னணி கொண்ட கிறித்துமசு தாத்தாவாகவும், டச்சு நாட்டின் நாட்டுப்புறக் கலை உருவமான சின்டர்கிளாசாகவும் சித்தரிக்கப்படுகிறார். நிக்கலசு, இரகசியமாக குழந்தைகளுக்குப் பரிசு தரும் இயல்புடையவராக இருந்துள்ளார்.

3074. இப்போது நாம் அறியும் நத்தார் தாத்தாவின் உருவம் எவ்வாறு அமையப்பெற்றது?
     Coca-Cola நிறுவனம் முதன் முதலில் அறிமுகப்படுத்திய சான்டாவின் உருவம் சற்று பயமுறுத்தும் வண்ணம் அமைந்ததாம். இதனால் 1931 ஆம் ஆண்டில் இக்குளிர்பான நிறுவனம் பத்திரிக்கை விளம்பரங்களுக்கான சான்டாவின் படத்தை வரைய Haddon Sundblom என்ற ஓவியரை அழைத்துள்ளனர். அவர் சந்தோஷமான குதூகலமான சான்டாவின் படத்தை வரைந்துள்ளார். அப்படம் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. இப்போது நமக்கு சந்தோஷம் கொடுக்கும் சான்டா கிளாஸின் உருவம் இவ்வாறுதான் உருவானதாம். 

3075. நத்தார் தாத்தாவை வரவேற்கும் ஏற்பாடுகளில் , காலுறைகள் (Socks) வைக்கப்படுவதன் காரணம் என்ன?
    தனது மூன்று மகள்களின் திருமணத்திற்கு வரதட்சணை கொடுக்க பணம் இல்லாமல் ஏழையொருவர் அவதிப்பட்டாராம். இதை அறிந்த பாதிரியார் நிகோலஸ் அவர்களின் வீட்டின் புகைபோக்கியின் வழியாக ஒரு தங்கப்பையை போட்டாராம். அந்த இடத்தில்தான் அவரது பெண்கள் தங்களது காலுறைகளை காயவைத்துள்ளனராம். இச்சம்பவத்தை நினைவுகூறும் வகையில் தான் கிறித்துமசு அலங்காரங்களில் காலுறைகள் தொங்கவிடப்பட்ட ஆரம்பிக்கப்பட்டதாம்.

3076. உணர்வுகளை கடத்தும் நியூரான்களுக்கு இடையே தகவல் தொடர்பு நடைபெற காரணமான தனிமம்?
     கால்சியம்
[வெறும் எலும்புகளுக்கு மட்டும்தான் என்றில்லாமல் மனித உடலில் பலவாறு கால்சியம் முக்கியத்துவம் பெறுகிறது. இதயத்தின் சீரான இயக்கம் , செல்களுக்கு இடையேயான தகவல் தொடர்பு , இரத்தம் உறைதல் மற்றும் உயிர்சூழலின் ஒவ்வொரு அங்கத்திலும் கால்சியம் தேவை.]


3077. உலகில் அதிகளவு காணப்படும் கால்சிய சேர்மம்?
     கால்சியம் கார்போனேட்
[கால்சியம் , தங்கத்தைப் போல் தனித்து தனிமமாய் காணப்படாமல் , பெரும்பாலும் பிரிதொரு தனிமத்தோடு சேர்ந்த சேர்மமாகவே காணப்படும். அவ்விதம் , கால்சியம் கார்பனேட் எனும் சேர்மமாகவே அதிகளவில் காணப்படுகிறது.]


3078. சுதை என்றால் என்ன பொருள்?
     சுண்ணாம்பு
[கால்சியம் தான் சுண்ணாம்பு ! "வெள்ளி அன்ன விளங்கு சுதை உரிஈ" என்ற நெடுநல்வாடை வரிகள்  தலையானங்கானத்து செருவென்ற பாண்டிய நெடுஞ்செழிய மன்னனின் கோட்டைமுற்றம், சுண்ணாம்பினால் ஆகி வெள்ளிபோல் மின்னுவதை எடுத்துரைக்கின்றது.]


3079. செயற்கை சுண்ணாம்பை தமிழர்கள் எவ்வாறு உருவாக்கினர்?
     இயற்கையாக பாறைகளாக காணப்படும் சுண்ணாம்பையடுத்து, கடலில் கிடைக்கும் சிப்பிகளை சூடாக்கி தூளாக்கி சுடுநீரைவிட்டு சுண்ணாம்பை பெற்றனர்.

3080. மனித உடலில் 99% உள்ள தனிமங்கள் யாவை?
    ஆக்சிஜன் - கார்பன் - ஹைட்ரஜன் - நைட்ரஜன் - கால்சியம் - பாஸ்பரஸ்

கருத்துகள்