முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (330)

3291. தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் அதிக பனைகள் உள்ளன?
    தூத்துக்குடி
[இந்தியா முழுவதும் 8 கோடி என்ற எண்ணிக்கையில் பனைகள் உள்ளதாக புள்ளிவிவரம் கூறுகிறது. அதில் , 4.5 கோடி பனைகள் தமிழகத்தில் தான் உள்ளன.]


3292. பூக்கள் மட்டும் பூத்து காயாத பனை?
     ஆண் பனை

3293. கள்ளும் பதநீரும் எந்த பனையிலிருந்து அதிகம் பெறப்படுகின்றன?
    ஆண் பனை
[பெண் பனையின் பாலையை சீவி விட்டால் அதிகமாக பனை விளைச்சல் பாதிக்கப்படும்.]


3294. பனை மரத்தின் குடும்பம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
     அரிகேசியே (Arecaceae)
[பனைமர குடும்பத்தில் தான் , தென்னை , பாக்கு , ஈச்சை , ஈந்து போன்ற மரங்கள் வரும்.]

3295. பனைமரம் ஒரு புல் வகை என வகைப்படுத்திய தமிழ் புலவர்?
     தொல்காப்பியர்

3296. கறங்குதல் என்றால் என்ன?
    சுழலுதல் [சிறுவயதில் பனை ஓலையில் காற்றாடி செய்து கருவைக்காட்டிற்குள் ஓடி அதை சுற்ற வைத்து மகிழ்ந்தவர்கள் நாம். அந்த பனை ஓலை காற்றாடியை கறங்கு என்றுதான் கூறுவதுண்டு. நெல்லையில் நம் பேச்சில் , தலைச்சுற்று என்பதை குறிக்க , "கெறங்கிட்டு" என்ற வழக்குச்சொல் உண்டு. ஆங்கிலத்தில் Ring என்ற சொல்லும் சுற்றினை குறிக்கிறது. அதை கறங்கோடு ஒப்பிட்டு பார்த்தால் தமிழ் மூலம் கறங்குதானோ என தோணுகிறது. சுழலும் ரங்கராட்டினத்திலும் கறங்குதலின் தாக்கம் உள்ளது‌.]

3297. தொத்தா என்றால் என்ன பொருள்?
     சித்தி
[தொத்தா = தொற்று + தா ---> தொற்றி வந்த தாய். தாயை தொடுத்து பின்னே வந்த தாய்; சிற்றி / சித்தி / சிற்றாய்.]


3298. இந்தியாவின் நூலக தந்தை?
    ஆர்.அரங்கநாதன்

3299. தமிழ் கவிஞர்களின் இளவரசன் எனப்படுபவர்?
     திருத்தக்கதேவர்

3300. அழுது அடியடைந்த அன்பர் எனப்படுபவர்?
     மாணிக்கவாசகர்

கருத்துகள்