முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (311)

3101. உட்காதில் உள்ள நத்தை சுருள் போன்ற அமைப்புக்கு என்ன பெயர்?
     காக்ளியா

3102. வெஸ்டிபுலோகோக்லியர் நரம்பு எனப்படுவது?
     வெளிப்புற காது ஒலியைப் பெறுகிறது. நடுத்தர காதுகளின் சவ்வு வழியாக உள் காதுக்கு அது அனுப்பப்படுகிறது. அங்கு அது காக்ளியாவில் ஒரு நரம்பு சமிக்ஞையாக மாற்றப்பட்டு வெஸ்டிபுலோகோக்ளியர் நரம்பு வழியாக பரவுகிறது.

3103. காது மெழுகு எனப்படுவது?
     காது அழுக்கு என்று நாம் சொல்வது உண்மையிலே காது மெழுகு (Ear wax) தான். இது கெடுதல் செய்யாத மெழுகு. உண்மையிலே நன்மை செய்யும். மெழுகினை சுரக்கும் சுரப்பிகள் ,செவிக்குழாயின் படலத்தில் (வெளிச்செவி தொடங்கி செவிப்பறை நீளும்) உள்ளன.பிறப்பதற்கு முன்பிருந்தே இவை வேலை செய்ய ஆரம்பித்து விடும்.

3104. காது மெழுகின் பெயர்?
     செருமன் (Cerumen)
[ Cera என்றால் மெழுகு என பொருளாம். சுட்ட களிமண்ணால் செய்யப்பட்டவற்றை Ceramic பொருட்கள் என்பர். ]


3105. மாபெரும் காதுகளை உடைய விலங்கு?
    ஆப்ரிக்க யானை


3106. Citizen என்பது யார்?
     தனது பிறப்பால் ஒரு நாட்டில் குடியுரிமை பெற்றவர் /  ஒரு குறிப்பிட்ட நாட்கள் ஒரு நாட்டில் வாழ்ந்து குடியுரிமை பெற்றவர் / ஒரு நாட்டில் எல்லா உரிமைகளும் சுதந்திரமும் உடைய நபர்

3107. Expatriate என்பது யார்?
     தன் நாட்டை விட்டு புலம் பெயர்ந்த நபர்

3108. Repatriate என்பது யார்?
     நாடு கடத்தப்பட்டு பின்னர் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படும் நபர் [மீனவர்களை, எல்லை தாண்டிவிட்டார்கள் என சிறைப்பிடித்து, பின் மீண்டும் அனுப்பிவைக்கும் வழமை அண்டைவீட்டார்களிடம் உள்ளதல்லவா....!?]

3109. Immigrant என்பது யார்?
     தனது சொந்த நாட்டில் அல்லாது வெளிநாட்டில் குடியுரிமையுடன் குடிபெயர்ந்தவர்

3110. Refugee என்பது யார்?
    இன , மொழி , நிற , தேச , அரசியல் கருத்துகளால் நாட்டை விட்டு வெளியேற்றப்படும் நபர்

கருத்துகள்