முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (313)

3121. அடவி என்றால் என்ன பொருள்?
     காடு / மிகுந்த கூட்டம்

3122. அடவிகன் என்றால் என்ன பொருள்?
     காட்டுவாசி

3123. பழனம் என்றால் என்ன பொருள்?
     விளைச்சல் நிலம்

3124. சுவல் என்றால் என்ன பொருள்?
     தோள் / கழுத்து

3125. நேமி என்றால் என்ன பொருள்?
    சக்கரம்

3126. கைக்கடிகார உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் நாடு?
     சுவிட்சர்லாந்து

3127. சுவிட்சர்லாந்து, கைக்கடிகாரங்கள் உற்பத்தியில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்னர் , அதில் சிறந்து விளங்கிய நாடு?
     ஐக்கிய பேரரசு (UK) [சுவிட்சர்லாந்தின் கைக்கடிகார உற்பத்திக்கு முந்தைய 300 வருடங்களில் , பிரிட்டிஷ் தான் கைக்கடிகார உற்பத்தியில் கொடிகட்டி பறந்ததாம்!]

3128. கால்வினியம் (Calvinism) என்றால் என்ன?
     ஐக்கிய பேரரசு, கைக்கடிகார உற்பத்தியில் கொடிகட்டி பறக்கும் தருணத்தில் பெரும் மதப்பிளவு ஒன்று ஏற்பட்டது. ஐரோப்பாவில் அதிகமாயிருந்த மதம் கத்தோலிக்க கிறித்தவம். அதிலிருந்து முரண்பட்டு பிரிந்து வந்ததுதான் சீர்திருத்த திருச்சபைகள் (Protestant). அவ்வாறு பிரிந்து வந்த புது அமைப்பு, சுவிட்சர்லாந்திலும் பரவியது. அந்த அமைப்பிலொரு பாதிரியாராகயிருந்த ஜான் கால்வின் , ப்ரொடஸ்டன்ட் மக்கள் நகை அணிவதற்கும் , உயர் விலைமதிப்புடைய உடை அணிவதற்கும் தேவ புறம்பான காரியங்களென தடைவிதித்தார். இவரது இந்த கொள்கைகளே , கால்வினியம் எனப்படுகின்றன.

3129. சுவிட்சர்லாந்து , கைக்கடிகார உற்பத்தியில் முதன்முதலில் ஈடுபட காரணம்?
     பிரான்ஸில் , கத்தோலிக்கர்களுக்கும் ப்ரொடஸ்டன்ட் அமைப்பினருக்கும் மோதல்கள் நடைபெற, ஒரு குறிப்பிட்ட பிரெஞ்சு ப்ரொடஸ்டன்ட் மக்கள் மட்டும் சுவிட்சர்லாந்தில் அகதிகளாக குடியேறினர். அவர்கள் , கைக்கடிகார உற்பத்தியில் ஜகஜால கில்லாடிகள். அவர்களால் , பல்கி பெருகியது சுவிட்சர்லாந்தின் கைக்கடிகார உற்பத்தி!

3130. கடிகாரம் - பெயர்க்காரணம்?
    கடிகாரம் = கடிகை + ஆரம். கடிகை என்றால் நாழிகை என்பதோடு 'நேரம்' என்ற பொதுப் பொருள். ஆரம் என்றால் வளைய அமைப்பு. நேரத்தைக் காட்டும் வளைய அமைப்புதான், கடியாரம் --> கடிகாரம் [மணிப்பொறி , பொழுதுபொறி போன்றவை கடிகாரத்தின் வேறு பெயர்கள்]

கருத்துகள்