முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Search in You!


 One day, a gecko was meandering in the wall. ஒரு நாள், ஒரு பல்லி (Gecko) சுவற்றில் அலைந்துகொண்டிருந்தது (Meandering).

It forfeited its tail while vaulting. அது, குதிக்கையில் (Vaulting) அதன் வாலை இழந்தது (Forefeited).
 
 
The gecko approached a dog, beseeching to endow its tail to it. பல்லி, ஒரு நாயை அணுகி, அதன் வாலை தனக்கு வழங்குமாறு (Endow) கெஞ்சியது (Beseeched).
 

The dog replied, "My tail shall forever be inclined. If you assimilate it, you risk a perilous descent." நாய், “என் வால் எப்போதும் வளைந்திருக்கும் (Inclined). அதை நீ மாட்டிக்கொண்டால் (Assimilate), அபாயகரமாக (Perilous) விழநேரிடும்.” என பதிலளித்தது.
 

The gecko approached an orangutan, requesting its tail. The orangutan responded, "We are devoid of tails, by nature's design." பல்லி ஒரு கானரனை (Orangutan) அணுகி, அதன் வாலை தருமாறு வேண்டியது. கானரனோ, “இயற்கையாகவே நாங்கள் வாலற்றவர்கள் (Devoid of Tails)” என பதிலளித்தது.
 

The gecko then implored a tortoise for its tail. The tortoise, concealing its appendage within its shell, uttered, "I am devoid of a tail." பல்லி, ஒரு கல்லியிடம் அதனது வாலை தருமாறு கேட்டது (Implored : To Request Something). கல்லியோ, அதனது வாலை (Appendage) அதன் ஓட்டினுள் மறைத்துக்கொண்டு (Concealing), “நான் வாலற்றவன் (Devoid of A Tail)” என மொழிந்தது.
 

The gecko sought out a peacock, entreating for its tail. The peacock, adorned in vibrant plumage, declined, "My tail is an emblem of pride, not for others to possess." பல்லி, ஒரு சிகியை தேடிச்சென்று (Sought Out) அதனது வாலை வேண்டிக்கேட்டது (Entreating). பளிச்சென்ற இறகுகளால் (Plumage) அலங்கரிக்கப்பட்டிருந்த (Adorned) சிகியோ, “என் வால் பெருமையின் சின்னம் (Emblem of Pride)! அது பிறருக்கல்ல!” என மறுத்தது.


The gecko, eyeing a crocodile's tail, inquired if it could acquire it. The crocodile, with a toothy grin, clarified that its tail is indispensable for powerful swimming and ambush hunting and refused. ஒரு கடுவின் வாலினை பார்த்து அதை, தான் பெறமுடியுமா என விசாரித்தது பல்லி. கடு, பற்கள் தெரிய சிரித்து (With a toothy grin), வலுத்த நீச்சலுக்கும், பாய்ந்து வேட்டையாடுவதற்கும் (Ambush Hunting) தனது வால் இன்றியமையாதது (Indispensable) என விளக்கி தர மறுத்தது.
 

Approaching an elephant, the gecko entreated for its tail, but the elephant declined, explaining that its tail serves as a crucial tool for swatting away bothersome insects. ஒரு கரியை அணுகி, அதன் வாலை தருமாறு கேட்டது பல்லி. ஆனால், கரியோ மறுத்து, தொல்லைதரும் (Bothersome) பூச்சிகளை விரட்டி துரத்துவதற்கு (Swatting Away) முக்கியமான ஒன்று தன் வால் தான் என விளக்கியது.


The gecko earnestly sought the chameleon's tail. The chameleon astutely adapted its hue to seamlessly blend with the surroundings, beguiling the gecko. தீவிரமாக (Earnestly), ஒரு கோம்பியின் வாலை கேட்டுச்சென்றது பல்லி. கோம்பி, புத்திசாலித்தனமாக (Astutely), தனது நிறத்தை சுற்றுச்சூழலுக்கு பொருந்துமாறு அச்சுஅசலாக மாற்றி, பல்லியை ஏமாற்றியது (Beguiling).


The gecko approached a loris, imploring for its tail. The loris, with languor, took a full hour to articulate a refusal. பல்லி, ஒரு தேவாங்கை (Loris) அணுகி, அதன் வாலை கேட்டது (Imploring). சோம்பேறித்தனமாக (With Languor), ஒரு மணிநேரங்கழித்து, மறுப்பை தெரிவித்தது (Articulated) தேவாங்கு.


The gecko commenced shedding tears, forlorn, as its appeal for a tail remained refused by all. வாலுக்கான விண்ணப்பம் (Appeal) பலராலும் மறுக்கப்பட்டுக் கொண்டேயிருந்ததால், பல்லி தனிமையாக (Forlorn) கண்ணீர் வடிக்க ஆரம்பித்தது (Commenced).


Unexpectedly, the comrade gecko approached and inquired about the reason behind its companion's tears. எதிர்பாராதவிதமாக, பல்லியின் தோழன் அதை அணுகி, கண்ணீருக்கு பின்னாலான காரணம் வினவியது.

 

Upon learning the cause, the ally gecko urged its friend to avert its gaze. To the gecko's astonishment, it discovered that its tail had regenerated. காரணம் அறிந்ததும், பல்லி நண்பன் (Ally Gecko) அதனது நண்பனை அதன் பார்வையை திருப்புமாறு (Avert) வற்புறுத்தியது. பல்லி, அதனை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விதமாக, அதன் வால் மீண்டும் வளர்ந்திருக்கக் கண்டது.


The gecko rejoiced and comprehended that solutions need not be sought externally when they may reside within. பல்லி மகிழ்ச்சி கொண்டதோடு, தீர்வுகள் தம்முள் இருக்கையில் புறத்தே தேடக்கூடாது என புரிந்துகொண்டது.

கருத்துகள்