முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (310)

3091. மனித காதின் மூன்று பகுதிகள்?
     வெளிக்காது - நடுக்காது - உட்காது

3092. வெளிக்காதில் உள்ள பகுதிகள்?
     செவிமடல் - செவி குழாய் - செவிப்பறை புறப்படலம்
[இந்த அமைப்பு மிகவும் எளியது. நாம் தான் ஒலி என வைத்துக் கொள்வோம் ! நாம் செவிப்பறையின் மீது மோத போகிறோம் ! எனவே, செவி குழாயின் வழியாக பயணம் செய்து , செவிப்பறையின் புறப்படலத்தை தொடுகிறோம் ! செவிக்குழாய் , நம்மை செவிப்பறைக்கு இட்டுச் செல்லும். The outer ear is the external portion of the ear and includes the fleshy visible pinna (also called the auricle), the ear canal, and the outer layer of the eardrum (also called the tympanic membrane).]


3093. செவிமடலின் பயன் யாது?
     Pinna (பின்னா) எனப்படும் இந்த செவிமடல் , நம் வெளிக்காதின் ஒரு பகுதி என்றோம் ! இது எந்த பகுதி தெரியுமா? நாம் , கம்மல் குத்தும் மென்மையான தசை பகுதி ! நம் பாட்டிமார்களின் காதில் ஒரு அணிகலனை கண்டிருப்போம்... தண்டட்டி / பாம்படம் என அறியப்படும் அந்த காதணி , பின்னாவாகிய செவிமடலை பின்னுக்கு இழுத்து முன்னும் பின்னும் அசையும் அழகுதான் என்ன !? அந்த இழுபட்ட செவிமடலை , பாட்டிகளையடுத்து மற்றுமொருவரிடம்தான் கண்டதுண்டு.... புத்தபிரான் !

3094. செவிமடலின் (Pinna / Auricle) பயன் யாது?
     ஒரு சில பாகங்கள் ஏன் உள்ளன என்றே கண்டுபிடிக்கமுடியாது ! அவ்வண்ணம் தான் செவிமடலும் ! நாம் கேக்கும் ஒலியை பெருக்குவதற்காக (Amplification) என்ற ஒரு கருத்து உண்டு. [செவிமடலில் பல்லாயிரம் நரம்பு முடிச்சுகள் உண்டாம். இதை நாம் பிடித்து முன்னும் பின்னும் இழுத்தால் , நன்கு அவை வேலை செய்யுமாம். நாம் சுறுசுறுப்பாவோமாம். நாம் எப்போதாவது செவிமடலை முன்பின் இழுத்துள்ளோமா? தோப்புகரணம் போட்டதுண்டால், செவிமடல்தானே மூலதனம்!?]

3095. காது என்றால் என்ன பொருள்?
    காது என்றால் பொதுவாக பிளவு / பிரிவு என பொருள்.
[காதல் என்ற சொல்லை எடுத்துக்கொள்(ல்)வோம். இதை சற்றே பிரித்தால் , காது + அல் என வரும். அல் என்றால் இரவு மற்றும் இல்லாத என பொருள். காது + அல் என்றால் பிரிவு இல்லாத என பொருள். பிரிவேயில்லாத நிலைதான் காதலாம்!]


3096. நடுக்காதில் உள்ள மூன்று எலும்புகள்?
     சுத்தி (Malleus) - பட்டடை (Incus) - அங்கவடி (Stapes)

3097. நடுக்காதின் அமைப்பு?
     செவிப்பறையை (Ear-Drum) உட்காதோடு இணைக்கும் எலும்புகள்
[வெளிக்காதின் செவிக்குழாய் வழியாக பயணித்து செவிப்பறையை அடைந்த ஒலி , உட்காதிற்கு கடத்தப்படவேண்டும். அதற்கு , வெளிக்காதும் உட்காதும் இணைக்கப்படவேண்டும். அந்த இணைப்பை ஏற்படுத்தவே , சுத்தி - பட்டடை - அங்கவடி போன்ற எலும்புகள் உள்ளன.]


3098. வெளிக்காதில் உள்ள செவிக்குழாயின் பெயர்?
     Out Express Canal

3099. நடுக்காதை , தொண்டையோடு இணைக்கும் குழாய்?
     யூஸ்டிக் குழாய்

3100. மனித உடலிலேயே மிகச்சிறிய எலும்பு?
    அங்கவடி (Stapes)

கருத்துகள்