முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (320)

3191. பகலாடி என்றால் என்ன?
     பகலாடி (Diurnal creature) என்பது பகலில் உணவு தேடி இரவில் உறங்கும் உயிரினம்.

3192. இரவாடி என்றால் என்ன?
     இரவாடுதல் (Nocturnality) என்பது இரவு வேளையில் சுறுசுறுப்பாக இயங்கி, பகலில் உறங்கும் ஒரு விலங்குப் பண்பினைக் குறிக்கும். இத்தகைய பண்புடைய விலங்குகள் இரவாடிகள் எனப்படும்.
[ஆந்தை இத்தகையது. காதலும் இவ்வண்ணம் தான் என தனது "வசந்த முல்லை போலே வந்து" பாடலில் கவிஞர் நா.முத்துகுமார் கூறியிருப்பார்.
        "காதல் என்பது ஆந்தைய போலே
        நைட்டு முழுவதும் முழிக்கும்
        கம்பன் வீட்டு நாயை போலே
        கவிதையா அது குரைக்கும்"]


3193. இலங்கையின் பெரிய நகரம்?
     கொழும்பு

3194. இலங்கையின் தேசிய மரம்?
     நாகமரம் (Ironwood)

3195. இலங்கையின் தேசிய பறவை?
     காட்டுக்கோழி (Jungle Fowl)

3196. கால்குலேட்டரை கண்டுபிடித்தவர்?
     பாஸ்கல்

3197. அரிசி நாடு என்று அழைக்கப்படுவது?
     தாய்லாந்து

3198. குளிர்பானங்களில் பயன்படுத்தப்படும் அமிலம்?
     பாஸ்பாரிக் அமிலம்

3199. OPPO Mobiles நிறுவனம் எந்த நாட்டினது?
     சீனா

3200. இந்தியாவின் முதல் பல்கலைக்கழகம்?
     நாளந்தா

கருத்துகள்