முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (326)

3251. கைவிடப்பட்ட பெண்களுக்காக டாக்டர்.முத்துலெட்சுமி அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இல்லம்?
     அவ்வை இல்லம்

3252. கல்யாணதீர்த்தம் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள இடம்?
     திருநெல்வேலி

3253. திருமூர்த்தி நீர்வீழ்ச்சி அமைந்துள்ள இடம்?
     திருப்பூர்

3254. பாபநாசம் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள இடம்?
     திருநெல்வேலி

3255. குற்றாலம் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள இடம்?
     தென்காசி

3256. இந்திய பெருங்கடலின் பழைய பெயர்?
     எரித்திரேயன் கடல் (Erythraean Sea)
[திரை என்றாலே கடல் என்றுதான் பொருள். துறை என்றாலும் அதுவே ! தெண்டிரை என்பதும் கடல்தான்... எரித்திரேயன் என்ற வார்த்தையிலும் திரையை காணலாம். எரி + திரை => எரித்திரேயன். எரி என்றால் நெருப்பு என பொருள். திரை என்றால் கடல் என பொருள். செங்கடல் என்ற பெரும் கடல் பகுதி, இந்திய பெருங்கடலில் உள்ளதை காணலாம். அதன் பொருட்டுக்கூட எரித்திரேயன் என பெயர் பெற்றிருக்கலாம்‌.]


3257. அரலை மற்றும் நரலை என்ற சொற்களுக்கு என்ன பொருள்?
     கடல் [அரி என்றாலும் கடல் என பொருளுண்டு.]

3258. மெரினா கடற்கரை என பெயர் வரக் காரணம்?
     மெரினா என்பதற்கு இத்தாலிய மொழியில் "கடல் பக்கம்" என்று பொருள். கடல் பக்கம் என்பதைக் குறிக்கவே மெரினா கடற்கரை என்று பெயரிடப்பட்டது. இது மொத்தம் 13 கி.மீ. நீளமுடைய உலகிலேயே இரண்டாவது நீளமான கடற்கரை.

3259. அசைவ உணவுகள் ஏன் புலால் என அழைக்கப்படுகின்றன?
     புல்லுணவு என்றால் சைவ உணவு. புலால் என்றால் புல் (தாவரம்) அல்லாத உணவு. அதாவது, அசைவம்.

3260. கடல்களின் அரசி எனப்படும் கடல்?
     பசுபிக் பெருங்கடல் [கடல்களின் அரசி எனப்படும் நாடு, இங்கிலாந்து.]

கருத்துகள்