முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (325)

3241. ரூபிள் (Ruble) நாணயமுறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?
     ரஷ்யா

3242. இந்தியா - பாகிஸ்தான் எல்லை கோட்டை வகுத்தவர்?
     ரெட் க்ளிஃப்
[பெயர்ல Clip இருக்குறதுனாலதான் ரெண்டு நாட்டையும் க்ளிப் க்ளிப்பா வகுந்துட்டாருபோல...]


3243. தென்னிந்தியாவில் புலிகள் அதிகமாக காணப்படும் இடம்?
     சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்
[ சத்தியமங்கலத்தில் இன்னுமொரு புலி ஒன்று முறுக்கிய மீசையோடு துப்பாக்கி ஏந்தி வலம் வந்தது.... வீரப்பன்... மக்கள் தொலைக்காட்சியில் வீரப்பன் குறித்த சந்தனக்காடு தொடரின் தொடக்கபாடல் வரிகளில் ,
      "கண்ணான தேசத்துல காவேரி ஓரத்துல காட்டுச் சிங்கம் பொறந்ததடி....
     மீச்சங்கொட்டு மீசவச்சி வீரத்தையே நெஞ்சில் வச்சி வரிப்புலி வளந்ததடி...."
என்ற வரிகள், "வீரப்பனை வீரப்பன்தான்" என பறைசாற்றும்! https://youtu.be/mCX00-VVJ5M ]


3244. பாகிஸ்தானோடு அதிக எல்லையை பகிர்ந்துள்ள மாநிலம்?
     இராஜஸ்தான்
[ இரண்டும் ஸ்தான்-ஸ்தான் என்றுதான் முடிகின்றன... பாகிஸ்தான்! இராஜஸ்தான்! ஸ்தான் என்றால் நாடு என பொருள்.... பாகிஸ்தான் ஒரு நாடு தான்! எனவே , அங்கு ஸ்தான் இருப்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.... இராஜஸ்தான் ஒரு மாநிலமாயிற்றே.... அங்கே ஏன் ஸ்தான்? பிரதேசம் என்றாலும் நாடு என்றுதான் பொருள். உத்திரபிரதேசம், இமாச்சலப் பிரதேசம் , அருணாச்சலப் பிரதேசம் போன்றவையெல்லாம் நாடுகளா?????? பின்னர் ஏன் ஸ்தான் - பிரதேசம் என்றெல்லாம்.....? இதையெல்லாம் கேள்வி கேட்க ஆண்டவன் தான் வரவேண்டும் என எண்ணும் நாட்டில்.... தமிழ்நாடு என்று வைத்தால் மட்டும்...... ]


3245. தேர்தலின்போது விரல்களில் தேய்க்கப்படும் மை எதில் தயாரிக்கப்படுகிறது?
     சில்வர் நைட்ரேட்

3246. உகிர் - என்றால் என்ன பொருள்?
     நகம்

3247. "இதெல்லாம் காயலாங்கடைலதான் போடணும்" - இதில் காயலாங்கடை என்றால்?
     தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள காயல்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர்களே, அக்காலத்தில் பழைய இரும்பு மற்றும் பழைய சாமான்களை வாங்கி விற்பனை செய்யும் மறுசுழற்சி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இத்தகையத் தொழிலில் பெரும்பாலும் இவ்வூர்க்காரர்களே ஈடுபட்டுச் சிறந்து விளங்கினர். தமிழகமெங்கும் பரந்து விரவியிருந்த காயல்பட்டினத்துக் காரர்கள் காயலூரான், காயலான் - போன்ற பொதுப் பெயர்களால் அழைக்கப் பட்டனர். இதன் காரணமாகவே - அவர்களின் கடைக்கு காயலான் + கடை = காயலாங்கடை என்று பெயர் வந்தது.

3248. அவரைக்காய் - பெயர்க்காரணம்?
     அவரைக்காய் என்றால் தட்டையான (சப்பையான) காய் என்று பொருள். அரிசியை இடித்து தட்டையாக்கினால் கிடைப்பது அவல். தட்டையாக இடிக்கப்பட்ட அரிசியான 'அவல்' என்ற பெயரும், தட்டையான காய் வகையான 'அவரை' என்ற பெயரும் ஒரே பொருள் குறித்த, ஒத்த மூலத்திலிருந்து பிறந்தவையே.

3249. மண் மற்றும் மணல் - பெயர்க்காரணம்?
     மண் என்பது மள் எனும் சொல்லின் மருவல். மள் என்பது நிலத்தைக் குறிக்கும் சொல். தமிழர்களிடம் ஆதியில் சாதிமுறை என்பது அவர்தம் தொழிலை பொறுத்தே அமைந்திருந்தது. அவ்வண்ணம், மண்ணை உழுது வேளாண்மை புரிந்தவர்கள் மள்ளர்கள் எனப்பட்டனர். இன்று அது சற்று வேறுமாதிரி திரிந்துள்ளது. மள் என்பதே மண் ஆனது. மேலும் மண்டுதல் என்றால் சேருதல் என பொருள். மண் என்பது திடகாத்திரமாக பிணைந்து நிற்கும் தரை தான் ! மணல் = மண் + அல் (அல்லாதது). மணல் என்றால் எது மண் இல்லையோ , அதுவே....! அதாவது ஒன்றோடொன்று சேராமல் துகள்களாக விரிந்து கிடப்பது‌.
[வானத்தை போல திரைப்படத்தில் , வேலையாளாக வரும் விஜய்காந்திடம் , "இதில் எத்தனை மண் உள்ளது என எண்ணிசொல்" என பணிப்பர். அவரும் , 12169 மண் உள்ளது என விறைப்பாக கூறுவார். இதில், மண் என்பது பல மணல் துகள்கள் சேர்ந்திருப்பது என அறியவேண்டும். மண்ணை எண்ண முடியாது. மணலாக இருந்தால் அதிலுள்ள துகள்களை எண்ணுவதற்கு 0.002% வாய்ப்பு உள்ளது. அதனால் தான் , பைபிளில் பல இடங்களில், மிகுதியான ஒன்று கடற்கரை மணலின் அளவோடு ஒப்பிடப்பட்டிருக்கும்‌.]


3250. விமானம் தயாரிக்க அதிகம் தேவைப்படும் பொருள்?
     கோபால்ட்

கருத்துகள்