2981. பறக்கும் மீன் வகை எது? பிளாங்க்டன் எனப்படும் மீன் வகை நீரின் மேற்புறத்தில் வேகமாக வந்து நான்கு இறக்கைகள் போன்ற செதில்களால் 60 கிலோமீட்டர் வேகத்தில் சிறிது தூரத்திற்கு எதிரிகளிடமிருந்து தப்பிக்க பறவைகள் போல பறக்கும் சக்தி வாய்ந்தது. 2982. கடலின் ஓநாய் எனப்படும் மீன்? Orca or Killer Whale என்றழைக்கப்படும் மீனினம் கடலின் ஓநாய் என்று அழைக்கப்படுகிறது. அவற்றின் வேட்டையாடும் வியூகம் ஓநாய்கள் வேட்டையாடும் விதத்தை ஒத்துப்போவதால் அப்படி அழைக்கப்படுகிறது. [பார்க்க பிரம்மிப்பூட்டும் விதத்தில் அழகாகவும் இருக்கும் இந்த மீன் , ஆபத்தின் கருவூலமாம்!] 2983. மனிதனை போன்ற பற்களை உடைய மீன்? செம்மறி மீன் (Sheepshead Fish). மீனின் பற்கள் , சற்று செம்மறி ஆட்டினது போல் தான் உள்ளன. 2984. மாசி என்பது எதை குறிக்கும்? தமிழ் மாதத்தை குறிப்பதோடு கடல் மீன் வகையையும் மாசி என்ற சொல் குறிக்கும். 2985. தமிழகத்தில் கடற் கரையோரங்களில் படகேறி மீன்பிடித்து வாழும் மீனவர்களின் பொதுப்பெயர்? பரதவர்...
கல்வி கரையில கற்பவர் நாள்சில...