Engineering படித்தால் வேலை கிடைக்குமா? கிடைக்காதா? என கடந்த சில வருடங்களாக தென்னிந்தியாவெங்கும் ஒரு பேச்சும் மனக்குழப்பமும் நிலவிவருவதை அறிவீர்கள். Engineering என்ற வார்த்தையே ஒரு கேலி பொருளாக சமூக வலைதளங்களில் வலம்வருவதையும் அறியமுடியும். திரைப்படங்களிலும் கூட, அத்தகைய காட்சிகள் இடம்பெறுகின்றன. பரவலாக ஒன்று ஒருவிதமாய் பேசப்படுகிறதென்றால் அதை இந்த மனம், "அப்படிதான் போல" என நிர்ணயித்துவிடும்! Engineering படிக்கும்போது, "எங்குன வேல கிடைக்கும்?" என மேலோட்ட பார்வை பார்த்தவர்களும் சரி! Engineering, "இங்குதான் படிக்கபோகின்றேன்" என்றதும் எள்ளி சிரித்த என் வயதார்களும் சரி! அனைவரின் குரலும் அடங்கிவிட்டது என்பதே உண்மை. ஆம்! நிச்சயமாக பொறியியல் படித்தால் வெற்றிபெற முடியும்! வகுப்பறை சாரல்கள் என்ற இந்த கட்டுரை தொடரில், அதற்கான வழியை க(கா)ட்டுகிறேன்! முதலாமாண்டு : பள்ளியிலிருந்து கல்லூரிக்குள் காலடி எடுத்துவைக்கும் நாள்... முதல் நாள்... முதன்முதலாக நம் ஆத்ம தோழர், தோழிகளை காணும் நாள்... ஆம்! புதுவித நட்புக்கள் கிடைக்கும் தருணம் அது! (பழைய நட்புக்களு...
கல்வி கரையில கற்பவர் நாள்சில...