முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (323)

3221. துவசம் - பொருள்?
     கொடி

3222. சேவற்றிரு துவசம் - இதன் பொருள்?
     சேவல் இருக்கும் துவசம் (சேவல் கொடி)

3223. துவேசம் - பொருள்?
     பகை

3224. தோள் , தோசை முதலிய சொற்களில் தோ என்ற முன்னோட்டு இருக்க காரணம்?
     தோள் , தோசை முதலிய சொற்களில் உள்ள தோ எனும் எழுத்துக்கு , இரண்டு என பொருள். இரண்டு தோள்களை நாம் கொண்டுள்ளோம். இரண்டு பக்கங்களை தோசை கொண்டுள்ளது.

3225. தமிழகத்தின் பருத்தி நகரம்?
     கோயம்புத்தூர்  

3226. பூனைக் குடும்பத்தின் மிகப்பெரிய விலங்கு?
     புலி

3227. பூனைக் குடும்பத்தின் இரண்டாவது மிகப்பெரிய விலங்கு?
     சிங்கம்

3228. சிங்கம் , Single-ஆ தான் வருமா?
     இல்லை! 16 முதல் 40 என்ற எண்ணிக்கையில் கூட்டம் கூட்டமாகவேதான் வரும். இது ஒரு மிகப்பெரிய சமூகவிலங்கு (Social Animal). அதாவது , கூடி வாழும் பழக்கம் உடையது. சிங்கம் & Single - இரண்டும் ஒலியியைபு (Rhyming) கொண்டுள்ளதால்தான் அப்படியொரு வசனம்.

3229. ஆண் மற்றும் பெண் சிங்கங்கள் கூடி வாழும் கூட்டத்துக்கு பெயர்?
     Tribe

3230. ஆண் சிங்கங்கள் மட்டுமே வாழும் கூட்டத்துக்கு பெயர்?
     Coalition

கருத்துகள்