முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (315)

3141. உலகில் மொத்தம் எத்தனை வகை கரடிகள் உள்ளன?
     எட்டே எட்டு தான்

3142. ரஷ்யாவின் தேசிய விலங்கு?
     கரடி

3143. கரடிகளின் நீண்ட கால உறக்கம் எவ்வாறு அறியப்படுகிறது?
     அறிதுயில் (Hibernation)

3144. கரடிகளின் அறிதுயில் , எந்த காலத்தில் நடைபெறும்?
     குளிர்காலம் (Winter)

3145. அறிதுயில் நிலை எத்தகையது?
    கரடிகள் பல நாட்கள் தூங்கிக்கொண்டேயிருக்கும். பனிக்காலம் முடியும் வரை எதையும் அவ்வளவாக உண்ணாமல், பெரும் உபவாசம் ஒன்றை கடைபிடிக்கும்.
[Boonie Bears என்றும் , தமிழில் வருத்தப்படாத கரடி சங்கம் என்றும் அறியப்படும் சீன சித்திரத்தின் தொடக்கப்பாடல் வரிகள் , Hibernation is over now.... (அறிதுயில் காலம் முடிந்தாயிற்று....) எனுமாறு வரும்... https://youtu.be/eBVC7KwiJ1I ]


3146. தென்னிந்தியாவின் மான்செஸ்டர்?
     கோயம்புத்தூர்

3147. வட இந்தியாவின் மான்செஸ்டர்?
     கான்பூர்

3148. இந்தியாவின் மான்செஸ்டர்?
     மும்பை
[மான்செஸ்டர் என்பது இங்கிலாந்தில் உள்ள மாபெரும் பருத்தி துணி மற்றும் கம்பளி உற்பத்தி நகராகும்.]


3149. WiFi - தமிழாக்கம்?
     அருகலை


3150. Hotspot - தமிழாக்கம்?
    பகிரலை

கருத்துகள்