முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பொது அறிவு (336)

3351. குற்றாலம் - பெயர்க்காரணம்?     குறு ஆல் என்பது ஒருவகை ஆலமரம். அத்தகைய மரங்கள் அதிகமாகக் காணப்படும் பகுதி என்பதால் இவ்வாறு பெயர்பெற்றது.  3352. சங்ககாலத்தில் குற்றாலம் எவ்வாறு அழைக்கப்பட்டது?      தேனூர்  3353. தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய ஆறு?      காவேரி  3354. இந்தியாவில் மக்கள் தொகை குறைவாக உள்ள மாநிலம்?      சிக்கிம்  3355. தமிழகத்தில் மிக அதிக சிமெண்ட் ஆலைகளை உடைய மாவட்டம்?      அரியலூர்  3356. முட்டையிலுள்ள புரதத்தின் பெயர்?     ஆல்புமின்  3357. கொழுப்பு அமிலங்கள், வளரூக்கிகள் மற்றும் பல பொருட்களையும் சுமக்கும் புரதம்?      ஆல்புமின்  3358. மனித உடலில் ஆல்புமினை எந்த உறுப்பு உற்பத்தி செய்யும்?      கல்லீரல்  3359. ஆல்புமின் தமிழில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?      வெண்ணி   [வெள்ளை நிறத்தை குறிக்கும் வகையில் அவ்வாறு அழைக்கப்படுகிறது.] 3360. ஆல்புமினின் மருத்துவ குறியீடு?      ALB  3361. உலகில் முதன்முதலில் உதட்டுச்சாயத்தை (Lipstick) தயாரித்து பயன்படுத்தியவர்கள்?     பஞ்சாபியர்கள்  [சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு வணிகர்களின் வாயிலாக உதட்டுச் சாயம்பற்றிய செய்திகள் மெசொப்பொ

பொது அறிவு (335)

3341. பத்திரம் என்றால் என்ன?     பனை ஓலை  [வடமொழியில் பத்திரம் என்றால் பனை ஓலை என பொருள் என , தொ.பரமசிவம் என்ற பெருந்தமிழ் ஆய்வர் தனது  தெய்வம் என்பதோர் என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.] 3342. பனங்கிழங்கை பச்சையாக காயவைத்து உலர்த்தி பதப்படுத்தினால் அக்கிழங்கு எவ்வாறு அழைக்கப்படும்?      ஒடியல்  3343. பனங்கிழங்கை அவித்து காயவைத்து உலர்த்தி பதப்படுத்தினால் அக்கிழங்கு எவ்வாறு அழைக்கப்படும்?      புழுக்கொடியல்  3344. கடலில் மூழ்கி முத்தெடுத்தல் எங்கு சிறப்பாக செய்யப்படுகிறது?      மன்னார் வளைகுடா  3345. இந்தியாவின் முதல் ஜாக்லேட் அருங்காட்சியகம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?      தமிழ்நாடு  3346. புழுங்கலரிசி - பெயர்க்காரணம்?     புழுங்கல் என்றால் அவியுதல் என பொருள். குறிப்பாக திருநெல்வேலியில், வியர்ப்பதையே "புழுங்குது" என்றுதான் சொல்வோம். அவித்த நெல்லில் கிடைக்கும் அரிசி தான் புழுங்கலரிசி.  [நேற்று, பச்சையாக காயவைத்து பதபடுத்திய பனங்கிழங்கை ஒடியல் என்றும் அவித்து காயவைத்து பதப்படுத்திய பனங்கிழங்கை புழுக்கொடியல் என்றும் அறிந்தோம். எனது அண்ணன் ஒருவரால் புழுங்கலரிசியின் பெயர்க்காரண

நீத்தார் பெருமை - திருக்குறள்

குறள் : 21   ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து  வேண்டும் பனுவல் துணிவு விளக்கம் : ஒழுக்கத்தை நாளும் ஒழுகிநின்று , பற்றுகளை விட்டவர்கள் பெருமைக்குரியவர்கள் . ஆனால் , அந்த பெருமையை கூட , அவர்கள் நீத்திருப்பார்கள் . பனுவல் பண்ண துணிகையில் , அத்தகையோரின் சிறப்பை கருதிடவேண்டும் . “ பாசம் துறந்தல்லவோ பரகதியை நாடுவது” என்கிறது அகிலத்திரட்டு . சிலவற்றை கடந்து செல்லுவதே சூக்குமம் . அவ்வாறு கடந்து , நீத்து செல்பவர்களே உன்னதமான பெருமைக்குரிய சிறந்தநிலையை அடைகின்றனர் . ஆசைவிட்டு , யாம் எமது , என்பதுமற்று , பற்றற்று , இருக்கும் ஞானி யாராமோ , அவரே நூல்துதிக்க துணியும் சிறப்பு பெரும் நீத்தார் .   குறள் : 22 துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று . விளக்கம் : யாவும் துறந்துசென்று நிறமற்ற பளிங்குபோன்ற நிலையை அடைந்தவர்களின் பெருமையை கூறுவது , இதுவரை வையகத்தில் இறந்தவர்களை எண்ணுவதனை போன்றது . இந்த குறள் முடிகையில் வரும் “அற்று” என்ற சொல் , ஓர் உவம உருபாகும் . துறந்தார்களை , இறந்தார்கள் என சொல்லுவதில்லை . அவர்கள் , அடங்கியவர்கள் . அதாவது , அடக்கங்கொண்டு அம