முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (328)

3271. Ambidextrous என்றால் என்ன?
    இடக்கை மற்றும் வலக்கை என இரு கைகளையும் நன்றாக பயன்படுத்தும் இயல்பு (Able to use both the hands equally well) [உன்னைப் போல் ஒருவன் திரைப்படத்தில், வெடிகுண்டு வைத்துள்ளதாக காவல்துறை அதிகாரியை (மோகன்லால்) கமல்ஹாசன் மிரட்டிட, காவல்துறையினர்  பல கட்ட ஆய்வுகளை மேற்கொண்டு , கமல்ஹாசன் இடது கையால் எழுதும் பழக்கம் உடையவர் என கண்டறிய , நான் இரு கையாலும் எழுதுபவன் என கமல்ஹாசன் கூறி , காந்தியடிகளும் அப்படிதான் என கூறுவார்.]

3272. Ambivert என்றால் என்ன?
     மனிதர்களில் Extrovert‌ மற்றும் Introvert என இரண்டு வகைகள் உண்டு. Extrovert-ஆக இருப்பவர்கள் , மிகவும் வெளிப்படையாக பேசுபவர்கள். எதையும் எளிதில் வெளிப்படுத்துபவர்கள் (அளவான வாயாடிகள் எனலாம்)‌. ஆனால், Introvert ஆனவர்கள், தனக்கொன்று தெரிந்தும் தெரியாதது போல் இருப்பவர்கள். தன் இருப்பை அதிகம் வெளிக்காட்ட விரும்பாதவர்கள் (இருக்க இடம் தெரியாம இருக்க நினைப்பவர்கள்). இந்த இரண்டு பண்புகளையும் ஒருங்கே பெற்றவர்களே Ambiverts!

3273. Ambi என்றால் ஆங்கிலத்தில் என்ன பொருள்?
    இரண்டையுமே குறிப்பது என பொருள் [Ambi என்பதை , αம்பி என வாசிக்கவேண்டும்.]

3274. இந்தியாவின் எந்த மாநில அரசு , வேலையில்லா இளைஞர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது?
     சத்தீஸ்கர்

3275. "பாரதிதாசன் பெயரை உரைத்திட பாட்டு பிறக்குமடா" என பாடியவர்?
     வாணிதாசன்

3276. கவுளி (கெவுளி) பெயர்க்காரணம்?
    கவ்வு + உளி = கவுளி. பூச்சிகளை கவ்வி உண்பது என பொருள்படுகிறது. கவுளி பூச்சி புழுக்களைக் கௌவித் தின்கிறது. அதற்கு பல் இல்லை. கவ்வி உள் இழுத்துக்கொள்கிறது. கவ்வும் முன், நாக்கை நீட்டுகிறது என்றாலும், ஒரு சொல்லுக்குள் எல்லாச் செயல்களையும் படம்பிடித்தமாதிரி வர்ணிக்கத் தேவையில்லை.

3277. தமிழ்நாட்டில் பங்குச்சந்தை (Share Market) எங்குள்ளது?
     சென்னை

3278. பங்குச்சந்தையில் குறிப்பிடப்படும் விலங்குகள்?
    கரடி மற்றும் காளை

3279. பங்குச்சந்தையில் கரடி எதை குறிக்கிறது?
     விலை வீழ்ச்சி

3280. பங்குச்சந்தையில் காளை எதை குறிக்கிறது?
     விலை உயர்வு

கருத்துகள்