முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (314)

3131. பொள்ளாச்சி - பெயர்க்காரணம்?
     இயற்கை அழகுடன் ஆட்சி செய்யும் பொழிலாட்சி என்ற பெயர் தான் பொள்ளாச்சி என்று மருவி போனது. [பொழில் என்றால் இயற்கை அழகு என பொருள்.]

3132. ஆற்காடு - பெயர்க்காரணம்?
     அத்தி மாலை அணிந்த சோழ மன்னர்களின் ஆண்ட நிலப்பகுதியை ஆற்காடு என்று அழைத்தனர் என்றும், ஆல் -ஆலமரம் நிறைந்த பகுதியால் ஆற்காடு என்று அழைத்தனர் என்றும் சொல்லப்படுகிறது.

3133. சேலம் - பெயர்க்காரணம்?
     மலைகள் நிறைந்த இப்பகுதியை சைலம் என்று அழைத்தனர்.அதுவே பின்னாளில் சேலம் என்றானது. மேலும் இப்பகுதி சேரநாட்டின் ஒரு பகுதியாக இருந்ததால் சேரலம் என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் சேலம் ஆனது என்றும் ஒரு சிலர் கூறுவர்.

3134. தஞ்சாவூர் - பெயர்க்காரணம்?
     எட்டாம் நூற்றாண்டில் தனஞ்செய முத்தரையர் என்ற அரசரின் பெயரில் தனஞ்செய்யூர் என்ற ஊர் உருவாக்கப்பட்டது. பின்னாளில் அதுவே தஞ்சாவூர் என மாறி போனது. தஞ்சை என்னும் சொல்லுக்கு வளமான குளிர்ந்த வயல்கள் உள்ள பகுதி என்ற பொருளும் உண்டு.

3135. ஈரோடு - பெயர்க்காரணம்?
    பெரும்பள்ளம் மற்றும் பிச்சைக்காரன் பள்ளம் ஆகிய இரு ஓடைகளுக்கு நடுவே உள்ள ஊர் என்பதால் இதை ஈரோடை என்று அழைத்துள்ளனர். பின்னாளில் அதுவே ஈரோடு ஆனது.

3136. கரடி எந்த பேரினத்தோடு வகைப்படுத்தப்பட்டுள்ளது?
     Caniformia என்ற பேரினம்
[இது நாய்களின் குடும்பம். பார்ப்பதற்கு சற்று நாயை ஒத்து காணப்படுவதாலும் , நாயை போலவே குரைக்கும் தன்மை பெற்றிருப்பதாலும் இங்ஙனம்.]


3137. Plantigrade என்றால் என்ன?
     ஒரு தாவரம் எப்படி செங்குத்தாக நிற்கிறதோ , அதே போல, செங்குத்தாக நின்று மனிதனை போல நடக்கும் திறன்
[நான்கு கால்களில் அல்லாமல் , இரண்டு கால்களால் எழுந்து நடக்கும் திறன். இது ஒரு சில குரங்குகளையடுத்து , கரடிக்கு கை (கால்) வந்த கலை. இப்படி நடப்பதால் தான் , இந்த உயிரினங்களுக்கு முதுகுவலி போன்ற சில உபாதைகள் வந்ததென , யுவல் நோவா ஹராரி என்ற ஆய்வர் தனது சேப்பியன்ஸ் எனும் புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.]


3138. கரடிகள் தேனை அதிகமாக விரும்பி உண்பவை. அப்படி தேன் கூடுகளை சீண்டும் போது தேனீக்கள் கொட்டுவதில்லையா?
     கரடியின் உரோம வலிமையை , தேனீக்களின் கொடுக்குகளால் ஈடுகொடுக்க முடியாது. கரடியின் முகத்தில் உரோமங்கள் இல்லாததால் , தேனீக்கள் கொட்டினால் வலி தாங்க முடியாமல் தலைதெறிக்க ஓடும். ஆனால் மீண்டும் வந்து தேனை எடுக்க முயற்சிக்குமாம்.

3139. Teddy Bear எனப்படும் கரடி பொம்மை பிரபலமாக காரணம்?
     அந்நாளில் அமெரிக்க அதிபராகயிருந்த தியோடோர் ரூஸ்வெல்ட், ஒரு கரடி வேட்டைக்காரர். ஒருமுறை அவரோடு வேட்டைக்கு சென்றிருந்த அனைவரும் ஆளுக்கொரு கரடியை வேட்டையாடியுள்ளனர். ஆனால், தியோடர் ரூஸ்வெல்ட் மட்டும் எந்த கரடியையும் வேட்டையாடவில்லையாம். ஆகவே , அவரோடு இருந்தவர்கள் ஒரு கரடியை பிடித்து , அதை சுடுமாறு கேட்டுள்ளனர். அவரோ , வேண்டாம் என்று கூறி வீடு திரும்பியுள்ளார். இதை கேலி செய்து சில ஓவியர்கள் நாளிதழ்களில் வரைந்துள்ளனர். தியோடர் ரூஸ்வெல்டை செல்லமாக நாளிதழ்களில் டெட்டி என அழைப்பார்களாம். வரையப்பட்ட கேலி ஓவியத்தில் இருந்த கரடி பொம்மையை போலவே கடைகளில் பொம்மைகளை செய்து Teddy's Bear என பெயரிட்டு விற்பனை செய்ய, அதுவே மிகவும் பிரபலமாகி நாளடைவில் Teddy Bear எனவாகியுள்ளது.

3140. கரடி - பெயர்க்காரணம்?
    கருநிறத்தை காரணம் கொண்டு இடப்பட்ட பெயர் என்றும் , கரடு எனப்படும் சிறு குன்று போல் இருப்பதால் இடப்பட்ட காரண‌ப்பெயர் என்றும் கூறுவதுண்டு.

கருத்துகள்