முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (321)

3201. மாலை - பெயர்க்காரணம்?
     மால் என்றால் கருமை என பொருள். கருநிறத்தில் அந்திப்பொழுது அமைவதால் மாலை என பெயர்பெற்றது.

3202. கருணைக்கிழங்கு - பெயர்க்காரணம்?
     கரடுமுரடாக ஒழுங்கற்ற வடிவில் உள்ள இந்த கிழங்கு , கரணைகிழங்கு என்றே வழங்கப்பட்டது. கரடு எனப்படும் மேடு எப்படி கரடிக்கு பெயர் வழங்கலாயிற்றோ, அவ்வண்ணமே கரணைகிழங்கும் பெயர்பெறலானது. [கரணை = காய்கறிகளின் மேற்பகுதியில் காணப்படும் சீரற்ற முண்டு முடிச்சு.]

3203. பாரி வள்ளலின் மகள்கள்?
     அங்கவை மற்றும் சங்கவை
[இந்த பெயர்களை கேட்டாலே நமக்கு திரைப்பட நியாபகம் வந்து, நகைக்கும் எண்ணம் வரக்கூடும். இன்றோடு அவ்வெண்ணம் ஒழியட்டும். சங்க இலக்கியங்களில் மிக அழகான தமிழ்ப் பெண்கள் என இவர்கள் குறிப்பிடப்படுகிறார்கள். "தமிழ் பெண்கள் அழகானவர்கள்" என்பது அந்த திரைப்படத்தை இயக்கியவருக்கு பிடிக்காமல் போக பின்புலம்..... தெரியவில்லை! அதை தமிழில் தேறிய சாலமன் பாப்பையா வாயால் கூறச்செய்ததும் புரியவில்லை. ஆனால் , அறிந்தோ அறியாமலோ அவர் செய்திருக்கலாம் என வைத்துக்கொண்டு , இனி சங்கமகளிரை ஏளனிக்கும் எண்ணத்தை விட்டுவிடுவோம்!]


3204. பாரியின் உயிர் நண்பரான புலவர்?
     கபிலர்

3205. பாரி மன்னன் ஆண்ட நிலம்?
     வேள்பாரி பறம்பு மலையை தலைமை இடமாய் கொண்டு ஆட்சி செய்த குறுநில மன்னர் ஆவார். கடைச்சங்கக் காலத்தைச் சார்ந்தவர். பாரி பறம்பு மலையையும் அதனைச் சூழ்ந்த பகுதிகளையும் ஆண்டவர். பறம்புநாடு முந்நூறு (300) ஊர்களைக் கொண்டதாகும். பறம்புமலை, பிறம்பு மலை என்றாகி இப்பொழுது 'பிரான்மலை' என்று அழைக்கப்படுகிறது.

3206. வட்டமான சுற்றுப்பாதை உடைய கிரகம்?
     வெள்ளி

3207. இந்தியாவில் முதல் மின்சார இரயில் ஓடிய நகரம்?
     மும்பை (1925)

3208. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிற்கு அவ்வாறு பெயர் வரக் காரணம்?
     மாஸ்கோ என்ற நதி பாய்வதால் அதே பெயரை அந்த இடத்திற்கும் வைத்தனர்.

3209. உலகில் வாழும் பறவைகளில் இரண்டாவது பெரிய பறவை?
     ஈமு கோழி
[முதலிடத்தில் இருப்பது நெருப்புக்கோழி. ரியா என்று அறியப்படும் பெரும் பறவை ஒன்றும் இந்த வகைகளில் உண்டு.]


3210. உலகில் உள்ள குருவிகளில் மிகவும் வேகமாக பறக்கும் குருவி?
     ஸ்விஃப்ட் (Swift) - ஊர்க்குருவி
[SWIFT என்றால் வேகமான என்று பொருள்படும் சொல்லே ஆங்கிலத்தில் உண்டு. Journey 2 : The Mysterious Island என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் விநோத தீவைக் குறித்த புதிர்களை கண்டறியும் போது Fast என்பதன் வேறு சொற்களை கூறி அதில் Swift-ஐ தேர்வு செய்து புதிரை அவிழ்ப்பர்.  https://youtu.be/nUdu4fmnQDc ]

கருத்துகள்