முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (309)

3081. Endocrine (எண்டோகிரைன்) சுரப்பிகள் என்பவை? 

    நாளமில்லா சுரப்பிகள் (Ductless Glands)

[நம் உடலில் எண்ணற்ற சுரப்பிகள் உள்ளதை நாம் அறிவோம். சுரப்பிகள் சுரக்கும் பொருளானது , தாமிரபரணியிலிருந்து நமக்கு கிடைக்கும் குடிநீரைபோல ஒரு குழாய் வழியே எடுத்துசெல்லப்பட்டு தேவையான இடத்தில் வழங்கபடுமாயின் அது நாளமுள்ள சுரப்பி. குழாய் ஏதுமின்றி நேரடியாக இரத்தத்தில் கலக்குமாயின் அதுவே நாளமில்லா சுரப்பி.]

3082. Exocrine (எக்ஸோக்ரைன்) சுரப்பிகள் எனப்படுபவை?
     நாளமுள்ள சுரப்பிகள் (Ducted Glands)

3083. Heterocrine (ஹெடிரோக்ரைன்) சுரப்பிகள் எனப்படுபவை?
     நாளமுள்ள மற்றும் நாளமில்லா சுரப்பிகள்
[நாளங்களை சுரந்து அனுப்ப குழாய் அமைப்புகளை பயன்படுத்தியும் அவற்றை பயன்படுத்தாமலும் இந்த கலப்பு வகை இயங்கும். உதாரணமாக , கணையம் (Pancreas).]


3084. அகச்சுரப்பிகள் / அகஞ்சுரக்கும் சுரப்பிகள் என்பவை?
     Endo என்றால் உள்ளே ! Exo என்றால் வெளியே ! உடலுக்குள்ளே உள்ளே கண்ணுக்கு தெரியாமல் சுரப்பவை Endocrine எனப்படும் அகச்சுரப்பிகள். இவை நேரடியாக இரத்தத்தில் கலக்கப்படுபவை.

3085. காணில் சுரப்பிகள் என்பவை?
    காண் + இல் = பார்க்க இயலாத என பொருள். கண்ணுக்கு தெரியாமல் அகத்தே சுரப்பதை காண இயலுமா? ஆகையால் தான் , இலங்கை தமிழில் , அகஞ்சுரக்கும் சுரப்பிகளை காணில் சுரப்பிகள் என்கின்றனர்.

3086. அட்ரீனல் சுரப்பியின் பயன் யாது?
     இரு சிறுநீரகங்களுக்கு மேலும் அமையப்பெற்றிருக்கும் இந்த சுரப்பிதான் உடல் இயக்கங்களை கட்டுபடுத்தும் ஹார்மோன்களை சுரக்கிறது. நம் இரத்தத்தில் சர்க்கரை அளவு மற்றும் உப்பின் அளவை கட்டுப்படுத்த வல்ல ஹார்மோன்கள் அவை.

3087. ஆபத்துவரும்போது நாம் பெரும்பலசாலியாக ஆகிறோம் ! உதாரணமாக , ஒரு நாய் நம்மை துரத்தியதெனில் சிறுத்தை வேகத்தில் நாம் ஓடுவதுண்டு... இது எங்ஙனம்?
     அட்ரீனல் சுரப்பி சுரக்கும் முக்கியமான ஹார்மோன் , அட்ரீனலின். "ஆபத்து" என்ற செய்தி மூளையிலிருந்து வந்ததும் இந்த அட்ரீனலின் சுரக்கப்பட்டு நம்மை வழக்கத்திற்கு மாறாக பலமாக்குகிறது.

3088. பிட்யூட்டரி சுரப்பியின் பயன் யாது?
     சிறு பட்டாணியின் அளவில் மூளையின் அடிப்பகுதியிலுள்ள இந்த பிட்யூட்டரி தான் , பிற எல்லா சுரப்பிகளையும் கட்டுபடுத்தும் தலைமை சுரப்பி ! மேலும் , வளர்ச்சியை தூண்டுதல் , தாய்ப்பால் சுரக்கச்செய்தல் மற்றும் மெலனின் நிறமிகளின் உற்பத்தியை தூண்டுதல் என அநேக பணிகளை பிட்யூட்டரி ஏற்கிறது.

3089. தைராய்டு சுரப்பியின் பயன் யாது?
     கழுத்துப்பகுதியில் உள்ள தைராய்டு சுரப்பி , தைராக்ஸின் எனும் ஹார்மோனை சுரக்கிறது. இதன் மூலமாகவே , உடல் வளர்ச்சி , ஆண்-பெண் இயல்புகள் போன்றவை நிர்ணயமாகும்.

3090. தைராக்ஸின் சுரக்கப்பட தேவையான தாது?
    அயோடின் சத்து நிறைந்த உணவுகளை உண்ணவேண்டும்!
[Foods High in Iodine : Seaweed · Fish · Shellfish · Dairy · Eggs · Iodized Salt · Prunes · Lima Beans]

கருத்துகள்