முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (327)

3261. பிப்ரவரி மாதம் எவ்வாறு அவ்வாறு பெயர்பெற்றது?
    ரோமானிய கடவுள் பிப்பிரசிடமிருந்து இம்மாதம் தனது பெயரை பெற்றுள்ளது. பிப்பிரவரி என்பது "சுத்தப்படுத்தல்" என்னும் இலத்தீன் மொழிச் சொல்லில் இருந்து பிறந்ததாகும்.

3262. வருடத்தின் சிறிய மாதம்?
     பிப்ரவரி
[ஒரு வருடம் நெட்டாண்டா இல்லையா என தீர்மானிப்பதே பிப்ரவரி தான்!]


3263. நெட்டாண்டு (Leap Year) என்றால் என்ன?
     பிப்ரவரி மாதத்தில் 28 நாட்களுக்குப் பதில் 29 நாட்கள் வரும் ஆண்டு. நான்கு வருடங்களுக்கு ஒருமுறை மட்டும் இந்த ஆண்டு வரும்.
[லீப் ஆண்டில் 29ம் நாள் பிப்ரவரி இல் பிறப்பவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறையே பிறந்த நாள் வரும். முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் பிப்ரவரி 29ல் பிறந்தவர்.]


3264. ஏன் பிப்ரவரி மாதத்தில் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை மட்டும் 29 நாட்கள்?
     ஓர் ஆண்டு என்பது சூரியனை பூமி சுற்றிவரும் காலமாகும். பூமி சூரியனை சுற்றிவர 365 1/4 நாட்கள் ஆகிறது. அப்போது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு நாள் கூடுதலாகிறது. ஆகவே ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு நாள் கூடுதலாகும். லீப் ஆண்டு என்பது 366 நாட்கள் கொண்ட ஆண்டாகும். இந்த கூடுதல் ஒரு நாளை பிப்ரவரியில் சேர்த்து லீப் ஆண்டில் அம்மாதம் 29 நாட்கள் இருக்கும்படியும் கணக்கிட்டுள்ளனர்.

3265. சர்க்கரை ஆலைகளில் சர்க்கரையை தூய்மைப்படுத்த உபயோகிப்பது?
     சல்பர் டை ஆக்சைடு

3266. இந்தியாவின் இரயில் போக்குவரத்து எந்த இரு நகரங்களுக்கிடையே தொடங்கப்பட்டது?
    மும்பை முதல் தானே வரை

3267. இந்தியாவின் முதல் மெட்ரோ இரயில் போக்குவரத்து எங்கு தொடங்கப்பட்டது?
     கொல்கத்தா

3268. இந்தியாவின் முதல் மின்சார இரயில் போக்குவரத்து எந்த இரு நகரங்களுக்கிடையே தொடங்கப்பட்டது?
    பம்பாய் முதல் குர்லா துறைமுகம் வரை

3269. வெறும் இசையை மட்டுமே தேசிய கீதமாக கொண்ட நாடு?
     பஹ்ரைன்

3270. தமிழ்நாட்டில் முதன்முதலில் நடமாடும் அஞ்சலகம் எங்கு தொடங்கப்பட்டது?
     சென்னை

கருத்துகள்