முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (338)


3381. HAARP-ன் முழுமை?
    High-frequency Active Auroral Research Program 

3382. HAARP தொழில்நுட்பத்தின் மூலமாக என்ன செய்யமுடியும்?
     செயற்கையாக பூகம்பம், சுனாமி போன்ற பேரிடர்களை ஏற்படுத்த முடியும். 
[ஆனால், அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும் கருத்து என்னவென்றால், அயனி மண்டலத்தை (Ionosphere) ஆராய்ச்சி செய்வதற்காகதான் HAARP தொழில்நுட்பம் பயன்படுகிறது என்பதுதான்.]

3383. HAARP தொழில்நுட்பத்தை எந்த நாடு பயன்படுத்துகிறது?
     அமெரிக்கா 
[அயனி மண்டலத்தை பலத்த அலைக்கற்றறைகளால் தாக்குவது தான் அந்த ஆராய்ச்சியின் முதல் படி.]

3384. முதன்முதலில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திய நாடு?
     டென்மார்க் 

3385. இலக்கண முறைப்படி இல்லாமலிருந்தும் இலக்கணம் போல் தோன்றுவது?
     இலக்கணப்போலி 

3386. மாம்பழத்தின் தாயகம்?
    இந்தியா 
[ முக்கனிகளில் முதல் கனி ! பழங்களின் ராஜா என பட்டம் ! இந்தியா, பிலிப்பைன்ஸ் முதலான நாடுகளின் தேசிய கனி ! மாம்பழம் மாம்பழம் தான் ! ]

3387. இந்தியாவின் முக்கிய வீதிகள் இருபுறமும் மாமரம் நட்ட மன்னர்?
     அசோகர் (கல்வெட்டு செய்தி) 

3388. மாம்பழம் - பெயர்க்காரணம்?
     மன்னருக்கெல்லாம் மன்னரை மாமன்னர் என்பர். பழங்களுக்கெல்லாம் ராஜா என்பதனால் மாம்பழம் என்றாயிருக்கக்கூடும்‌. மேலும், மால் என்றால் மழுங்குதல், மஞ்சள் என்றெல்லாம் பொருள் உண்டு. மஞ்சள் நிறத்தை கருத்தில் கொண்டு கூட மால் + பழம் = மாம்பழம் ஆகியிருக்கலாம். 

3389. மாம்பழத்தின் அறிவியல் பெயர்?
     Mangifera indica 
[ இண்டிகா என முடிந்தால் அது இந்தியாவின் சொத்து என பொருள். இந்தியா உலகிற்களித்த கனி மாங்கனி.]

3390. குயிலகம் எனப்படுவது?
     மாமரம் 
[குயில்கள் பெரும்பாலும் மாமரங்களில் தங்குவதால் மாமரத்திற்கு குயிலகம் என பெயர்.]

கருத்துகள்