முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (312)

3111. சாக்குக்கணவாய் எனப்படுவது?
     எண்காலி (Octopus)

3112. எண்காலிக்கு எத்தனை இதயங்கள்?
     மூன்று
[இருந்தது ஓர் இதயம்! அதையும் உன்னிடம் பறி கொடுத்துவிட்டேனே என புளங்காகிதம் இன்றி புலம்பும் நம் இளைஞர்கள், எண்காலிகளாக பிறந்தால் சற்று தணிவார்கள். ]


3113. எண்காலியின் இரத்த நிறம்?
     நீலம்
[நம் இரத்தம் சிவப்பாக இருக்க காரணம் , ஹீமோகுளோபின் நிறமி என அறிவோம். அதுபோல, எண்காலியின் நீல இரத்தத்திற்கு காரணமான நிறமி , ஹீமோசயனின் ஆகும்.]


3114. உலகின் மிகப்பெரிய எண்காலி?
     தி ஜெயின்ட் பசிபிக் ஆக்டோபஸ் என்று அழைக்கப்படும் எண்காலியின் உயரம் 16 அடி ஆகும். இதன் எடை 50 கிலோ ஆகும். இதுவே உலகின் மிகப்பெரிய எண்காலி என்று கருதப்படுகிறது.

3115. உலகின் மிகச்சிறிய எண்காலி?
    ஆக்டோபஸ் ஒல்பி என்று அழைக்கப்படும் எண்காலி ஒரு அடிக்கு கீழ் உயரமும் ஒரு கிராமுக்குக் கீழ் எடையும் கொண்டதாகும். இதுவே உலகின் மிகச்சிறிய எண்காலியாகும்.
[எண்காலிகள் , மிகவும் கொடூரமானவை. அவற்றில் பல விசத்தன்மை உடையவை. ஆயினும் , நம் சிறுவயதில் பெரும்பாலானோர் அறிந்த ஒரு எண்காலி உண்டு. அன்பின் அடையாளமாய் சிரித்த முகம் கொண்ட அந்த நீல எண்காலியை மறக்குமா நெஞ்சம்? Oswald! https://youtu.be/2ErHP-qAWjk ]


3116. ஆக்டோபஸ் - பெயர்க்காரணம்?
     Octopus = Octo + Pus. Octo என்றால் எட்டு. Pus என்றால் பாதம். எட்டுப் பாதத்தான் என்பதையே Octopus என்கிறோம்.

3117. பிளாட்டிபஸ் - பெயர்க்காரணம்?
     Platypus எனும் வாத்தலகியை நாம் அறிவோம். அதன் கால்கள் தட்டையாக வாத்தைப் போல் இருக்கும். Platy என்றால் தட்டையான என பொருள். Pus என்றால் பாதம் தான் ! தட்டையான பாதத்தான் தான் நம் வாத்தலகி.

3118. சொறி மீன் எனப்படுவது?
     ஜெல்லி மீன் / நுங்கு மீன்

3119. பைசாலியா பைசாலிஸ் என்பது?
     பொருட்களை எடுத்துச் செல்லும் பை போல , சற்றே பார்ப்பதற்கு எண்காலி போன்ற அமைப்பில் கொடிய வலிதரும் விசத்துடன் வாழும் கடல் உயிரினம் தான் , பைசாலியா.
[பைசாலியா.... முகநூலில் எப்போதாவது , "எனக்கு பெண்பிள்ளை பிறந்துள்ளது... பை-யில் ஆரம்பிக்கும் பெயரைக் கூறுங்கள்" என கேட்பர். பார்த்துக்கொள்ளலாம்.]


3120. பைசாலிஸ் எனப்படும் தாவரம் எது?
    பைசாலிஸ், பையைக் குறிக்கிறது எனக் கண்டோம். கூடுதக்காளி / பிள்ளை தக்காளி எனப்படும் தாவரமே பைசாலிஸ் என அறியப்படுகிறது.

கருத்துகள்