3331. உலகிலேயே மிக அதிகளவு கதிரியக்க தன்மை (Radioactive) உடைய தனிமம்? ரேடியம் [யுரேனியத்தை விட இரண்டு மில்லியன் அளவு கதிரியக்க தன்மை உடையது.] 3332. மின்னும் தன்மையுடைய பொருட்கள் எதனால் உண்டாக்கப்பட்டன? ரேடியம் [இருட்டில் மின்னும் பொருட்களை ஒருகாலத்தில் ரேடியம் பயன்படுத்தி தான் உருவாக்கியுள்ளனர். அதன் அதி தீவிர கதிரியக்க தன்மையின் காரணத்தால் அதனை பயன்படுத்தும் வழக்கம் குறைந்துள்ளது.] 3333. ரேடியத்தை முதன்முதலில் கண்டுபிடித்தவர்கள்? மேரி கியூரி மற்றும் அவரது கணவர் பியூரி கியூரி [யுரேனியத்தை தாதுவிலிருத்து பிரித்த பின்னரும் தாது மின்னிக்கொண்டிருப்பதை கண்டு வியந்து தாதுவை ஆராயும்போது ரேடியத்தை முதன்முதலாக கண்டுபிடித்தனர். அதுபோக, அதே தாதுவில் பொலோனியம் என்ற ஒரு தனிமத்தையும் கண்டுபிடித்தனர். மேரி கியூரியின் தாய் நாடான போலந்தின் நினைவாக பொலோனியம் என பெயர் வைத்தனர். ரேடியமும் பொலோனியமும் ஒருசேர கண்டறியப்பட்ட சகோதரர்கள்/சகோதரிகள்.] 3334. ரேடியம் புற்றுநோய் சிகிச்சையில் உதவுமா? அக்காலத்தில் இதை பயன்படுத...
கல்வி கரையில கற்பவர் நாள்சில...