முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (324)

3231. Tsavo Lions எனப்படும் சிங்கங்கள் எத்தகையவை?
     ட்சாவோ கூட்டத்தில் ஒரே ஓர் ஆண் சிங்கம் மட்டும் தான். ஏனையவர்கள் எல்லாம் பெண் சிங்கங்கள்.

3232. பெண் சிங்கங்களுக்கு பிடறி வளருமா?
     சில பெண் சிங்கங்களுக்கு , டெஸ்டோஸ்டிரோன் மிகுதியால் ஆண் சிங்கங்களுக்கு உள்ளதை போல , பிடரி மயிர் வளரும். அத்தகைய சிங்கங்கள், ஆண் சிங்கத்தின் இயல்புகளை கொண்டுள்ளன.

3233. வயப்புலி மற்றும் மறப்புலி எனப்படுவது?
     சிங்கம்

3234. ஆனனம் என்றால் என்ன பொருள்?
     முகம்

3235. அஞ்சானனம் / ஐயானனம் / பஞ்சானனம் - எனப்படுவது?
     சிங்கம்

3236. சிங்கத்தின் அறிவியல் பெயர்?
     panthera leo

3237. புலியின் அறிவியல் பெயர்?
     panthera tigris
[பொதுவாக சிங்கத்தைக் காட்டின் அரசன் எனக் கூறுகின்றனர். எனினும் வரலாற்றில் புலிக்கும் சிங்கத்திற்கும் இடையிலான போர்களில் புலியே பெருமளவில் வெற்றி பெற்றுள்ளது. அண்மையில் அங்கோரா விலங்குப் பூங்காவில் ஒரு புலி ஒரே அடியில் சிங்கத்தைக் கொன்றுவிட்டது. இது 2011 மார்ச்சில் நிகழ்ந்தது. ஆனால் தொன்மங்கள் அனைத்திலும் சிங்கமே அதிகம் வல்லமை உடையதாய் காட்டப்படுகின்றது. மூவேந்தர் கொடிகளில் சிங்கம் இல்லை. 12 ராசிகளில் சிங்கம் உண்டு. அதுவும் லியோன் ராசியா.... இல்லை புலியோன் ராசியா என ஐயம் தான்....]


3238. இலத்தீன் மொழியில் panthera என்றால் என்ன பொருள்?
     உறுமும் பூனை
[Pink Panther என பெயர் வைத்துகொண்டு வாழ்நாளில் ஒருமுறை கூட உறுமவே உறுமாத பூனையை எத்தனை பேர் அறிவீர்கள்? https://youtu.be/59lKdaXX6Eo]

3239. அரிமா என்றால் என்ன பொருள்?
     சிங்கம்

3240. சிங்கம் தற்காலத்தில் எங்கு மட்டுமே வாழ்கிறது?
     ஆப்ரிக்கா மற்றும் இந்தியக்காடுகள்

கருத்துகள்