முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பொது அறிவு (300)

2991. தட்டானின் லார்வா எவ்வாறு உருவாகிறது?      நீருக்கடியில் [தட்டான் நன்னீரில் முட்டையிடும். அதன் லார்வா சற்று குரூரமான குணமுடையது. சிறு மீன்கள் முதல் கண்ணில் படும் அனைத்தையும் உட்கொண்டு நீருக்கடியில் பல மாதங்களை செலவிடுகிறது. தட்டான் தட்டான் தண்ணிக்குள்ள என்ற பாடலை நினைவில் கொள்ளலாம். ஆனால் , தட்டானின் லார்வா தான் தண்ணிக்குள்ள!] 2992. கதண்டு எனப்படுவது?      கதண்டு எனப்படுவது ஒருவகை விசம் நிறைந்த  குளவியை குறிக்கும் கிராமத்து வழக்குச் சொல். கடந்தை என்றும் இது அறியப்படுகிறது. [இது கொட்டினால் , வெற்றிலையுடன் மிளகு சேர்த்து உண்பது நலம். கொட்டிய இடத்தில் சுண்ணாம்பு தேய்ப்பது கிராமத்து வழக்கம்.] 2993. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் சுயசரிதை?       ஓர் இந்திய யாத்திரை 2994. பார்வையற்றவர்களை பார்க்க வைக்கும் செயற்கை கண்?       BIONIC EYE 2995. ஒரேயொரு நாட்டையுடைய கண்டம்?       ஆஸ்திரேலியா [ஆஸ்திரேலியாவை கண்டம் என்றும் கூறலாம். நாடு என்றும் கூறலாம்.] 2996. மெட்ராஸ் ஐ எதனால் பரவுகிறது?...

பொது அறிவு (299)

2981. பறக்கும் மீன் வகை எது?      பிளாங்க்டன் எனப்படும் மீன் வகை நீரின் மேற்புறத்தில் வேகமாக வந்து நான்கு இறக்கைகள் போன்ற செதில்களால் 60 கிலோமீட்டர் வேகத்தில் சிறிது தூரத்திற்கு எதிரிகளிடமிருந்து தப்பிக்க பறவைகள் போல பறக்கும் சக்தி வாய்ந்தது. 2982. கடலின் ஓநாய் எனப்படும் மீன்?      Orca or Killer Whale என்றழைக்கப்படும் மீனினம் கடலின் ஓநாய் என்று அழைக்கப்படுகிறது. அவற்றின் வேட்டையாடும் வியூகம் ஓநாய்கள் வேட்டையாடும் விதத்தை ஒத்துப்போவதால் அப்படி அழைக்கப்படுகிறது. [பார்க்க பிரம்மிப்பூட்டும் விதத்தில் அழகாகவும் இருக்கும் இந்த மீன் , ஆபத்தின் கருவூலமாம்!] 2983. மனிதனை போன்ற பற்களை உடைய மீன்?      செம்மறி மீன் (Sheepshead Fish). மீனின் பற்கள் , சற்று செம்மறி ஆட்டினது போல் தான் உள்ளன. 2984. மாசி என்பது எதை குறிக்கும்?      தமிழ் மாதத்தை குறிப்பதோடு கடல் மீன் வகையையும் மாசி என்ற சொல் குறிக்கும். 2985. தமிழகத்தில் கடற் கரையோரங்களில் படகேறி மீன்பிடித்து வாழும் மீனவர்களின் பொதுப்பெயர்?      பரதவர்...

பொது அறிவு (298)

  2971. ஆரி என்ற சொல் குறிப்பது?       சோழர்களை 2972. வங்காளத்தை வென்ற சோழன் எனப்படுவது?      முதலாம் இராசேந்திரசோழன் 2973. நோபல் பரிசு வழங்கும் நாடு?      சுவீடன் 2974. நோபல் பரிசு வாங்கிய முதல் இந்தியர்?      இரவீந்திரநாத் தாகூர் 2975. தமிழகத்தில் பெட்ரோலியம் அதிகம் கிடைக்கும் மாவட்டம்?      நாகப்பட்டினம் 2976. பாப்பத்து என்பது?       பத்துப்பாட்டு [ பா - பாடல் ] 2977. 1 குவிண்டால் என்றால்?       100 கிலோ கிராம் 2978. 1 நாழிகை என்றால்?       24 நிமிடங்கள் 2979. 1 யூனிட் இரத்தம் என்பது?       350 மி.லி 2980. 1 கன அடி நீர் எத்தனை லிட்டர்?       28.31 லிட்டர்

பொது அறிவு (297)

2961. பசியுணர்வை ஏற்படுத்துவது?      லெப்டீன் (Leptin) மற்றும் க்ரெலின் (Ghrelin)  என இருவருண்டு. இவர்களே , நீண்டநேரம் நாம் சாப்பிடாமல் இருக்கும்போது , வயிற்றில் பிறக்கின்றனர். பசியுணர்வை ஏற்படுத்துகின்றனர். [பசி என்று வந்தவர்க்கு புசி என்று கொடுத்துப் பாரப்பா என பாடுகிறார் பாரதிதாசன்.] 2962. அக்காரம் என்றால் என்ன?      சர்க்கரை / கரும்பு / கற்கண்டு [அக்காரம் எனும் சொல் இன்றும் மலையாளத்தில் புழக்கத்தில் உள்ளது. சர்க்கரை என்ற சொல்லை சற்றே உற்றுநோக்கினால் அதனிலும் அக்காரம் ஒழிந்திருப்பதை அறியலாம். மேலும் கரும்பின் (Sugar Cane) அறிவியல் பெயர் , Sachcharum (சக்கரம்) என்பதாகும்.] 2963. அந்தகாரம் என்றால் என்ன?      இருள்  (இருள் என்பது குறைந்தபட்ச வெளிச்சம் - பாரதியார்) [இலங்கைத் தமிழிலும் , பழைய தமிழ் புத்தகங்களிலும் இறைபுகழ் பாடல்களிலும் இடம்பெற்ற இந்த அந்தகாரம் என்ற சொல் , கிறித்தவ பைபிளிலும் இடம்பெற காரணமாகயிருந்தவர் , இலங்கையில் சைவத்தொண்டு ஆற்றி முதன்முதலில் தமிழில் பைபிளை மொழிபெயர்த்து தந்தவரான ஆறுமுகநாவலர்.] 2964. ஒ...

பொது அறிவு (296)

 2951. கத்தரிக்கோலை கண்டுபிடித்தவர் என வரலாற்று ஆசிரியர்களால் கருதப்படுபவர்?                     லியானர்டோ டா வின்சி [மோனாலிசா ஓவியத்தை வரைந்ததோடு நில்லாமல் கத்தரிக்கோலையும் கண்டுபிடித்தாராம் டா வின்சி.... டா வின்சி கோட் என்ற திரைப்படம் ஒன்றுண்டு. சில பல காரண காரியங்களால் அது தமிழகத்தில் தடை செய்யப்பட்டது.] 2952. ஒரு வாயுவாக, ஆக்சிஜனுக்கு மணமும் நிறமும் கிடையாது. ஆனால் அதன் திரவ மற்றும் திட வடிவங்களில் அதன் தன்மை யாது?      வெளிர் நீல நிறத்தில் ஒளிரும். 2953. மா என்றால் என்ன பொருள்?       மாம்பழம் என்பதை அடுத்து விலங்கு என்ற பொருளும் உண்டு. [மான் , மாடு , அரிமா (சிங்கம்) , கோட்டுமா (பன்றி)] 2954. ஆலி - ஆழி - ஆளி வேறுபாடு?       ஆலி - பூதம்   ‌    ஆழி - பெருங்கடல்   ‌    ஆளி - சிங்கம் 2955. யாளி என்றால்.....? குற்றாலக்குறவஞ்சியின்படி , ஆளி என்றால் சிங்கம் என பொருள். யாளியோ யானையும் சிங்கமும் சேர்ந்த ஒரு வடிவம். ஆக , புத...

பொது அறிவு (295)

 2941. Acoustics (அக்கவுஸ்டிக்ஸ்) என்பது எதைப் பற்றியது?       ஒலி [Acoustic Guitar என்ற ஒரு Guitar வகையே உண்டு.] 2942. Conchology (காஞ்சாலஜி) என்பது எதைப் பற்றியது?       Conch என்றால் கடற்‌ கிழிஞ்சல். அதாவது சங்கு முதலான சிப்பிகளை கு றித்த படிப்பு Conchology. 2943. Cytogenetics (சைட்டோஜெனிடிக்ஸ்) என்பது?       Cyto என்பது செல்லைக் குறித்திடும். ஆக, Cytogenetics என்பது செல் குறித்த படிப்பியல். 2944. Ceramics என்பது எதைப் பற்றியது?       பானை செய்தல் 2945. அவனிசிம்மன் என்ற பட்டமுடைய பல்லவ மன்னன்?      சிம்மவிஷ்ணு   2946. மனித மூலதனத்தை அதிகரிப்பதில் மிக முக்கிய காரணி?      கல்வி 2947. மகப்பேறு காலத்தில் தாயின் இறப்பு விகிதத்தை கட்டுபடுத்துவதில் முதலிடம் வகிக்கும் மாநிலம்?      கேரளம் 2948. மகப்பேறு காலத்தில் தாயின் இறப்பு விகிதத்தை கட்டுபடுத்துவதில் இரண்டாமிடம் வகிக்கும் மாநிலம்?       இராஜஸ்தான் 2949. இந்தியாவின் மரு...

பொது அறிவு (294)

2931. Leopard - ன் தமிழாக்கம்?       சிறுத்தை 2932. Jaguar - ன் தமிழாக்கம்?       வலியச்சிறுத்தை 2933. Cheetah - ன் தமிழாக்கம்?       சிவிங்கிப்புலி 2934. பூனை குடும்பத்திலேயே மிகப்பெரிய விலங்கு?       புலி [புலி, 350 கிலோ வரை வளரும். சிங்கமோ 270 கிலோ வரை தான். நான் ஒரு புலி என்று கூறி கம்பீரமாக நின்றால் , சாம்பாரில் போடும் "புளியா" என்ற காலாவதியான நகைச்சுவையை கூறி ஆசுவாசமாகிக்கொள்ளும் நபர்கள் இன்றளவிலும் நம்மோடு.... அவர்களுக்கு பதிலளிக்க தமிழில் ஓர் அழகான சொல்லாடல் உண்டு... அதுதான் "காயா வேங்கை மற்றும் பாயா வேங்கை" என்பது. காயா (த) வேங்கை என்பது புலி. பாயா (த) வேங்கை என்பது புளி.] 2935. துயிலன் மற்றும் துயில்நன் - வேறுபாடு?       துயிலன் - தூங்கியிருப்பவன் / தூங்குபவன்     துயில்நன் - தூங்கவைப்பவன் [இதுபோலதான் , மகிழன் என்றால் மகிழ்ந்திருப்பவன். மகிழ்நன் என்றால் மகிழவைப்பவன். நாம் மகிழ்நன்களாகயிருந்தால் , மகிழன்களாகிவிடலாம்... என்ன நான் சொல்றது...?] 2936. மிகப்பெரிய உடும்ப...