முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (336)


3351. குற்றாலம் - பெயர்க்காரணம்?
    குறு ஆல் என்பது ஒருவகை ஆலமரம். அத்தகைய மரங்கள் அதிகமாகக் காணப்படும் பகுதி என்பதால் இவ்வாறு பெயர்பெற்றது. 

3352. சங்ககாலத்தில் குற்றாலம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
     தேனூர் 

3353. தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய ஆறு?
     காவேரி 

3354. இந்தியாவில் மக்கள் தொகை குறைவாக உள்ள மாநிலம்?
     சிக்கிம் 

3355. தமிழகத்தில் மிக அதிக சிமெண்ட் ஆலைகளை உடைய மாவட்டம்?
     அரியலூர் 

3356. முட்டையிலுள்ள புரதத்தின் பெயர்?
    ஆல்புமின் 

3357. கொழுப்பு அமிலங்கள், வளரூக்கிகள் மற்றும் பல பொருட்களையும் சுமக்கும் புரதம்?
     ஆல்புமின் 

3358. மனித உடலில் ஆல்புமினை எந்த உறுப்பு உற்பத்தி செய்யும்?
     கல்லீரல் 

3359. ஆல்புமின் தமிழில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
     வெண்ணி  [வெள்ளை நிறத்தை குறிக்கும் வகையில் அவ்வாறு அழைக்கப்படுகிறது.]

3360. ஆல்புமினின் மருத்துவ குறியீடு?
     ALB 

3361. உலகில் முதன்முதலில் உதட்டுச்சாயத்தை (Lipstick) தயாரித்து பயன்படுத்தியவர்கள்?
    பஞ்சாபியர்கள் 
[சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு வணிகர்களின் வாயிலாக உதட்டுச் சாயம்பற்றிய செய்திகள் மெசொப்பொத்தேமியா வரை பரவியது. மெசொப்பொத்தேமிய மக்கள் கி. மு. 1500களில் விலையுயர்ந்த நகைகளைப் பொடியாக்கி உதட்டில் சாயமாகப் பூசினர். பின்னர் வண்ணத்துப்பூச்சிகளின் உடலிலுள்ள நிறத்தையும் இன்னும் சிலர் மயிலின் இறகிலுள்ள நிறத்தையும் கொண்டு தங்களது உதட்டை அலங்கரித்துக் கொண்டார்கள் என்று வரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கின்றன.]

3362. சிந்து சமவெளி என்பது எந்த பகுதிகளை உள்ளடக்கியது?
     சிந்து சமவெளிப் பிரதேசம் என்பது இன்றைய பாகித்தானின் பெரும்பான்மையான பகுதிகளையும் இந்தியாவின் குசராத், இராச்சசுத்தான், பஞ்சாப் ஆகிய பகுதிகளையும் உள்ளடக்கியது. 

3363. எகிப்து மக்கள் எவ்வாறு உதட்டுச்சாயத்தை பயன்படுத்தினர்?
     பண்டைய எகிப்திய நாகரிக மக்களும் உதட்டுச் சாயத்தைப் பயன்படுத்தியுள்ளனர். அவர்கள் ஒரு வகைக் கள்ளிச் செடியின் நிறமியைக் கொண்டு உதடுகளுக்கு நிறம் பூசிக்கொண்டனர். இதில் 0.001 விழுக்காடு அயோடின் மற்றும் சில புரோமின் பொருட்களும் இருந்ததால் பயன்படுத்தியோருக்குத் தீராத நோய்கள் ஏற்பட்டன. கிளியோபாட்ரா கருஞ்சிவப்பு நிறத்தில் எறும்புகள் மற்றும் வண்டுகளிலிருந்து கிடைக்கும் நிறமிகளைக் கொண்டு தனது உதடுகளை ஒப்பனை செய்து கொண்டார். பளபளப்பைத் தருவதற்காக மீன்களின் செதில்களும் பயன்படுத்தப்பட்டன. 

3364. அரேபிய மக்கள் எவ்வாறு உதட்டுச்சாயத்தை பயன்படுத்தினர்?
     ஆரம்ப காலகட்டங்களில் அரேபியர்கள், உதட்டுச்சாயம் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் கிடைக்காத சமயத்தில் ஒருவகை வானவில் நிறமுள்ள பாம்பின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட நிறமிகளைக் கொண்டு தங்கள் உதடுகளை ஒப்பனை செய்துகொண்டனர். ஆனால், நாளடைவில் இதனைப் பயன்படுத்திய பெண்களைச் சில கொடிய நோய்கள் தாக்க ஆரம்பித்தன. 

3365. பஞ்சாப் மக்கள் எவ்வாறு உதட்டுச்சாயத்தை பயன்படுத்தினர்?
     ஏறத்தாழ 3500 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய பஞ்சாப் பகுதியில் வாழ்ந்த மக்கள் திருமண வைபவங்களின் போது மணப்பெண்களை அலங்கரிக்கச் சில ஒப்பனைப் பொருட்களைப் பயன்படுத்தியுள்ளனர். அவற்றுள் ஒன்று உதட்டுச்சாயமாகும். இவர்கள் தேன்மெழுகு, தாவரங்களிலிருந்து எடுக்கப்பட்ட நிறமிகள் என்பனவற்றைக் கலந்து திரவ வடிவில் கிடைத்த கூழ்மத்தைத் தங்களது உதடுகளில் பூசிக்கொண்டனர். இதுவே இன்றைய நவீன உதட்டுச் சாயங்களின் முன்னோடியாகும். 

3366. உலக இலக்கியங்களில் பலமுறை கொண்டாடப்பட்ட கனி?
    ஆப்பிள் 

3367. இந்தியாவில் எத்தனை சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன?
     34 

3368. இந்தியாவில் உள்ள மிகப்பெரிய சர்வதேச விமான நிலையம்?
     இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் 

3369. தமிழகத்தில் எத்தனை சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன?
     4 

3370. தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய சர்வதேச விமான நிலையம்?
     சென்னை சர்வதேச விமான நிலையம் 

கருத்துகள்