முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (318)

3171. கேரட் சாப்பிட்டால் கண் பார்வை அதிகரிக்குமா?
     இது இரண்டாம் உலகப்போர் காலத்தில் பிரிட்டிஷ் விமானப்படையினரால் இருட்டில் உருவான உருட்டு!  ரேடார் தொழில்நுட்பம் மூலமாக எதிரணியை இருட்டிலும் கச்சிதமாக கண்டு தாக்கிய பிரிட்டிஷார் , மற்றவர்கள் தாங்கள் பயன்படுத்தும் நுட்பத்தை அறிந்துவிடக் கூடாதென , "நாங்கள் கேரட் சாப்பிட்டதால் தான் இருட்டில் கண்பார்வை அதிகரித்து ஜெர்மானியர்களை எதிர்கொண்டோம்!" என்று போட்டார்களே ஒரு போடு! அதன் தாக்கம் இன்று வரை நம்மிடத்தில்.... ஆனால் , கேரட் சாப்பிட்டால் கண்ணை பாதுகாக்கும் நுண்சத்துக்கள் சேருவது உண்மை தான்! "அதீத பார்வைக்கு கேரட் தான்" என்பது ஏற்புடையதல்ல...

3172. கை ரேகையை மாற்ற‌ முடியுமா?
     குழந்தைகள் பிறப்பதற்கு மூன்று‌ மாதங்களுக்கு முன்பே தீர்மானிக்கப்படும் கைரேகைகள் , காலத்திற்கும் மாறாதவை! ஜான் ஹெர்பர்ட் எனும் மிகப்பெரிய அமெரிக்க கொள்ளைக்காரன் , காவல் அதிகாரிகளிடமிருந்து தப்பிக்க , கைரேகையை கொண்டுதான் கண்டுபிடிக்கிறார்கள் என்று, நெருப்பில் காட்டுதல் , அமிலத்தை ஊற்றுதல் என அதீத கைரேகை அழிப்பு நுட்பத்தில் இறங்கினான். ஒருமுறை அழிந்ததும் அடுத்த முறை அதே கைரேகை சற்றும் மாறாமல் தோன்றக்கண்டு திகைத்துப்போனான்.

3173. கையில் உள்ள ரேகையை முற்றிலும் நீக்கும் நோய்?
     அடர்மடோகிலிஃபியா (Adermatoglyphia)

3174. வலிப்பு வந்தவர்களின் கையில் சாவியை கொடுத்தால் வலிப்பு சரியாகிவிடுமா?                 கொடுக்கவில்லையென்றாலும் சற்று நேரத்தில் தானாகவே சரியாகிவிடும்! காலம் காலமாக சினிமாவை பார்த்து வாழ்க்கையை புரியும் பழக்கம் நம் மக்களிடையே வேரூன்றியுள்ளது! சாவி கொடுக்க சென்ற‌ சூரியவம்சம் சரத்குமாரின் கதியை பார்த்தீர்களல்லவா....?

3175. மனிதனை போலவே கைரேகை உடைய விலங்கு?
     கோலா கரடி

3176. சூரியன் சரியாக கிழக்கில் தான் உதிக்கிறதா?
     இல்லை! சூரியனை‌ உதிக்கும்போது உற்றுநோக்கினால் முதல் நாள் ஓர் இடத்திலும் அடுத்த நாள் இன்னோர் இடத்திலுமாக மாறி மாறி உதிக்கும்... எனவே , சூரியன் உதிக்கும் புள்ளி, வடகிழக்கிலிருந்து தென்கிழக்கு வரை எந்த புள்ளியில் வேண்டுமானாலும் அமையலாம்.... சூரியன் தள்ளி சென்றுதான் தினமும் உதிக்கிறது... ஆணி அறைந்தார் போல ஓரிடத்தில் உதிப்பதில்லை.

3177. அதிகபட்ச வடகிழக்கிலிருந்து அதிகபட்ச தென்கிழக்கு புள்ளிக்கு சூரியன் செல்வது?
     தெட்சணாயனம்

3178. அதிகபட்ச தென்கிழக்கிலிருந்து அதிகபட்ச வடகிழக்கு புள்ளிக்கு சூரியன் செல்வது?
     உத்திராயணம்

3179. அதிகபட்ச வடகிழக்கு அல்லது அதிகபட்ச தென்கிழக்கு  புள்ளியை சூரியன் தொடும் நிலை?
     சங்கராந்தி (Solstice)

3180. சங்கராந்தியின் வகைகள்?
     மகர சங்கராந்தி (Summer Solstice)
     கடக சங்கராந்தி (Winter Solstice)

கருத்துகள்