முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

CRAB AND CRANE

Once, by a tranquil pond, a white crane, known for its piscivorous habits, espied a despondent crab. ஒருமுறை, ஓர் அமைதியான (Tranquil) குளத்தே, மீ்ன்தின்னும் இயல்புடைய (Piscivorous) வெண்கொக்கு, சோகமாயிருந்த (Despondent) அலவன் ஒன்றை பார்க்கநேர்ந்தது (Espied). Intrigued by the crab's melancholic demeanor, the crane ventured closer, inquiring gently about the source of the crab's sorrow. அலவனின் சோகநிலைக் (Melancholic Demeanour) கண்டு ஆவலெழ (Intrigued), கொக்கு அலவனை அணுகி (Ventured Closer), பணிவாக சோகத்தின் காரணம் வினவியது.   The crab spoke with a tremor in its voice, "A band of indigenous fishermen routinely invades our aquatic abode, seizes our fish friends, and peddles them in the bustling marketplace. Their nefarious visitation is slated for the morrow. I find myself consumed by apprehension, fearing the doom that may befall us all”. “இப்பகுதிவாழ் மீனவர்கள் (Indigenous Fishermen) குழு (Band), வாடிக்கையாக (Routinely) எங்கள் நீர்வாழிடம் (Aquatic Abode) புகுந்து (Invades) எங்

THE EXCELLENT BRAIN-WASH

  On a picturesque Wednesday morning, a school bus brimming with pre-KG pupils embarked on a journey through a serpentine road that meandered amidst the untamed wilderness. ஒரு கண்கவரும் (Picturesque) புதன் கிழமையில், மழலை மாணவப்பிஞ்சுகளால் நிரம்பியிருந்த (Brimming) பள்ளி பேருந்து, கட்டற்ற காட்டுவெளியில் (Untamed Wilderness) வளைந்து நெளிந்த சாலையில் (Serpentine Road) பயணம் தொடங்கியது (Embarked on a journey). As the school bus was a mere 2 kilometers from its destination, the erudite trio of teachers aboard signaled the driver to halt the bus through a gesture. பள்ளி பேருந்து அதன் இலக்கை அடைய வெறும் (Mere) 2 கி.மீ தூரமேயிருக்கும்போது, உள்ளேயிருந்த (Aboard) அறிவிற்சிறந்த (Erudite) மூன்று ஆசிரியர்கள், பேருந்தை நிறுத்துமாறு (halt) ஓட்டுநரிடம் சைகை (Gesture) வாயிலாக கூறினார்கள். The little scholars aboard found themselves in a state of bewilderment as the bus came to a halt unexpectedly. The educators asked the youngsters to beseech their deities for a seamless resumption of the bus travel

THE SERPENTINE PRINCE

  The destitute old woman, bereft of sustenance, made her way to the riverbank, intent on both fishing and bathing. அடிப்படை வசதிகள் கூட இல்லாத (Destitute) ஒரு மூதாட்டி, உணவு (Sustenance) இல்லாதவளாய் (Bereft of), மீன்பிடிக்கவும் குளிக்கவும் உறுதிபூண்டு, நதிக்கரைக்கு வழிநடந்தாள்.   Emerging from the river's cool embrace, she was aghast to discover a venomous serpent nestled within her fishing pot. ஆற்றின் இதமான தழுவலிலிருந்து வெளியேறிய மூதாட்டி, தனது மீன்பிடி கூடையினுள் ஒரு பாம்பு வந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியானாள் (Aghast).   She hesitated for a moment but decided to bring the serpent to her humble dwelling, hoping it might end her relentless misery . ஒரு கணம் தயங்கினாலும் (Hesitated), அது தனது ஆறா துயரத்தை (Relentless Misery) போக்குமென எண்ணி தன் இருப்பிடத்திற்கு கொணர தீர்மானித்தாள்.   However, when she cautiously uncovered the pot, to her astonishment, she didn't find a snake but instead a splendid and opulent necklace. கவனத்துடன் அந்த கூடையை அவள் திறந்தபோது, அவளை ஆச்சரியப்

THE MONGOOSELINESS

  In a hamlet nestled between meandering rivers, there resided a rustic agrarian. Approaching the prime of his third decade, he held an unwavering affection for every botanical inhabitant adorning his verdant enclav. வளைந்து செல்லும் (Meandering) ஆறுகளுக்கு இடையே அமையப்பெற்ற (Nestled) கிராமமொன்றில், எளிமையான/ பட்டிக்காட்டுத்தனமான (Rustic) விவசாயி (Agrarian). இருந்தான். முப்பது வயதின் முழுமையை (Prime) நெருங்கும் அவன், தனது பசுமையான (Verdant) நிலப்பகுதியை (Enclave) அலங்கரித்திருந்த (Adorning) அனைத்து தாவரங்களின் (Botanical Inhabitants) மீதும் திண்மையான / உறுதியான (Unwavering) ஈர்ப்பு கொண்டிருந்தான். One fine day, as he irrigated his lush garden, he stumbled upon a fledgling mongoose nestled beneath the obsidian honey shrub. The diminutive creature bore a striking resemblance to a neonate human infant, devoid of any fur adorning its delicate form. ஒரு நாள், அவன் தனது பசுமையான (Lush) தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சிய (Irrigated) போது, பூலாத்தி புதரின் (Black Honey Shrub) அடியில் ஒரு கீரிப்பி

பொது அறிவு (249)

 2481. அதிக எடையுடைய விலங்கு?       நீலத்திமிங்கலம் 2482. மிகப்பெரிய நிலவாழ் விலங்கு?       ஆப்ரிக்க யானை 2483. மிகப்பெரிய பறவை?      நெருப்புக்கோழி   2484. மிகவேகமாக ஓடும் நிலவாழ் விலங்கு?       சிறுத்தை 2485. அதிக வலியை ஏற்படுத்தும் பூச்சி?       புல்லட் எறும்பு 2486. இந்தியாவின் முதல் ஏவுகணை கப்பல்?      விபூதி 2487. உலகிலேயே மிகவும் பழமையான வானொலி மையம்?      பி.பி.ஸி 2488. பேஸ் பால் விளையாட்டின் ஆடுகளம் எந்த வடிவத்தில் இருக்கும்?       முக்கோணம்   2489. கொள்ளிவாய் பிசாசு எனப்படும் வாயு?      மீத்தேன் 2490. உலகம் ஒரு நாடகமேடை என கூறியவர்?       வில்லியம் ஷேக்ஸ்பியர்

பொது அறிவு (248)

 2471. நோய்தடுப்பியலின் தந்தை?       எட்வர்டு ஜென்னர் 2472. காசநோயை கண்டறியும் சோதனை?       மாண்டக்ஸ் சோதனை 2473. பிறந்த குழந்தைக்கு கொடுக்கப்படும் தடுப்பூசி?      BCG 2474. BCG எந்த நோய்க்காக கொடுக்கப்படுகிறது?       காசநோய் 2475. எய்ட்ஸ் நோயை கண்டறியும் சோதனை?       எலிசா 2476. வித்யாபாஸ்கர் எனப்பட்டவர்?      முத்துராமலிங்கர் 2477. தமிழின் முதல் பரணி நூல்?      கலிங்கத்துப்பரணி 2478. தமிழின் முதல் குறவஞ்சி நூல்?      திருக்குற்றால குறவஞ்சி   2479. தமிழின் முதல் இசைப்பாடல் நூல்?       பரிபாடல் 2480. புரட்சி துறவி எனப்படுபவர்?      இராமலிங்க வள்ளலார்

பொது அறிவு (247)

 2461. இந்திய தடகள ராணி?      பி.டி.உஷா 2462. கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற முதல் தமிழ் பெண்?      விஜயலெட்சுமி 2463. மண்புழு வளர்ப்புக்கு என்ன பெயர்?      வெர்மிகல்ச்சர் (Vermiculture)   2464. மல்பெர்ரி செடி வளர்ப்புக்கு என்ன பெயர்?      மோரிகல்ச்சர் 2465. உலகின் விலையுயர்ந்த நறுமண பொருள்?      குங்குமப்பூ 2466. வெண்கலம் எவற்றின் கலவை?      காப்பர் மற்றும் துத்தநாகம் 2467. மொபைல் ஃபோனை கண்டுபிடித்தவர்?       மார்ட்டின் காப்பர் 2468. பாகிஸ்தானின் மாபெரும் நகரம்?      கராச்சி   2469. இந்தியாவின் புற்றுநோய் ஆராய்ச்சி கழகம் எங்குள்ளது?       மும்பை 2470. சித்த மருத்துவத்தின் தாயகம்?      தமிழகம்

பொது அறிவு (246)

 2451. அழுகிய முட்டையிலிருந்து வெளிவரும் வாயு?       ஹைட்ரஜன் சல்பைடு 2452. ஒரு கெஜம் என்பது எத்தனை அடிகள்?       மூன்று 2453. தமிழகத்தில் பாம்பு பண்ணை உள்ள  இடம்?      சென்னை   2454. இந்தியா கேட் எங்குள்ளது?      டெல்லி 2455. நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் புகழ் மிக்க முழக்கம்?      டில்லி சலோ (டெல்லியை நோக்கி செல்லுங்கள்) 2456. இந்திய காடுகளின் அரசன்?      தேக்கு 2457. ஏழை மனிதனின் உணவு?      கேழ்வரகு 2458. சர்க்கரை நோயின் எதிரி?      அவரைக்காய்   2459. எந்த ஆராய்ச்சியாளர்கள் பைப்லைன் கசிவுகளை சரிசெய்யும் ரோபோக்களை உருவாக்கியுள்ளனர்?      ஐ.ஐ.டி சென்னை 2460. எந்த ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாக 3D மனித தோல் மாதிரிகளை உயிர் அச்சிட்டனர்?      ஐ.ஐ.டி டெல்லி

பொது அறிவு (245)

  2441. கூகிள் நிறுவனத்திற்கு ஆஸ்திரேலியா அபராதம் விதித்தது ஏன்?      பயனர்களின் இருப்பிட தகவல்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் சேகரித்ததனால் ஆஸ்திரேலியா 300 கோடி ரூபாய் அளவில் கூகிள் நிறுவனத்திற்கு அபராதம் விதித்துள்ளது. 2442. Virgin Fruits எனப்படுபவை?       விதையில்லா கனிகள் 2443. அரிசியிலிருந்து தயாரிக்கப்படும் மதுபானம்?       சேக் (Sake) - ஜப்பான் (Japan) 2444. MAAZA (மாசா) எனப்படும் குளிர்பானம் எந்த வகை மாங்கனியிலிருந்து தயாரிக்கப்படுகிறது?       அல்ஃபோன்ஸா 2445. உலகின் மிகப்பெரிய வாழைப் பழம்?       Giant Highland Banana 2446. வீட்டின் வெளி சுவர்களில் வறட்டிகளை (காய்ந்த பசுஞ்சாணம்) ஏன் ஒட்டிவைத்தனர்?       15 நாட்களுக்கு ஒருமுறை என இந்த பழக்கம் தமிழர்களிடம் புழக்கத்திலிருந்தது. இதற்கு முக்கிய காரணம், வறட்டிகள் ஒட்டப்பட்ட  சுவர்கள், வெளியில் எந்த தட்பவெப்ப நிலையில் இருந்தாலும், குறைந்தளவு வெப்பநிலையையே வீட்டிற்குள் வழங்கும். இதனால் வெயிலின் தாக்கம் வீட்டினுள் குறையும். வெயில் நிமித்தம் வரும் நோய்களை வருமுன்னரே சாணம் விரட்டிடும். வியப்பான விடயம் யாதெனில், எருவாகவுள்ள (ஈரத்துடன்) சாணம்

பொது அறிவு (244)

 2431. யூகலிப்டஸ் மரங்களின் பூர்வீகம்?      ஆஸ்திரேலியா 2432. கிழார் என்றால் என்ன பொருள்?       கிராமத்தலைவர் 2433. கோமகன் என்றால் என்ன பொருள்?       இளவரசர் [கோ - அரசன். கோமகன் - அரசனின் மகன்] 2434. இளவரசர்கள் எவ்வாறெல்லாம் அழைக்கப்பட்டனர்?       இளங்கோ , இளஞ்சேரல் 2435. மிதக்கும் சூரிய ஒளி மின் நிலையம் தமிழகத்தில் எங்கு செயல்படுத்தப்பட்டுள்ளது?       தூத்துக்குடி 2436. தேசிய அறிவியல் தினம்?       பிப்ரவரி 28 2437. நெல் பயிரிடும் நிலத்திலிருந்து வெளியாகும் வாயு?      மீத்தேன் 2438. மனித உடலில் ஆதாமின் ஆப்பிள் (Adam's Apple) என அழைக்கப்படும் பகுதி?      குரல்வளை 2439. கந்தகம் (Sulphur) எந்த நிறத்தில் இருக்கும்?       மஞ்சள் 2440. பயோ டீசல் எதிலிருந்து பெறப்படுகிறது?      காட்டாமணக்கு

THE SOUTHERN BOY

  In a bygone era, within a Southern township, amidst a petite hamlet teeming with canthium vegetation, interspersed with rocky outcrops, and bedecked with resplendent glory lilies, dwelled a burgeoning young bo. முன்னொரு காலத்தில் (In a bygone era), தெக்கத்தி சீமையில் (Southern Township), காரை மரங்கள் (Canthium Vegetation) நிறைந்தும் (Teeming with), பூமியை விட்டு மேலெழும்பிய பாறைகளால் (Rocky Outcrops) நிறைந்தும், அழகுற‌ மின்னும் (Resplendent ) செங்காந்தள் மலர்களால் வனப்பூட்டப்பட்டும் (Bedecked with) இருந்த சிறு கிராமத்தில் (Petite Hamlet), ஒரு வளரும் (Burgeoning : பர்ஜனின்) இளந்தாரிப் பையன் இருந்தான். The young lad found himself devoid of companionship, akin to a vacant receptacle. He had borne witness to myriad arduous circumstances, having naught to forfeit. அந்த இளம் பையன் தன்னிடம் கதைக்க யாருமில்லை (Devoid of companionship) என உணர்ந்து, தன்னை ஒரு வெற்று பாத்திரம் (Vacant Receptacle) போல எண்ணியிருந்தான். இழப்பதற்கு ஏதுமின்றியும் (Naught to forfeit) அதிகபடியான (Myriad) கடின (Arduou

பொது அறிவு (243)

2421. தேங்காயிலுள்ள அமிலம்?       கேப்ரிக் அமிலம் (Capric Acid) [இது ஒரு நிறைவுற்ற கொழுப்பு (Saturated Fat). அதாவது கெட்ட கொழுப்பு....] 2422. DROPSY எனப்படும் வீக்கங்களை ஏற்படுத்தும் களை தாவரம்?       நாய்கடுகு [கண்ணை கொள்ளை கொள்ளும் மஞ்சள் நிறப்பூ.... ஆங்காங்கே வெளிர் நிற முட்கள்.... ஒடித்தால் மஞ்சள் நிற திரவம் என இந்த செடியை சிறுவயதிலேயே அறுவை சிகிச்சை செய்த அனுபவம் உண்டு... அது விசம் என்று அன்றே அறிவுறுத்தப்பட்டாலும் அறிவியலும் உறுத்தும் போதுதான் அதன் விபரீதம் அறியலாகிறது.... Mexican Poppy என ஆங்கிலத்திலும் Argemone Mexicana என அறிவியலிலும் இது அழைக்கப்படுகிறது. வெளிநாட்டு தாவரங்கள் பெரும்பாலும் நன்மைக்கே இல்லை.... சீமை கருவேலத்தின் வரிசையில் தான் இவையும்....] 2423. மாதுளை பழத்தின் செந்நிறத்தின் காரணம்?       ஆந்தோ சயனின் 2424. Sweet Banana என அழைக்கப்படுவது?      குடை மிளகாவின் (Capsicum) ஒரு வகை..... [வாழைப்பழம் மாதிரியே வெளிர் மஞ்சள் நிறத்துடனும் சற்றே ஒத்த உருவுடனும் இந்த மிளகாய் தோற்றமளிக்கிறது. கேரளாவில் அநேக கடைகளில் இந்த மிளகாய் பஜ்ஜிதான்....] 2425. சில நேரங்களில் மாதுளை பழ

பொது அறிவு (242)

2411. உலகின் மிகவும் பிரபலமான பழம்?      தக்காளி 2412. தக்காளியின் பொதுப்பெயர்?       Wolf Apple 2413. ஏழையின் ஆரஞ்சு கனி எனப்படுவது?      தக்காளி 2414. தக்காளி எந்த வகை கனி?      பெர்ரி [A berry is a small, pulpy, and often edible fruit. Typically, berries are juicy, rounded, brightly colored, sweet, sour or tart, and do not have a stone or pit, although many pips or seeds may be present.] 2415. தக்காளியின் செந்நிறத்திற்கு காரணம்?       லைக்கோபீன் (Lycopene) [Lycopene is a bright red carotenoid hydrocarbon found in tomatoes and other red fruits and vegetables, such as red carrots, watermelons, grapefruits, and papayas.] 2416. நமது தேசிய பூச்சி?      வண்ணத்துப்பூச்சி 2417. நமது மாநில பூச்சி?       தமிழ் மறவன் வண்ணத்துப்பூச்சி 2418. இந்திய இராணுவத்தின் பிராண்ட் தூதரான (Brand Ambassador) கிரிக்கெட் வீரர்?       எம்.எஸ்.தோனி 2419. இநதிய விமானப்படையில் Honorary பதவி பெற்ற ஒரே கிரிக்கெட் வீரர்?       சச்சின் டெண்டுல்கர் 2420. விதையில்லா மாம்பழ வகை?      சிந்து

பொது அறிவு (241)

 2401. தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் காடுகள் எத்தனை சதவீதம்?       17 சதவீதம் 2402. தமிழ் பல்கலைக்கழகம் தமிழகத்தில் எங்குள்ளது?       தஞ்சாவூர் 2403. அதிகளவு ஆண்கள் உள்ள தமிழக மாவட்டம்?       தர்மபுரி 2404. அதிகளவு பெண்கள் உள்ள தமிழக மாவட்டம்?      நீலகிரி 2405. தமிழகத்தில் எத்தனை விமான நிலையங்கள் உள்ளன?       ஏழு 2406. வைட்டமின் ஏ,பி,சி,டீ மற்றும் ஈ என ஐந்து வித சத்துக்களையுடைய பழம்?       வாழை 2407. ஒட்டகப்பறவை எனப்படுவது?       நெருப்புக்கோழி 2408. தூய தங்கம் எத்தனை கேரட்?       24 கேரட் 2409. நகை செய்ய பயன்படும் தங்கம் எத்தனை கேரட்?       22 கேரட் 2410. ஆஸ்கார் விருதின் மற்றொரு பெயர்?       அகாடெமி விருது 

பொது அறிவு (240)

2391. பொதுநலவாய விளையாட்டுக்கள் (Commonwealth Games) எத்தனை ஆண்டுகட்கு ஒருமுறை நடைபெறும்?       நான்கு 2392. பொதுநலவாய விளையாட்டுக்களை எந்த நாடு முதன்முதலில் நடத்தியது?      கனடா [1930ல் முதன் முதலாக நடைபெற்று நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை என நடைபெறுகிறது. 2022ல் தற்போது தான் நடந்தேறியது. பெண்களுக்கான கிரிக்கெட் இந்த வருடம் தான் முதன்முதலாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியா 2010ஆம் ஆண்டு இந்த விளையாட்டுக்களை நடத்தியது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நாடு முன்வந்து நடத்துகிறது. அதிகபடியாக ஆஸ்திரேலியாதான் நடத்தியுள்ளது.] 2393. கடைசியாக நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுக்களில் எத்தனை நாடுகள் பங்கேற்றன?       72 2394. கடைசியாக நடைபெற்ற 22வது பொதுநலவாய விளையாட்டுக்களில் இந்தியா எத்தனையாவது இடத்தை பிடித்தது?     நான்காவது இடம் 2395. கடைசியாக நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுக்களில் இந்தியா எத்தனை பதக்கங்களை வென்றுள்ளது?      61 பதக்கங்கள் [ Indian athletes won 61 medals, 22 golds, 16 silvers and 23 bronze, at the Commonwealth Games 2022. ]   2396. அதிக நாடுகளை கொண்ட கண்டம்?      ஆப்ரிக்கா 2397. வட்ட வடிவில் அ

பொது அறிவு (239)

 2381. மிக நுண்ணிய துகள்கள் மற்றொரு பொருளில் சம அளவில் விரவி இருப்பது?       கூழ்மம் (பால் , ஐஸ்க்ரீம் , புகை) 2382. இழை ஒளியியலின் தந்தை (Father of Fibre Optics)?       நரின் சிங்க் கபானி (இந்தியர்) 2383. நமக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம்?       ஆல்ஃபா சென்டாரி (Alpha Centauri) 2384. நைட்ரஜன் மற்றும் ஆக்சிசன் - இவற்றுள் அதிக கரைதிறன் உடையது?     ஆக்சிசன் (ஆக்சிசன் அதிகளவில் நீரில் கரைந்துள்ளமையால் தான் நீர்வாழ் உயிரினங்கள் நிலைக்கின்றன.) 2385. செவ்வாய் கோளை அடைந்த முதல் ஆசிய நாடு?      இந்தியா 2386. சிந்து சமவெளி நாகரிகத்தின் மக்கள் ஆபரணங்கள் செய்ய பயன்படுத்தியவை?       சிவப்பு நிற மணிக்கற்கள் 2387. மனிதர்கள் அதிகம் பயன்படுத்திய உலோகம்?       செம்பு 2388. சிந்து சமவெளி மக்கள் அறியாத உலோகம்?       இரும்பு 2389. தமிழக அரசு வழங்கும் மிகப்பெரிய இலக்கிய விருது?     ராஜராஜன் விருது 2390. இராணுவ வீரர்களுக்கு சீருடை வழங்கிய முதல் நாடு?      பிரிட்டன்  

பொது அறிவு (238)

 2371. நமது தேசிய ஊர்வன உயிரினம்?       இராஜநாகம் 2372. நமது தேசிய நீர்வாழ் உயிரினம்?      நன்னீர் டால்பின் 2373. நமது தேசிய பாரம்பரிய விலங்கு?      யானை 2374. என் கடன் பணி செய்து கிடப்பதே என்று பாடியவர்?      திருநாவுக்கரசர் 2375. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் கோயம்புத்தூர் ஆகும். இதில் மான்செஸ்டர் என்றால் என்ன?       பருத்தி சார்ந்த பொருட்கள் உற்பத்திக்கு பெயர் போன நகரம் மான்செஸ்டர். தென்னிந்தியாவில் பருத்தி சார்ந்த தயாரிப்புகளில் கோயம்புத்தூர் முன்முகப்பில் நிற்பதால் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் எனப்படுகிறது. இந்தியாவின் மான்செஸ்டர் அகமதாபாத். 2376. முல்லைக்கு தேர் கொடுத்தவர்?       பாரி 2377. யாழ் மீட்டும் பாணர்களுக்கு பரிசு வழங்கியவர்?       ஓரி [வல்வில் ஓரி , யாழ் எனப்படும் நமது தொல்லிசை கருவியை இசைக்கும் (மீட்டும்) பாணர்களுக்கு (பாட்டுடைய புலவர் பெருமக்கள்) பரிசு அளித்த வள்ளல்] 2378. ஔவைக்கு நெல்லிக்கனி அளித்தவர்?       அதியமான் [அந்த நெல்லிக்கனியை உண்டால் மரணம் நேராதாம். அப்படியெனில் அதை உண்ட ஔவை பாட்டி எங்கே? என சிறுவயது தொட்டு பெருவயது வரை (அவ்வளவு பெரிய வயது இல்லை ) , ஐயம்

Gene Regulation

Gene Regulation Regulation என்றாலே முறைமைபடுத்துதல்தான்! எப்போது இந்த ஜீன்கள்  இயக்கத்திலிருக்கவேண்டும்? எப்போது இந்த ஜீன்கள் இயக்கமற்று இருக்கவேண்டும்  என்பதையெல்லாம் நிர்ணயிப்பதுதான் இந்த Regulation! குறள்வழி சொல்வதென்றால் காலமும் ஞாலமும் கருதி செயல்தான்…உதாரணமாக, ஒரு பல்லியின் வால் விழுந்துவிட்டால், அவ்விடத்தில் அந்த வாலை மீண்டும் முளைக்கச்செய்யும் ஜீன்கள் இயக்கப்படும். வால் முளைத்ததும் அவை அறவே இயக்கமற்றுப்போகும். இவ்வாறு, இன்ன நேரத்தில் இன்ன இடத்தில் ஜீன்கள் இயக்கப்பட்டும் இயக்கம் தடுக்கப்பட்டும் இருக்க காரணமே Regulation தான்! Gene regulation refers to the mechanisms and processes by which a cell controls the expression of its genes. It is essential for ensuring that genes are turned on (expressed) or off (repressed) at the right time and in the right context. Gene regulation is crucial for maintaining the proper functioning of an organism and responding to changing environmental conditions. Transcriptional Regulation Transcription என்றாலே, DNA-யின் மரபு தகவல்கள் mRNA-க்குள் வந்து

RNA Processing

 புரத உற்பத்தியில் tRNA RNA அருகே வந்துநிற்கும் mRNA, Coding தகவல்களை கொண்டிருக்கும் . அதிலுள்ள அந்த தகவல்கள் , மூன்று மூன்று நியூக்ளியோடைடுகளாக ரிபோசோமால் ஏற்கப்படும் . இந்த மூவரணிக்கு Codon ( கோடான் ) என பெயர் . இந்த Codons- தான் , அமினோ அமிலங்களாக அடுக்கப்பட்டு புரதமாக உருவெடுக்கும் . tRNA தான் சரியான அமினோ அமிலங்களை உரிய இடஞ்சேர்க்கும் . The mature mRNA leaves the cell's nucleus and enters the cytoplasm, where it interacts with ribosomes. During translation, the information in mRNA is read in groups of three nucleotides called codons. Each codon corresponds to a specific amino acid. Transfer RNA (tRNA) molecules bring the correct amino acids to the ribosome, where a protein is synthesized according to the sequence of codons in the mRNA. The ribosome "translates" the mRNA code into a sequence of amino acids, ultimately leading to the formation of a specific protein. This protein can have various functions in the cell and plays a critical role in the organ