முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (322)

3211. துளசியின் (Basil) அறிவியல் பெயர்?
     ஆசிமம் (Ocimum)
[துளசி, ஆசிமம் மட்டுமல்ல... ஓர் ஆசிர்வாதமும் தான் ! மழைக்காலங்களில் சளி , இருமல் போன்ற உபாதைகள் தோன்றும். அதே மழைக்காலங்களில் தான் , துளசியும் தோன்றும். அற்புதமான துளசி கசாயம் , சளி-இருமலை இல்லை என விரட்டும். மாதம் ஒரு முறை குடிப்பது சிறப்பு. ஆண்கள் அநேகமுறை இதை குடிப்பதை தவிர்க்கவேண்டும்.]

3212. மாலலங்கல் எனப்படும் தாவரம்?
     துளசியே! மாலலங்கல் = மால் + அலங்கல். அலங்கல் என்றால் பூமாலை. பெருமாளுக்கு அலங்கலாக துளசியை பயன்படுத்தும் வழக்கம் உண்டு. ஆண்டாள் நாச்சியார் கண்டறியப்பட்டதும் துளசி தோப்புக்கு ஊடேதான் என குறிப்பிடப்படுவது அறியத்தக்கது.

3213. துழாய் எனப்படும் தாவரம்?
     துளசி - துளவு - துழாய் என அனைத்தும் ஒரே தாவரத்தையே குறிக்கின்றன. துழாய் மாலையான் என தொடங்குகின்றன நாலாயிரத்திவ்ய பிரபந்த வரிகள். 

["துழாய் அலங்கல் - பொருள் தருக." என்பது TNPSC வினா.]

3214. பேய் துளசி என்றால்.....?
     மருந்தாக பயன்படும் காட்டுத்துளசிதான் , பே(ய்)த்துளசி என்றும் அழைக்கப்படுகிறது.
[எந்த தாவரங்கள் அதீத மருத்துவ தன்மை உடையவனவாக உள்ளனவோ , அவை எல்லாம் பேயோடு கோர்க்கப்பட்டு பெயரிடப்பட்டு ஒதுக்கி வைக்கப்படுகின்றன. உதாரணமாக , நித்திய கல்யாணி (vinca herbaceae) எனப்படும் தாவரத்திலுள்ள ஊட்டங்கள் , புற்றுநோய்க்கு எதிராக செயல்படுபவை. அந்நிய நாட்டவர்கள் இந்த தாவரங்களை நம் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்து , கட்டுப்படுத்தும் மருந்துகளை உருவாக்கி , பின் நம்மிடமே கொணர்ந்து விற்றுத்தள்ளுவர். நம்மூரில் நித்தியகல்யாணிக்கு பெயர் , சுடுகாட்டு மல்லி மற்றும் காக்காட்டம்பூ! அற்புதமான துளசிக்கு , அற்பத்தனமான பேய்த்துளசி என பெயர்.]


3215. துளசிச்செடி , ஓசோனை வெளியிட்டு ஓசோன்‌ மண்டலத்தின் தடிமனை அதிகரிக்கிறதா?
     மெய்யாகவே மெய்யாகவே "இல்லை!‌" பழக்கவழக்கங்கள் அனைத்தையும் அறிவியலோடு பின்ன எண்ணுவதென்பது , ஏற்புடையது அன்று. ஓசோன் என்பது ஒரு நிலையற்ற வாயு (Unstable Gas). இதை , எந்த தாவரத்தாலும் உமிழ இயலாது. அது இப்படி! இது அப்படி! என்று பிறர் கூறுவதை ஆவென கேட்பதை விட , எது எப்படியோ அதை அப்படி உணர நாம் விழையாமல் இருப்பதுதான் , நமக்கு பிறர் காதுகுத்து நடத்தி காசு சுரண்டுவதற்கு காரணம். "மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் கூறுவதிலோர் மகிமை இல்லை" என்பது பாரதியாரின் வரிகள்.


3216. இனிப்பு துளசியின் (Sweet Basil) அறிவியல் பெயர்?
     ஆசிமம் பேசிலிக்கம் (Ocimum basilicum)
[Basil எனும் துளசியின் ஆங்கில பெயர் தான் அதன் அறிவியல் பெயரிலும் உள்ளது. இனிப்பு துளசிதான் இயல்பான துளசி.]


3217. புனித துளசியின் (Holy Basil) அறிவியல் பெயர்?
     ஆசிமம் சாங்க்டம் (Ocimum sanctum)
[Sanctum Sanctorum என்பது பொதுவாக கோயிலின் கருவறையைக் குறிக்கும் சொல். இதுவே இங்கு Sanctum எனுமாறு உள்ளது. இது புனிதத்திலும் புனிதமானது (Holy of Holies) என்று பொருள்படும் இலத்தீன் வாக்கிய மருவல். பைபிளிலும் அரவணைப்புக் கூடாரம் (Tabernacle) குறித்த விளக்கத்தில் கருவறை அமைப்பு விளக்கப்பட்டுள்ளது.]

3218. துளசி எந்த தாவரத்தின் குடும்பத்தை சேர்ந்தது?
     புதினா குடும்பம் (Mint Family)
[புதினா எப்படி நகர்ப்புறத்தாரின் Mouth Refreshment-ஓ.... அவ்வண்ணமே , துளசி கிராமத்தார்தம் Mouth Refreshment!]


3219. துளசியின் ஆங்கில பெயராகிய Basil-ன் மூலப்பொருள்?
     Basil என்பது வாசமுள்ளது என பொருள்படும் இலத்தீன் சொல்லின் வழித்தோன்றலாம். வார்த்தைகள் திரிவது ஒரு குறிப்பிட்ட முறைமையில் தான்.... வகரம் எப்போதும் பகரமாக திரியும். உதாரணமாக , கோவம் எனும் சொல் கோபம் என்றானது. அப்படியென்றால் , ப்அசில் (Basil) எப்படி இருந்திருக்கும்? வ்அசில் (வாசில்) என வைத்தோம் என்றால் , அந்த சொல்லில் வாசம் எனும் சொல் தோன்ற காண்கிறோம். துளசியென்றாலே வாசம் தானே.....

3220. பச்சை மற்றும்  கரும்பச்சை நிற துளசிகளின் பெயர்கள்?
     பச்சை துளசி - ஸ்ரீதுளசி
     கரும்பச்சை துளசி - கிருஷ்ண துளசி

கருத்துகள்