முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (335)


3341. பத்திரம் என்றால் என்ன?
    பனை ஓலை 
[வடமொழியில் பத்திரம் என்றால் பனை ஓலை என பொருள் என , தொ.பரமசிவம் என்ற பெருந்தமிழ் ஆய்வர் தனது  தெய்வம் என்பதோர் என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.]

3342. பனங்கிழங்கை பச்சையாக காயவைத்து உலர்த்தி பதப்படுத்தினால் அக்கிழங்கு எவ்வாறு அழைக்கப்படும்?
     ஒடியல் 

3343. பனங்கிழங்கை அவித்து காயவைத்து உலர்த்தி பதப்படுத்தினால் அக்கிழங்கு எவ்வாறு அழைக்கப்படும்?
     புழுக்கொடியல் 

3344. கடலில் மூழ்கி முத்தெடுத்தல் எங்கு சிறப்பாக செய்யப்படுகிறது?
     மன்னார் வளைகுடா 

3345. இந்தியாவின் முதல் ஜாக்லேட் அருங்காட்சியகம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
     தமிழ்நாடு 


3346. புழுங்கலரிசி - பெயர்க்காரணம்?
    புழுங்கல் என்றால் அவியுதல் என பொருள். குறிப்பாக திருநெல்வேலியில், வியர்ப்பதையே "புழுங்குது" என்றுதான் சொல்வோம். அவித்த நெல்லில் கிடைக்கும் அரிசி தான் புழுங்கலரிசி. 
[நேற்று, பச்சையாக காயவைத்து பதபடுத்திய பனங்கிழங்கை ஒடியல் என்றும் அவித்து காயவைத்து பதப்படுத்திய பனங்கிழங்கை புழுக்கொடியல் என்றும் அறிந்தோம். எனது அண்ணன் ஒருவரால் புழுங்கலரிசியின் பெயர்க்காரணத்தை அறிந்து அதன்மூலம் புழுக்கொடியலையும் அறியமுடிந்தது. தமிழை சுவாசிக்கும் வட்டாரத்தில் என் மூச்சுக்காற்று உள்ளதை எண்ணி பேருவகை அடைகிறேன்.]

3347. அகமுனி எனப்படுபவர்?
     அகத்தியர் 

3348. அரியல் என்றால் என்ன?
     கள் 
[கள் ஒரு பழந்தமிழ் போதை பானம் ! ஆயினும் அதுவும் போதை பானம் தான் ! மற்ற போதை பானங்களை போலவே , அளவுக்கு மிஞ்சினால் மத்திய நரம்பு மண்டலம் பாதிக்கப்படும் ! அது இதயத்து நல்லது என்ற எழுதப்படாத மருத்துவ அறிக்கைக்கு இடமில்லை. போதைதான் பல குடும்பங்களை வேரில்லா மரங்களாக்குகிறது என அறிந்த வள்ளுவ பேராசான், "கள்ளுண்ணாமை" எனும் அதிகாரத்தையே தந்துள்ளார்.]

3349. "வாழ்த்துகள் - வாழ்த்துக்கள்" : 'க்' வருமா? வராதா?
     வராது.... வாழ்த்துகள் என்பதே சரி ! 
[வாழ்த்துகள் என்பதே சரியானது. வாழ்த்துக்கள் என்று கூறினால் அது கள்ளினை குறிப்பதாகிவிடும்‌. ("க்" போட்டால் "கிக்கு" ஏறும்... )]

3350. நிலை மின்சாரம் (Static Electricity) எவ்வாறு உருவாகிறது?
     மின்னோட்டம் என்பது பொருளில் உள்ள இலத்திரன்களின் (Electrons) ஓட்டம். மின்சாரத்தை கடத்தாத காப்பான் (Insulators) பிரிதொரு காப்பானோடோ அல்லது கடத்தியோடோ (Conductor) உராயப்படும்போது அப்பொருட்களில் உராய்வு ஏற்படும் பகுதியில் மட்டும் இலத்திரன்கள் சற்று அங்கே இங்கே ஓடி மின்சாரத்தை தோற்றுவிக்கின்றன. இந்த மின்சாரம், நிலை மின்சாரம் எனப்படும். 
[ஐந்து நாட்களுக்கு முன்னர் இரவு தூங்கும்போது எதேச்சையாக விழிப்பு தட்ட, கையை போர்வையின் மீது கொண்டுவரும்போது மின்பொறி (Spark) எழும்புவதை கண்டேன். அதில் சர்ர் என சத்தம் வேறு... மீண்டும் மீண்டும் போர்வையின் மீது உரசி கையை அதன் மீது கொண்டுவரும்போது மின்பொறி மீண்டும் மீண்டும் எழும்பி பூரிப்பை ஏற்படுத்தியது. அதனால் ஒரு மணிநேர தூக்கம் போனது. ஆனால் , இரவிலும் ஓர் இயற்பியல் ஆனதே ! கியோ (Cartoon : Kagechiyo in Ninja Hattori) என்ற பூனை இவ்வாறு தான் Static Electricity-ஐ உருவாக்கும். ஆனால், அது பலத்த வீரியம் உடையது (புனைவு). https://sewingiscool.com/static-electricity-on-bed-sheets-spark/ ]

கருத்துகள்