முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (334)

3331. உலகிலேயே மிக அதிகளவு கதிரியக்க தன்மை (Radioactive) உடைய தனிமம்?
    ரேடியம்
[யுரேனியத்தை விட இரண்டு மில்லியன் அளவு கதிரியக்க தன்மை உடையது.]


3332. மின்னும் தன்மையுடைய பொருட்கள் எதனால் உண்டாக்கப்பட்டன?
     ரேடியம்
[இருட்டில் மின்னும் பொருட்களை ஒருகாலத்தில் ரேடியம் பயன்படுத்தி தான் உருவாக்கியுள்ளனர். அதன் அதி தீவிர கதிரியக்க தன்மையின் காரணத்தால் அதனை பயன்படுத்தும் வழக்கம் குறைந்துள்ளது.]


3333. ரேடியத்தை முதன்முதலில் கண்டுபிடித்தவர்கள்?
     மேரி கியூரி மற்றும் அவரது கணவர் பியூரி கியூரி
[யுரேனியத்தை தாதுவிலிருத்து பிரித்த பின்னரும் தாது மின்னிக்கொண்டிருப்பதை கண்டு வியந்து தாதுவை ஆராயும்போது ரேடியத்தை முதன்முதலாக கண்டுபிடித்தனர். அதுபோக, அதே தாதுவில் பொலோனியம் என்ற ஒரு தனிமத்தையும் கண்டுபிடித்தனர். மேரி கியூரியின் தாய் நாடான போலந்தின் நினைவாக பொலோனியம் என பெயர் வைத்தனர். ரேடியமும் பொலோனியமும் ஒருசேர கண்டறியப்பட்ட சகோதரர்கள்/சகோதரிகள்.]


3334. ரேடியம் புற்றுநோய் சிகிச்சையில் உதவுமா?
     அக்காலத்தில் இதை பயன்படுத்தி சிகிச்சை அளித்துள்ளனர். அதன் பின்னர் , பல உயிர் இழப்புகளுக்கு பின் , ரேடியம் தான் புற்றுநோயை தோற்றுவிக்கிறது என அறிந்து அதனை அறவே புறந்தள்ளினர்.

3335. ரேடியம் எவ்வாறு ஒளிர்கிறது?
     ரேடியம் சிதைந்து அதிலுள்ள கதிரியக்கம் வெளிப்படுவதே ஒளிர்வதுபோல் தெரிகிறது.

3336. பனை மரத்தின் அறிவியல் பெயர்?
    போரஸஸ் ஃப்ளாபளிஃபர் (Borassus Flabeliffer)
[இலத்தீன் மொழியில் அப்படியென்றால் "உச்சியிலுள்ள விசிறி" என பொருள். பனை ஓலைகள் விசிறி வடிவை ஒத்துள்ளவை.]


3337. கரும்புறம் என்றால் என்ன?
     பனை [கரும்பை மட்டும் அறிந்த நாம் கரும்புறத்தையும் அறிவோம்.]

3338. கள் விளையாட்டி / கள் நொடை ஆட்டியர் என்றால் என்ன பொருள்?
     பனையில் கிடைக்கும் கள்ளை , சங்ககாலத்தில் பெண்களும் விற்பனை செய்துள்ளனர். அவர்கள் தான் இவ்வாறெல்லாம் அறியப்படுகின்றனர்.

3339. பனைமர பாளையிலிருந்து கிடைக்கும் திரவம் எவ்வாறு கள்ளாக மாறுகிறது?
     பனையில் தொங்கவிடப்படும் கலயத்தில் (சிறு பானை) சொட்டு சொட்டாக பனை அமுதம் சேகரமாகிறது‌. நேரம் ஆக ஆக அதில் நுரைத்தல் (Fermentation) நடைபெறுகிறது. இதுவே அதில் போதை தன்மை ஊட்டி கள்ளாக மாற்றுகிறது. நாள்பட்ட கள்ளாக இருந்தால் அதன் சுவையே புளித்துவிடும். ஆனால் போதை மட்டும் மிக அதிகரித்து காணப்படும்.

3340. பனை மரத்தின் பின் எழுந்த மத அரசியல் என்ன?
     பனை வளர்த்தலை ஒரு சிவத்தொண்டாக சைவர்கள் பின்பற்றினர். வைணவர்களும் போற்றி வழிமொழிந்தனர். இடைக்காலத்தவர்களால் , "பனை ஏறுவது தீட்டு" என்றும் "அது நான்காம் தரத்தவர் மட்டுமே செய்யும் தொழில்" என்றும் கற்பிக்கப்பட , அதனை வாழ்வாதாரமாக கொண்ட மக்கள் பெரும் பாதிப்பு அடைந்தனர். மேலும், பனையினால் அரசுக்கு வரும் வருமானம் குறையாமலிருக்க , பனை ஏறுவதற்கும் பனை சார்ந்த எந்த ஒரு செயலுக்கும் வரி கட்ட வேண்டும் என மக்களை கசக்கி நெறுக்கினர்.

“பனை கேட்டு அடிப்பான் பதநீர் கேட்டே அடிப்பான்
கனத்த கற்கண்டு கருப்புக்கட்டி கேட்டடிப்பான்
நாரு வட்டி ஓலை நாடோறும் கேட்டடிப்பான்
வாதுக்கு நொங்கு வாய் கொண்டு கேட்டடிப்பான்
நெடுமட்டை கேட்பான் நெட்டோலைதான் கேட்பான்
குளம் வெட்டச் சொல்லி கூலி கொடுக்காமல்
களம் பெரிய சான்றோரை கைக்குட்டை போட்டடிப்பான்...”

கருத்துகள்