முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (329)

3281. பவளப்பாறைகள் (Coral Reefs) என்பவை?
    பவளம் என்பது உண்மையில் ஒரு விலங்கினம் (Animalia). இதனால் சுரக்கப்படும் கால்சியம் கார்பனேட் தான் பவளப்பாறை.

3282. பவளப்பாறைகளின் முக்கியத்துவம்?
     புயல் தாக்கத்திலிருந்து கடற்கரைகளை காப்பாற்ற பவளப்பாறைகளை விட்டால் வேறாருமில்லை. கடலுக்குள் ஓர் ஆலமரம் எனலாம் பவளப்பாறைகளை.... எண்ணற்ற உயிரினங்களுக்கு இருப்பிட அடைக்கலமாக பவளப்பாறைகள் உள்ளன. மீன்பிடி தொழிலுக்கு பவளப்பாறைகள் அவசியம். ஏனெனில் பலதரப்பட்ட மீன்கள் பவளப்பாறைகளூடேதான் முட்டையிடுகின்றன‌. நுண் ஊட்டச்சத்து உருவாக்கத்தில் பவளங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. [அறிவியலால் நிரூபித்த பின்னரும் சில பிற்போக்கு பிதற்றல்வாதிகள், "பவளப்பாறைகள் எப்படியடா புயலை தடுக்கும்?" என்கின்றனர். தெர்மாகோல் ஆற்றுநீர் ஆவியாவதை தடுக்கும் அதிசயம் அரங்கேறும்போது, பவளப்பாறைகள் புயலை தடுப்பதில் ஒன்றும் தவறில்லையே...]

3283. கடலில் மீன்கள் எங்கு பரவலாக வாழ்கின்றன?
    கடலில் வாழும் மீன்கள் மட்டுமல்ல... வீட்டில் நாம் வளர்க்கும் வண்ண மீன்களுக்கும், ஆழமான நீர்வசதியை விட , ஆழமற்ற அகன்ற நீர்வசதிதான் உகந்தது. இது எங்கள் பதினொன்றாம் வகுப்பு விலங்கியல் புத்தகத்தில் படித்தது. அவ்விதம், கடல் மீன்களும் ஆழமான கடற்பகுதியை அதிகம் விரும்புவதில்லை. கடற்கரைகளில், அதுவும் பவளப்பாறைகள் செறிந்திருக்கும் இடங்களில்தான் மீன்கள் பல்கி பெருகுகின்றன.

3284. பவளப்பாறைகள் எவ்வாறு அழிகின்றன?
     மனித(பத)ர்கள் செய்யும் அட்டூழியத்தால் மட்டும் தான் 99.99% பவளப்பாறைகள் அழிகின்றன. நெகிழிகளை கடலில் போடுவது , வேதிக் குப்பைகளை கடலில் கொட்டுவது , எண்ணெய்யை கடலில் கசியவிடுவது, வெடிவைத்து மீன்பிடிப்பது, கண்ட மண்ணாங்கட்டி காரணத்திற்காக, கண்ட மண்ணாங்கட்டிகளை கொண்டு கடலில் கொட்ட எண்ணுவது என நீளுகிறது மனிதனின் இயற்கை சுரண்டல்களும் அத்துமீறல்களும்....
[அறிவியல் அறிஞர்கள் மிகவும் அச்சத்துடன் கூறுவதாவது , "பவளப்பாறைகள் இல்லையேல் ஏறக்குறைய பேரழிவு தான்". இதனாலேயே , செயற்கையாக ஆய்வகத்தில் பவளங்களை உண்டாக்கி கடலில் விடுகின்றனர்‌. இதன் முக்கியத்துவம் யாருக்கும் புரிந்தபாடில்லை.]


3285. கன்னியாகுமரி கடலினுள் உள்ள வள்ளுவர் சிலை அமைக்கும்போது பவளப்பாறைகள் பாதிக்கப்பட்டனவா?
     முக்கடல் சந்திக்கும் குமரி முனையில் , இயற்கையாக அமையப்பெற்ற பாறையின் மீதே வள்ளுவர் சிலை அமைக்கப்பட்டது.

3286. " கடல்களின் மழைக்காடுகள்" எனப்படுபவை?
    பவளப்பாறைகள்
[Coral reefs are some of the most precious habitat in the ocean - which has earned them the nickname "rainforests of the sea." They're a complicated ecosystem where thousands of species are supported by some of the smallest of all - corals.]

3287. பொலிப் (Polyp) எனப்படும் உயிரினங்கள் யாவை?
     பொலிப் உயிரினங்கள் மென்மையான மற்றும் ஒளி ஊடுருவும் தன்மையுடைய உயிரினமாகும். ஆயிரக்கணக்கான பொலிப் உயிரினங்கள் ஒன்று சேர்வதாலேயே பவளப்பாறைகள் உருவாகின்றன. இவை கடல் நீரிலிருந்து பெற்றுக்கொள்ளும் கால்சியம் ஆனது கல்சியம் கார்பனேட் ஆக மாறுவதால் அவை கற்பாறைகள் மீது ஒட்டிக் கொண்டு பவளப் பாறைகளாக மாறுகின்றன.

3288. பொலிப் என்றால் மருத்துவத்தில் என்ன பொருள்?
    வழக்கத்திற்கு மாறாக உடலினுள் வளரும் திசு.

3289. ஓதம் என்றால் என்ன?
     ஓதம் (Tide) என்பது நிலவு, சூரியன் போன்ற விண்வெளி பொருட்களால் கடலில் உள்ள நீர்மட்டம் உயர்வதையும் தாழ்வதையும் குறிக்கும்.

3290. கழி ஓதம் மற்றும் கடல் ஓதம் என்பவை?
     கழி ஓதம் அல்லது உயர் ஓதம் - High Tide : கழிமுகத்தை நோக்கி வருவதால் இது கழி ஒதம். இக்கழி ஓதத்தின் போது கடல்நீர் மட்டத்தின் உயரம் நிலத்தின் உயரத்தை விட அதிகமாக இருக்கும். இதனால் நிலத்தினுள் கடல் நீர் வரும். கடல் ஓதம் அல்லது தாழ் ஓதம் - Low Tide : கடலை நோக்கி கடல் நீர் செல்வதால் இது கடல் ஒதம். இக்கடல் ஓதத்தின் போது கடல்நீர் மட்டத்தின் உயரம் நிலத்தின் உயரத்தை விட குறைவாக இருக்கும். இதனால் கடல் உள் வாங்கும்.

கருத்துகள்