முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Search in You!

 One day, a gecko was meandering in the wall. ஒரு நாள், ஒரு பல்லி (Gecko) சுவற்றில் அலைந்துகொண்டிருந்தது (Meandering). It forfeited its tail while vaulting. அது, குதிக்கையில் (Vaulting) அதன் வாலை இழந்தது (Forefeited).     The gecko approached a dog, beseeching to endow its tail to it. பல்லி, ஒரு நாயை அணுகி, அதன் வாலை தனக்கு வழங்குமாறு (Endow) கெஞ்சியது (Beseeched).   The dog replied, "My tail shall forever be inclined. If you assimilate it, you risk a perilous descent." நாய், “என் வால் எப்போதும் வளைந்திருக்கும் (Inclined). அதை நீ மாட்டிக்கொண்டால் (Assimilate), அபாயகரமாக (Perilous) விழநேரிடும்.” என பதிலளித்தது.   The gecko approached an orangutan, requesting its tail. The orangutan responded, "We are devoid of tails, by nature's design." பல்லி ஒரு கானரனை (Orangutan) அணுகி, அதன் வாலை தருமாறு வேண்டியது. கானரனோ, “இயற்கையாகவே நாங்கள் வாலற்றவர்கள் (Devoid of Tails)” என பதிலளித்தது.   The gecko then implored a tortoise for its tail. The tortoise, concealing its appen

வான் சிறப்பு - திருக்குறள்

குறள்: 11 வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. விளக்கம் இன்றுவரை உலகம் உய்துவர காரணமே, ஆதாயம் தேடாமல் ஆகாயம் பொழிவதுதான். பல கோடி உயிர்கள் உய்ய காரணமே பருவத்தே பெய்யும் வான்மழைதான். அன்றோ, மாரி பொழியும் மாதம் ஒரு மூன்று தரம்! ஏரி பெருகும்! ஏரடிப்பர் உழவரெல்லாம்! இன்றியமையாத ஒன்று இந்த இதமழை! பண்டிதன் வீடோ… பாமரன் வீடோ… பாரபட்சம் பாராதது வான்மழைதான். பின்னர் அதுதானே அமுது!? வையத்து உயிர்களை அழிவின்றி வைத்திருக்கும் வான்மழையே அந்த அமுது! வானமுது இருந்தால்தான் வாய்க்கு ருசியாக கண்ணமுது, சாற்றமுது எல்லாம்! ஆகாயமழையே அழிவுநீக்கும் அமுது. குறள்: 12 துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை. விளக்கம் உண்பவருக்கு நல்லதோர் உணவாக்கித்தருவதும் மழைதான்! உண்ணுகையில் வரும் தாகம் தீர்க்கும் அருகறிய அமுதமாவதும் மழைதான்! மழையின் தியாகத்தை இந்த இரட்டைவரிகள் இயம்பக்கேட்கிறோம். முந்தைய குறளில், மழையே அமுது என்றார் வள்ளுவப்பெருந்தகை. “மலரில் சுவையாகி, தமிழில் அமுதாகி, தங்கமுகமாகி, மின்னும் தளிராகி, எதிலும் முதலாகி, திகழும் உபகாரி… தட்டு தனலாகி, அன்பு பு

பொது அறிவு (325)

3241. ரூபிள் (Ruble) நாணயமுறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?      ரஷ்யா 3242. இந்தியா - பாகிஸ்தான் எல்லை கோட்டை வகுத்தவர்?      ரெட் க்ளிஃப் [பெயர்ல Clip இருக்குறதுனாலதான் ரெண்டு நாட்டையும் க்ளிப் க்ளிப்பா வகுந்துட்டாருபோல...] 3243. தென்னிந்தியாவில் புலிகள் அதிகமாக காணப்படும் இடம்?      சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் [ சத்தியமங்கலத்தில் இன்னுமொரு புலி ஒன்று முறுக்கிய மீசையோடு துப்பாக்கி ஏந்தி வலம் வந்தது.... வீரப்பன்... மக்கள் தொலைக்காட்சியில் வீரப்பன் குறித்த சந்தனக்காடு தொடரின் தொடக்கபாடல் வரிகளில் ,       "கண்ணான தேசத்துல காவேரி ஓரத்துல காட்டுச் சிங்கம் பொறந்ததடி....      மீச்சங்கொட்டு மீசவச்சி வீரத்தையே நெஞ்சில் வச்சி வரிப்புலி வளந்ததடி...." என்ற வரிகள், "வீரப்பனை வீரப்பன்தான்" என பறைசாற்றும்! https://youtu.be/mCX00-VVJ5M ] 3244. பாகிஸ்தானோடு அதிக எல்லையை பகிர்ந்துள்ள மாநிலம்?      இராஜஸ்தான் [ இரண்டும் ஸ்தான்-ஸ்தான் என்றுதான் முடிகின்றன... பாகிஸ்தான்! இராஜஸ்தான்! ஸ்தான் என்றால் நாடு என பொருள்.... பாகிஸ்தான் ஒரு நாடு தான்! எனவே , அங்கு ஸ்தான் இருப்பதில் எவ்

பொது அறிவு (324)

3231. Tsavo Lions எனப்படும் சிங்கங்கள் எத்தகையவை?      ட்சாவோ கூட்டத்தில் ஒரே ஓர் ஆண் சிங்கம் மட்டும் தான். ஏனையவர்கள் எல்லாம் பெண் சிங்கங்கள். 3232. பெண் சிங்கங்களுக்கு பிடறி வளருமா?       சில பெண் சிங்கங்களுக்கு , டெஸ்டோஸ்டிரோன் மிகுதியால் ஆண் சிங்கங்களுக்கு உள்ளதை போல , பிடரி மயிர் வளரும். அத்தகைய சிங்கங்கள், ஆண் சிங்கத்தின் இயல்புகளை கொண்டுள்ளன. 3233. வயப்புலி மற்றும் மறப்புலி எனப்படுவது?       சிங்கம் 3234. ஆனனம் என்றால் என்ன பொருள்?       முகம் 3235. அஞ்சானனம் / ஐயானனம் / பஞ்சானனம் - எனப்படுவது?       சிங்கம் 3236. சிங்கத்தின் அறிவியல் பெயர்?       panthera leo 3237. புலியின் அறிவியல் பெயர்?       panthera tigris [பொதுவாக சிங்கத்தைக் காட்டின் அரசன் எனக் கூறுகின்றனர். எனினும் வரலாற்றில் புலிக்கும் சிங்கத்திற்கும் இடையிலான போர்களில் புலியே பெருமளவில் வெற்றி பெற்றுள்ளது. அண்மையில் அங்கோரா விலங்குப் பூங்காவில் ஒரு புலி ஒரே அடியில் சிங்கத்தைக் கொன்றுவிட்டது. இது 2011 மார்ச்சில் நிகழ்ந்தது. ஆனால் தொன்மங்கள் அனைத்திலும் சிங்கமே அதிகம் வல்லமை உடையதாய் காட்டப்படுகின்றது. மூவேந்தர் கொடிகளி

பொது அறிவு (323)

3221. துவசம் - பொருள்?      கொடி 3222. சேவற்றிரு துவசம் - இதன் பொருள்?      சேவல் இருக்கும் துவசம் (சேவல் கொடி) 3223. துவேசம் - பொருள்?      பகை 3224. தோள் , தோசை முதலிய சொற்களில் தோ என்ற முன்னோட்டு இருக்க காரணம்?       தோள் , தோசை முதலிய சொற்களில் உள்ள தோ எனும் எழுத்துக்கு , இரண்டு என பொருள். இரண்டு தோள்களை நாம் கொண்டுள்ளோம். இரண்டு பக்கங்களை தோசை கொண்டுள்ளது. 3225. தமிழகத்தின் பருத்தி நகரம்?      கோயம்புத்தூர்   3226. பூனைக் குடும்பத்தின் மிகப்பெரிய விலங்கு?       புலி 3227. பூனைக் குடும்பத்தின் இரண்டாவது மிகப்பெரிய விலங்கு?       சிங்கம் 3228. சிங்கம் , Single-ஆ தான் வருமா?      இல்லை! 16 முதல் 40 என்ற எண்ணிக்கையில் கூட்டம் கூட்டமாகவேதான் வரும். இது ஒரு மிகப்பெரிய சமூகவிலங்கு (Social Animal). அதாவது , கூடி வாழும் பழக்கம் உடையது. சிங்கம் & Single - இரண்டும் ஒலியியைபு (Rhyming) கொண்டுள்ளதால்தான் அப்படியொரு வசனம். 3229. ஆண் மற்றும் பெண் சிங்கங்கள் கூடி வாழும் கூட்டத்துக்கு பெயர்?       Tribe 3230. ஆண் சிங்கங்கள் மட்டுமே வாழும் கூட்டத்துக்கு பெயர்?       Coalition

பொது அறிவு (322)

3211. துளசியின் (Basil) அறிவியல் பெயர்?      ஆசிமம் (Ocimum) [துளசி, ஆசிமம் மட்டுமல்ல... ஓர் ஆசிர்வாதமும் தான் ! மழைக்காலங்களில் சளி , இருமல் போன்ற உபாதைகள் தோன்றும். அதே மழைக்காலங்களில் தான் , துளசியும் தோன்றும். அற்புதமான துளசி கசாயம் , சளி-இருமலை இல்லை என விரட்டும். மாதம் ஒரு முறை குடிப்பது சிறப்பு. ஆண்கள் அநேகமுறை இதை குடிப்பதை தவிர்க்கவேண்டும்.] 3212. மாலலங்கல் எனப்படும் தாவரம்?       துளசியே! மாலலங்கல் = மால் + அலங்கல். அலங்கல் என்றால் பூமாலை. பெருமாளுக்கு அலங்கலாக துளசியை பயன்படுத்தும் வழக்கம் உண்டு. ஆண்டாள் நாச்சியார் கண்டறியப்பட்டதும் துளசி தோப்புக்கு ஊடேதான் என குறிப்பிடப்படுவது அறியத்தக்கது. 3213. துழாய் எனப்படும் தாவரம்?      துளசி - துளவு - துழாய் என அனைத்தும் ஒரே தாவரத்தையே குறிக்கின்றன. துழாய் மாலையான் என தொடங்குகின்றன நாலாயிரத்திவ்ய பிரபந்த வரிகள்.  ["துழாய் அலங்கல் - பொருள் தருக." என்பது TNPSC வினா.] 3214. பேய் துளசி என்றால்.....?       மருந்தாக பயன்படும் காட்டுத்துளசிதான் , பே(ய்)த்துளசி என்றும் அழைக்கப்படுகிறது. [எந்த தாவரங்கள் அதீத மருத்துவ தன்மை உடையவனவா

பொது அறிவு (321)

3201. மாலை - பெயர்க்காரணம்?       மால் என்றால் கருமை என பொருள். கருநிறத்தில் அந்திப்பொழுது அமைவதால் மாலை என பெயர்பெற்றது. 3202. கருணைக்கிழங்கு - பெயர்க்காரணம்?       கரடுமுரடாக ஒழுங்கற்ற வடிவில் உள்ள இந்த கிழங்கு , கரணைகிழங்கு என்றே வழங்கப்பட்டது. கரடு எனப்படும் மேடு எப்படி கரடிக்கு பெயர் வழங்கலாயிற்றோ, அவ்வண்ணமே கரணைகிழங்கும் பெயர்பெறலானது. [கரணை = காய்கறிகளின் மேற்பகுதியில் காணப்படும் சீரற்ற முண்டு முடிச்சு.] 3203. பாரி வள்ளலின் மகள்கள்?      அங்கவை மற்றும் சங்கவை [இந்த பெயர்களை கேட்டாலே நமக்கு திரைப்பட நியாபகம் வந்து, நகைக்கும் எண்ணம் வரக்கூடும். இன்றோடு அவ்வெண்ணம் ஒழியட்டும். சங்க இலக்கியங்களில் மிக அழகான தமிழ்ப் பெண்கள் என இவர்கள் குறிப்பிடப்படுகிறார்கள். "தமிழ் பெண்கள் அழகானவர்கள்" என்பது அந்த திரைப்படத்தை இயக்கியவருக்கு பிடிக்காமல் போக பின்புலம்..... தெரியவில்லை! அதை தமிழில் தேறிய சாலமன் பாப்பையா வாயால் கூறச்செய்ததும் புரியவில்லை. ஆனால் , அறிந்தோ அறியாமலோ அவர் செய்திருக்கலாம் என வைத்துக்கொண்டு , இனி சங்கமகளிரை ஏளனிக்கும் எண்ணத்தை விட்டுவிடுவோம்!] 3204. பாரியின் உயிர்

பொது அறிவு (320)

3191. பகலாடி என்றால் என்ன?      பகலாடி (Diurnal creature) என்பது பகலில் உணவு தேடி இரவில் உறங்கும் உயிரினம். 3192. இரவாடி என்றால் என்ன?       இரவாடுதல் (Nocturnality) என்பது இரவு வேளையில் சுறுசுறுப்பாக இயங்கி, பகலில் உறங்கும் ஒரு விலங்குப் பண்பினைக் குறிக்கும். இத்தகைய பண்புடைய விலங்குகள் இரவாடிகள் எனப்படும். [ஆந்தை இத்தகையது. காதலும் இவ்வண்ணம் தான் என தனது "வசந்த முல்லை போலே வந்து" பாடலில் கவிஞர் நா.முத்துகுமார் கூறியிருப்பார்.         "காதல் என்பது ஆந்தைய போலே         நைட்டு முழுவதும் முழிக்கும்         கம்பன் வீட்டு நாயை போலே         கவிதையா அது குரைக்கும்"] 3193. இலங்கையின் பெரிய நகரம்?      கொழும்பு 3194. இலங்கையின் தேசிய மரம்?       நாகமரம் (Ironwood) 3195. இலங்கையின் தேசிய பறவை?       காட்டுக்கோழி (Jungle Fowl) 3196. கால்குலேட்டரை கண்டுபிடித்தவர்?      பாஸ்கல் 3197. அரிசி நாடு என்று அழைக்கப்படுவது?       தாய்லாந்து 3198. குளிர்பானங்களில் பயன்படுத்தப்படும் அமிலம்?       பாஸ்பாரிக் அமிலம் 3199. OPPO Mobiles நிறுவனம் எந்த நாட்டினது?      சீனா 3200. இந்தியாவின் ம

பொது அறிவு (319)

3181. சந்தன மாநகர் எனப்படுவது?      திருப்பத்தூர் 3182. மூன்று வட்டமேசை மாநாடுகளும்  நடைபெற்ற ஆண்டுகள்?      முதலாம் வட்டமேசை மாநாடு - 1930      இரண்டாம் வட்டமேசை மாநாடு - 1931      மூன்றாம் வட்டமேசை மாநாடு - 1932 3183. முதலாம் வட்டமேசை மாநாடு தோல்வியுற காரணம்?       காங்கிரஸ் கட்சி கலந்துகொள்ளாததால் 3184. மூன்று வட்டமேசை மாநாடுகளிலும் கலந்துகொண்ட இந்தியர்?       டாக்டர் B. R. அம்பேத்கர் 3185. இரண்டு சுதந்திர தினம் அனுசரிக்கும் மாநிலம்?       கோவா [India became an independent country, free from British rule, in 1947 - Goa celebrates this as well as their state independence from the Portuguese in 1961.] 3186. இந்தியாவின் இரும்பு பெண்மணி எனப்படுவர்?       இந்திராகாந்தி 3187. இந்தியாவின் விண்வெளி மங்கை எனப்படுவர்?      கல்பனா சாவ்லா 3188. தென்னாட்டின் ஜான்சிராணி எனப்படுவர்?      அஞ்சலையம்மாள் 3189. இந்தியாவின் நிலவு மனிதர் எனப்படுபவர்?      மயில்சாமி அண்ணாதுரை 3190. இந்தியாவின் ராக்கெட் மனிதர் எனப்படுவர்?       கைலாசவடிவு சிவன் (K.சிவன்)

பொது அறிவு (318)

3171. கேரட் சாப்பிட்டால் கண் பார்வை அதிகரிக்குமா?       இது இரண்டாம் உலகப்போர் காலத்தில் பிரிட்டிஷ் விமானப்படையினரால் இருட்டில் உருவான உருட்டு!  ரேடார் தொழில்நுட்பம் மூலமாக எதிரணியை இருட்டிலும் கச்சிதமாக கண்டு தாக்கிய பிரிட்டிஷார் , மற்றவர்கள் தாங்கள் பயன்படுத்தும் நுட்பத்தை அறிந்துவிடக் கூடாதென , "நாங்கள் கேரட் சாப்பிட்டதால் தான் இருட்டில் கண்பார்வை அதிகரித்து ஜெர்மானியர்களை எதிர்கொண்டோம்!" என்று போட்டார்களே ஒரு போடு! அதன் தாக்கம் இன்று வரை நம்மிடத்தில்.... ஆனால் , கேரட் சாப்பிட்டால் கண்ணை பாதுகாக்கும் நுண்சத்துக்கள் சேருவது உண்மை தான்! "அதீத பார்வைக்கு கேரட் தான்" என்பது ஏற்புடையதல்ல... 3172. கை ரேகையை மாற்ற‌ முடியுமா?      குழந்தைகள் பிறப்பதற்கு மூன்று‌ மாதங்களுக்கு முன்பே தீர்மானிக்கப்படும் கைரேகைகள் , காலத்திற்கும் மாறாதவை! ஜான் ஹெர்பர்ட் எனும் மிகப்பெரிய அமெரிக்க கொள்ளைக்காரன் , காவல் அதிகாரிகளிடமிருந்து தப்பிக்க , கைரேகையை கொண்டுதான் கண்டுபிடிக்கிறார்கள் என்று, நெருப்பில் காட்டுதல் , அமிலத்தை ஊற்றுதல் என அதீத கைரேகை அழிப்பு நுட்பத்தில் இறங்கினான். ஒருமுறை அழி

பொது அறிவு (317)

3161. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் கார்?      பேபி ஹிந்துஸ்தான் 3162. நுகர்வோர் நீதிமன்றம் (Consumer Court) முதலில் எந்த நாட்டில் ஏற்படுத்தப்பட்டது?      அமெரிக்கா 3163. Skype - தமிழாக்கம்?      காயலை 3164. Bluetooth - தமிழாக்கம்?      ஊடலை 3165. ஆறு கடலுடன் கலக்கும் இடம்?     கழிமுகம் 3166. வைட்டமின் A-ன் அறிவியல் பெயர்?      ரெட்டினால் 3167.வைட்டமின் B-ன் அறிவியல் பெயர்?      தையமின் 3168. வைட்டமின் B2-ன் அறிவியல் பெயர்?       ரிபோபிளேவின் 3169. வைட்டமின் B3-ன் அறிவியல் பெயர்?      நியாசின் 3170. வைட்டமின் B5-ன் அறிவியல் பெயர்?      பேன்டோதெனிக் அமிலம்

பொது அறிவு (316)

3151. கேரம் விளையாட்டின் (Carrom) தமிழாக்கம்?      சுண்டாட்டம் 3152. சுண்டாட்டத்தின் தாயகம்?       இந்தியா 3153. சுண்டாட்டத்தின் தந்தை எனப்படுபவர்?       பங்காரு பாபு [ BANGARU BABU SIR, Chennai for his exceptional contribution to the carrom World. The carrom community around the world respectfully designates him the "Father of Carrom". Mr. BABU Promoted carrom not just in India but around the world. ] 3154. Online - தமிழாக்கம்?       இயங்கலை 3155. Offline - தமிழாக்கம்?      முடக்கலை 3156. உலகமாதா கீரை எனப்படுவது?       மணத்தக்காளி 3157. ஞானக்கீரை எனப்படுவது?       தூதுவளை 3158. சர்க்கரை நோயின் எதிரி எனப்படும் காய்கறி?      அவரைக்காய் 3159. கிழக்கிலிருந்து வீசும் காற்று?       கொண்டல் காற்று [தெற்கிலிருந்து வீசுவது தென்றல். வடக்கிலிருந்து வீசுவது வாடை காற்று. மேற்கிலிருந்து வீசுவது மேலை காற்று/மேகாற்று.] 3160. ஜெர்ரி பழம் - தமிழாக்கம்?     சேலாப்பழம்

பொது அறிவு (315)

3141. உலகில் மொத்தம் எத்தனை வகை கரடிகள் உள்ளன?      எட்டே எட்டு தான் 3142. ரஷ்யாவின் தேசிய விலங்கு?      கரடி 3143. கரடிகளின் நீண்ட கால உறக்கம் எவ்வாறு அறியப்படுகிறது?      அறிதுயில் (Hibernation) 3144. கரடிகளின் அறிதுயில் , எந்த காலத்தில் நடைபெறும்?       குளிர்காலம் (Winter) 3145. அறிதுயில் நிலை எத்தகையது?      கரடிகள் பல நாட்கள் தூங்கிக்கொண்டேயிருக்கும். பனிக்காலம் முடியும் வரை எதையும் அவ்வளவாக உண்ணாமல், பெரும் உபவாசம் ஒன்றை கடைபிடிக்கும். [Boonie Bears என்றும் , தமிழில் வருத்தப்படாத கரடி சங்கம் என்றும் அறியப்படும் சீன சித்திரத்தின் தொடக்கப்பாடல் வரிகள் , Hibernation is over now.... (அறிதுயில் காலம் முடிந்தாயிற்று....) எனுமாறு வரும்... https://youtu.be/eBVC7KwiJ1I ] 3146. தென்னிந்தியாவின் மான்செஸ்டர்?       கோயம்புத்தூர் 3147. வட இந்தியாவின் மான்செஸ்டர்?      கான்பூர் 3148. இந்தியாவின் மான்செஸ்டர்?       மும்பை [மான்செஸ்டர் என்பது இங்கிலாந்தில் உள்ள மாபெரும் பருத்தி துணி மற்றும் கம்பளி உற்பத்தி நகராகும்.] 3149. WiFi - தமிழாக்கம்?      அருகலை 3150. Hotspot - தமிழாக்கம்?      பகி

பொது அறிவு (314)

3131. பொள்ளாச்சி - பெயர்க்காரணம்?      இயற்கை அழகுடன் ஆட்சி செய்யும் பொழிலாட்சி என்ற பெயர் தான் பொள்ளாச்சி என்று மருவி போனது. [பொழில் என்றால் இயற்கை அழகு என பொருள்.] 3132. ஆற்காடு - பெயர்க்காரணம்?       அத்தி மாலை அணிந்த சோழ மன்னர்களின் ஆண்ட நிலப்பகுதியை ஆற்காடு என்று அழைத்தனர் என்றும், ஆல் -ஆலமரம் நிறைந்த பகுதியால் ஆற்காடு என்று அழைத்தனர் என்றும் சொல்லப்படுகிறது. 3133. சேலம் - பெயர்க்காரணம்?       மலைகள் நிறைந்த இப்பகுதியை சைலம் என்று அழைத்தனர்.அதுவே பின்னாளில் சேலம் என்றானது. மேலும் இப்பகுதி சேரநாட்டின் ஒரு பகுதியாக இருந்ததால் சேரலம் என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் சேலம் ஆனது என்றும் ஒரு சிலர் கூறுவர். 3134. தஞ்சாவூர் - பெயர்க்காரணம்?       எட்டாம் நூற்றாண்டில் தனஞ்செய முத்தரையர் என்ற அரசரின் பெயரில் தனஞ்செய்யூர் என்ற ஊர் உருவாக்கப்பட்டது. பின்னாளில் அதுவே தஞ்சாவூர் என மாறி போனது. தஞ்சை என்னும் சொல்லுக்கு வளமான குளிர்ந்த வயல்கள் உள்ள பகுதி என்ற பொருளும் உண்டு. 3135. ஈரோடு - பெயர்க்காரணம்?     பெரும்பள்ளம் மற்றும் பிச்சைக்காரன் பள்ளம் ஆகிய இரு ஓடைகளுக்கு நடுவே உள்ள ஊர் என்பதால் இதை ஈர

பொது அறிவு (313)

3121. அடவி என்றால் என்ன பொருள்?       காடு / மிகுந்த கூட்டம் 3122. அடவிகன் என்றால் என்ன பொருள்?       காட்டுவாசி 3123. பழனம் என்றால் என்ன பொருள்?      விளைச்சல் நிலம் 3124. சுவல் என்றால் என்ன பொருள்?      தோள் / கழுத்து 3125. நேமி என்றால் என்ன பொருள்?      சக்கரம் 3126. கைக்கடிகார உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் நாடு?       சுவிட்சர்லாந்து 3127. சுவிட்சர்லாந்து, கைக்கடிகாரங்கள் உற்பத்தியில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்னர் , அதில் சிறந்து விளங்கிய நாடு?      ஐக்கிய பேரரசு (UK) [சுவிட்சர்லாந்தின் கைக்கடிகார உற்பத்திக்கு முந்தைய 300 வருடங்களில் , பிரிட்டிஷ் தான் கைக்கடிகார உற்பத்தியில் கொடிகட்டி பறந்ததாம்!] 3128. கால்வினியம் (Calvinism) என்றால் என்ன?       ஐக்கிய பேரரசு, கைக்கடிகார உற்பத்தியில் கொடிகட்டி பறக்கும் தருணத்தில் பெரும் மதப்பிளவு ஒன்று ஏற்பட்டது. ஐரோப்பாவில் அதிகமாயிருந்த மதம் கத்தோலிக்க கிறித்தவம். அதிலிருந்து முரண்பட்டு பிரிந்து வந்ததுதான் சீர்திருத்த திருச்சபைகள் (Protestant). அவ்வாறு பிரிந்து வந்த புது அமைப்பு, சுவிட்சர்லாந்திலும் பரவியது. அந்த அமைப்பிலொரு பாதிரியாராகயிருந

பொது அறிவு (312)

3111. சாக்குக்கணவாய் எனப்படுவது?      எண்காலி (Octopus) 3112. எண்காலிக்கு எத்தனை இதயங்கள்?      மூன்று [இருந்தது ஓர் இதயம்! அதையும் உன்னிடம் பறி கொடுத்துவிட்டேனே என புளங்காகிதம் இன்றி புலம்பும் நம் இளைஞர்கள், எண்காலிகளாக பிறந்தால் சற்று தணிவார்கள். ] 3113. எண்காலியின் இரத்த நிறம்?      நீலம் [நம் இரத்தம் சிவப்பாக இருக்க காரணம் , ஹீமோகுளோபின் நிறமி என அறிவோம். அதுபோல, எண்காலியின் நீல இரத்தத்திற்கு காரணமான நிறமி , ஹீமோசயனின் ஆகும்.] 3114. உலகின் மிகப்பெரிய எண்காலி?      தி ஜெயின்ட் பசிபிக் ஆக்டோபஸ் என்று அழைக்கப்படும் எண்காலியின் உயரம் 16 அடி ஆகும். இதன் எடை 50 கிலோ ஆகும். இதுவே உலகின் மிகப்பெரிய எண்காலி என்று கருதப்படுகிறது. 3115. உலகின் மிகச்சிறிய எண்காலி?     ஆக்டோபஸ் ஒல்பி என்று அழைக்கப்படும் எண்காலி ஒரு அடிக்கு கீழ் உயரமும் ஒரு கிராமுக்குக் கீழ் எடையும் கொண்டதாகும். இதுவே உலகின் மிகச்சிறிய எண்காலியாகும். [எண்காலிகள் , மிகவும் கொடூரமானவை. அவற்றில் பல விசத்தன்மை உடையவை. ஆயினும் , நம் சிறுவயதில் பெரும்பாலானோர் அறிந்த ஒரு எண்காலி உண்டு. அன்பின் அடையாளமாய் சிரித்த முகம் கொண்ட அந்த நீல எண

பொது அறிவு (311)

3101. உட்காதில் உள்ள நத்தை சுருள் போன்ற அமைப்புக்கு என்ன பெயர்?      காக்ளியா 3102. வெஸ்டிபுலோகோக்லியர் நரம்பு எனப்படுவது?       வெளிப்புற காது ஒலியைப் பெறுகிறது. நடுத்தர காதுகளின் சவ்வு வழியாக உள் காதுக்கு அது அனுப்பப்படுகிறது. அங்கு அது காக்ளியாவில் ஒரு நரம்பு சமிக்ஞையாக மாற்றப்பட்டு வெஸ்டிபுலோகோக்ளியர் நரம்பு வழியாக பரவுகிறது. 3103. காது மெழுகு எனப்படுவது?      காது அழுக்கு என்று நாம் சொல்வது உண்மையிலே காது மெழுகு (Ear wax) தான். இது கெடுதல் செய்யாத மெழுகு. உண்மையிலே நன்மை செய்யும். மெழுகினை சுரக்கும் சுரப்பிகள் ,செவிக்குழாயின் படலத்தில் (வெளிச்செவி தொடங்கி செவிப்பறை நீளும்) உள்ளன.பிறப்பதற்கு முன்பிருந்தே இவை வேலை செய்ய ஆரம்பித்து விடும். 3104. காது மெழுகின் பெயர்?      செருமன் (Cerumen) [ Cera என்றால் மெழுகு என பொருளாம். சுட்ட களிமண்ணால் செய்யப்பட்டவற்றை Ceramic பொருட்கள் என்பர். ] 3105. மாபெரும் காதுகளை உடைய விலங்கு?      ஆப்ரிக்க யானை 3106. Citizen என்பது யார்?      தனது பிறப்பால் ஒரு நாட்டில் குடியுரிமை பெற்றவர் /  ஒரு குறிப்பிட்ட நாட்கள் ஒரு நாட்டில் வாழ்ந்து குடியுரிமை பெற்ற

பொது அறிவு (310)

3091. மனித காதின் மூன்று பகுதிகள்?       வெளிக்காது - நடுக்காது - உட்காது 3092. வெளிக்காதில் உள்ள பகுதிகள்?       செவிமடல் - செவி குழாய் - செவிப்பறை புறப்படலம் [இந்த அமைப்பு மிகவும் எளியது. நாம் தான் ஒலி என வைத்துக் கொள்வோம் ! நாம் செவிப்பறையின் மீது மோத போகிறோம் ! எனவே, செவி குழாயின் வழியாக பயணம் செய்து , செவிப்பறையின் புறப்படலத்தை தொடுகிறோம் ! செவிக்குழாய் , நம்மை செவிப்பறைக்கு இட்டுச் செல்லும். The outer ear is the external portion of the ear and includes the fleshy visible pinna (also called the auricle), the ear canal, and the outer layer of the eardrum (also called the tympanic membrane).] 3093. செவிமடலின் பயன் யாது?      Pinna (பின்னா) எனப்படும் இந்த செவிமடல் , நம் வெளிக்காதின் ஒரு பகுதி என்றோம் ! இது எந்த பகுதி தெரியுமா? நாம் , கம்மல் குத்தும் மென்மையான தசை பகுதி ! நம் பாட்டிமார்களின் காதில் ஒரு அணிகலனை கண்டிருப்போம்... தண்டட்டி / பாம்படம் என அறியப்படும் அந்த காதணி , பின்னாவாகிய செவிமடலை பின்னுக்கு இழுத்து முன்னும் பின்னும் அசையும் அழகுதான் என்ன !? அந்த இழுபட்ட செவிமடலை , பாட்ட

பொது அறிவு (309)

3081. Endocrine (எண்டோகிரைன்) சுரப்பிகள் என்பவை?        நாளமில்லா சுரப்பிகள் (Ductless Glands) [நம் உடலில் எண்ணற்ற சுரப்பிகள் உள்ளதை நாம் அறிவோம். சுரப்பிகள் சுரக்கும் பொருளானது , தாமிரபரணியிலிருந்து நமக்கு கிடைக்கும் குடிநீரைபோல ஒரு குழாய் வழியே எடுத்துசெல்லப்பட்டு தேவையான இடத்தில் வழங்கபடுமாயின் அது நாளமுள்ள சுரப்பி. குழாய் ஏதுமின்றி நேரடியாக இரத்தத்தில் கலக்குமாயின் அதுவே நாளமில்லா சுரப்பி.] 3082. Exocrine (எக்ஸோக்ரைன்) சுரப்பிகள் எனப்படுபவை?       நாளமுள்ள சுரப்பிகள் (Ducted Glands) 3083. Heterocrine (ஹெடிரோக்ரைன்) சுரப்பிகள் எனப்படுபவை?      நாளமுள்ள மற்றும் நாளமில்லா சுரப்பிகள் [நாளங்களை சுரந்து அனுப்ப குழாய் அமைப்புகளை பயன்படுத்தியும் அவற்றை பயன்படுத்தாமலும் இந்த கலப்பு வகை இயங்கும். உதாரணமாக , கணையம் (Pancreas).] 3084. அகச்சுரப்பிகள் / அகஞ்சுரக்கும் சுரப்பிகள் என்பவை?       Endo என்றால் உள்ளே ! Exo என்றால் வெளியே ! உடலுக்குள்ளே உள்ளே கண்ணுக்கு தெரியாமல் சுரப்பவை Endocrine எனப்படும் அகச்சுரப்பிகள். இவை நேரடியாக இரத்தத்தில் கலக்கப்படுபவை. 3085. காணில் சுரப்பிகள் என்பவை?      காண்

பொது அறிவு (308)

3071. கிறித்துமசு தாத்தாவை குறிக்கும் Santa Clause என்பது எந்த மொழியின் மருவல்?      டச்சு மொழி [சண்ட குலோஸ் என்ற சொல் டச்சு மொழியின் சிண்டெர்கிலாஸ் என்னும் சொல்லில் இருந்து மருவியதாகும்.] 3072. நத்தார் தாத்தா எனப்படுவது யார்?       கிறித்துமசு தாத்தாவே.... [கிறித்துமசின் தமிழ் பெயர்தான் , நத்தார் பண்டிகை என்பது.] 3073. நத்தார் தாத்தாவின் உண்மை பின்னணி?       Saint Nicholas என்பவரே ஆங்கிலேய நாட்டுப்புறக் கலைப் பின்னணி கொண்ட கிறித்துமசு தாத்தாவாகவும், டச்சு நாட்டின் நாட்டுப்புறக் கலை உருவமான சின்டர்கிளாசாகவும் சித்தரிக்கப்படுகிறார். நிக்கலசு, இரகசியமாக குழந்தைகளுக்குப் பரிசு தரும் இயல்புடையவராக இருந்துள்ளார். 3074. இப்போது நாம் அறியும் நத்தார் தாத்தாவின் உருவம் எவ்வாறு அமையப்பெற்றது?       Coca-Cola நிறுவனம் முதன் முதலில் அறிமுகப்படுத்திய சான்டாவின் உருவம் சற்று பயமுறுத்தும் வண்ணம் அமைந்ததாம். இதனால் 1931 ஆம் ஆண்டில் இக்குளிர்பான நிறுவனம் பத்திரிக்கை விளம்பரங்களுக்கான சான்டாவின் படத்தை வரைய Haddon Sundblom என்ற ஓவியரை அழைத்துள்ளனர். அவர் சந்தோஷமான குதூகலமான சான்டாவின் படத்தை வரைந்துள்ளா

பொது அறிவு (307)

3061. வெள்ளியின் வேதி குறியீடு?       Ag [Ag என்பதன் விரிவாக்கம்  Argentum என்பதாகும்.] 3062. முந்திரி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு?       இந்தியா 3063. ஆண்டுதோறும் கழுதைக் கண்காட்சி நடக்கும் இடம்?       உஜ்ஜைனி 3064. தாவரங்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுப்பது?      பொட்டாசியம் 3065. 'பிக் ஆப்பிள்' என்று அழைக்கப்படும் அமெரிக்க நகரம்?     நியூயார்க் 3066. சுரப்பிகளின் (Glands) பணி யாது?       உடல் இயக்கமானது சரியான முறையில் நடைபெற தேவையான முக்கிய பொருட்களை சுரக்கும் சீரிய பணியை செய்பவை, சுரப்பிகள். 3067. சுரப்பிகளின் இரண்டு வகைகள் யாவை?       நாளமுள்ள சுரப்பிகள் மற்றும் நாளமில்லா சுரப்பிகள். நாளம் என்றால் குழாய் என பொருள். 3068. நாளமுள்ள சுரப்பிகள் (Ducted Glands) எத்தகையவை?      தாம் சுரக்கும் பொருளை குழாய்களின் மூலமாக பிற பகுதிகளுக்கு எடுத்து செல்பவை, நாளமுள்ள சுரப்பிகள். (உதாரணம் : வியர்வை , கண்ணீர் மற்றும் கல்லீரல் போன்ற சுரப்பிகள்) 3069. நாளமில்லா சுரப்பிகள் (Ductless Glands) எத்தகையவை?       தாம் சுரக்கும் பொருளை நேரடியாக இரத்தத்தில் கலப்பதன் மூலமாக பிற பக

பொது அறிவு (306)

3051. தங்கத்தின் வேதி குறியீடு?      Au 3052. Au என்பதன் விரிவு?      Aurum (ஆரம்) [ஆரம் என்றால் இலத்தீனில் மின்னும் காலை உதயம் என பொருளாம்....] 3053. தங்கம் தமிழர்தமக்கு எவ்வாறு கிடைத்தது?      ரோமானிய கிரேக்க நாடுகளோடு ஏற்றுமதி-இறக்குமதி செய்த தமிழ் பெருங்குடிகள் , மிளகை (Pepper) கொடுத்து தங்கத்தை இறக்குமதி செய்ததாக சங்க இலக்கியங்கள் மொழிகின்றன. 3054. ஐரோப்பியர்களின் Gold Rush எனப்படுவது?      ஐரோப்பியர்களை தங்கவெறியர்கள் எனலாம்! எங்கு தங்கம் கிடைக்குமென பாய்ந்து   தேடுவர்! அதற்காக சண்டையிடுவர்! கொலை செய்வர்! ஐரோப்பிய நாடுகளில் ஆங்காங்கே தங்கவேட்டைகள் அரங்கேறின. 3055. தங்கத்தை உலகிற்கு வழங்குவதில் ஆப்ரிக்காவின் பங்கு?     காண்பவற்றையெல்லாம் தங்கமோ என சந்தேகிக்கும் ஐரோப்பியர்களுக்கு, ஆப்ரிக்கா ஒரு சுவர்க்க பூமியாக தென்பட்டது. காரணம் , ஆப்ரிக்காவின் நிலத்தில் தங்கம் தங்குவதால் தான் ! Golden Valley (தங்கப் பள்ளத்தாக்கு) என பெயரிட்டு அங்கிருந்த பூர்வகுடி மக்களை அடிமையாக்கி தங்கம் தோண்டவைத்தனர் ஐரோப்பியர்கள் ! இப்போது உள்ள ஆப்ரிக்க அரசியலமைப்பும் ஏதோ ஒரு விதத்தில் அம்மக்களை அடிமைகளாக உழைக

பொது அறிவு (305)

3041. தங்கம் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள நாடு?       சீனா [தங்கம் வாங்குவதில் முதலிடம் நம்மவர்கள் தான்!] 3042. சுத்தமான தங்கம் என்பது எத்தனை Carat?       24 Carat [சுத்தமான தங்கத்தை வைத்து எந்த ஒரு ஆபரணங்களும் செய்யமுடியாது. வேறு உலோகங்கள் கலக்கப்படவேண்டும்.] 3043. Carat அலகு குறிப்பது எதனை?      எத்தனை பங்கு வேறு உலோகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பதை. [22 Carat எனில் அதில் 2 பங்கு வேறு உலோகங்கள் கலக்கப்பட்டிருக்கும்.] 3044. Carat எனும் அலகு எப்படி அப்பெயரை பெற்றது?       எகிப்தியர்கள், Carob Seed எனப்படும் விதைகளில் அளவைக் கொண்டுதான் தங்கத்தை அளவிட்டனர். அதன் பெயரே இன்றளவும் Carat எனுமாறு உள்ளது. 3045. Rose Gold எனப்படுவது?     தங்கத்தோடு அதிகளவு தாமிரம் சேர்க்கப்படும்போது அதன் நிறம் Rose ஆகிறது. இதை , Rose Gold என்பர். 3046. கூவம் ஆற்றின் வேறு பெயர்?       திருவல்லிக்கேனி ஆறு 3047. பூமியின் சகோதரி எனப்படும் கோள்?       வெள்ளி (Venus) 3048. கணினி தயாரிப்பில் முதலிடத்தில் உள்ள நாடு?       அமெரிக்கா 3049. தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை என பாடியவர்?      பாரதிதாசன் 3050. மிக இலேச

பொது அறிவு (304)

3031. டால்ஃபின்களின் கூட்டம் எவ்வாறு ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது?      School அல்லது Pod 3032. Piscivorous என்றால் என்ன?      கடல்சார் உயிரினங்களை மட்டும் உண்ணும் உயிரினங்களை Piscivorous என்பார்கள். டால்ஃபின் இத்தகையது தான். [மீனராசியை Pisces என்பதுண்டு (). Piscis என்பது மீனைக் குறிக்கும் இலத்தீன் வார்த்தை.] 3033. Dolphin என பெயர் வர காரணம்?       கிரேக்கத்தில் Delphus என்றால் கர்ப்பப்பை உடைய மீன் (Fish with a Womb) என பொருளாம். டால்ஃபினும் குட்டியிடும் பாலூட்டி வகைதான். Delphus எனும் சொல்லிலிருந்து தான் Dolphin எனும் ஆங்கிலச்சொல் வந்துள்ளது. 3034. Dolphin என்பதன் தமிழாக்கம்?      ஓங்கில் 3035. ஓங்கில் எத்தகைய பண்புடையது?       ஓங்கில் , மனிதனை போலவே சிந்திக்கும் திறனுடையது. அறிவார்ந்தது. கண்ணாடியில் தம் பிம்பங்களை "நாம் தான்" என அடையாளம் காணமுடிந்தவை ஓங்கில்கள். பல முறை மனிதர்களை காப்பாற்றியுள்ளனவாம். வாழும் கடல் கன்னிகள் , ஓங்கில்களே ! வேட்டை விலங்குகளான சுறா முதலானவை , மனிதர்களை தாக்க முற்படும்போதெலாம் , உயிரை பொருட்படுத்தாமல் ஓங்கில்கள் அவர்களை காக்க முற்படுமாம். 3036

பொது அறிவு (303)

3021. மண்பானை நீர் குளிராக இருக்க காரணம்?      மண்பாண்டத்தில் நுண்ணிய துளைகள் பரவலாக அனைத்து புள்ளிகளிலும் உண்டு. உள்ளேயுள்ள நீர், எப்போதும் மிகவும் நுண்ணிய அளவில் ஆனால் அனைத்து பரப்பிலும் வெளியேறும். வெளியேறும் நீரின் அளவு மிகவும் குறைவு என்பதால் எளிதில் நீராவியுமாகும். ஆக , பானைக்குள் இருக்கும் வெப்பத்தை பெற்று ஆவியாவதால் , மண்பாண்டத்தில் உள்ள நீர் குளிர்ச்சியாகிறது. 3022. பாஸ்டரைசேஷன் (Pasteurization) என்றால் என்ன?      பால் கெட்டு போகாமல் பதப்படுத்தும் முறை. இதை லூயி பாஸ்டியர் கண்டுபிடித்ததால் அவரது பெயரையே இம்முறைக்கு இட்டனர். 3023. பாஸ்டரைசேஷன் எவ்வாறு நடத்தப்படும்?      161 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையில் சுமார் 15 விநாடிகள் கொதிக்கவைக்கப்பட்ட பால் மிக வேகமாக குளிர்விக்கப்படும். 3024. அல்ட்ரா பாஸ்டரைசேஷன் எவ்வாறு நடத்தப்படும்?       161 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையில மிக நீண்ட நேரம் கொதிக்கவைக்கப்பட்ட பால் மிக வேகமாக குளிர்விக்கப்படும். 3025. பாஸ்டரைசேஷனின் இன்னொரு பெயர்?       HTST - High Temperature Short Time 3026. மிகவும் கனமான தனிமம்?       யுரேனியம் [ மிகவும் இலேசான தனிமம் ஹ

பொது அறிவு (302)

3011. ரசமணி என்றால் என்ன?      திரவநிலையில் உள்ள பாதரசத்தை திண்ம நிலையில் கொணரலாம் என்பதே ரசவாதம் (Alchemy). அதாவது , இயலாத ஒன்று. அவ்வாறு திண்மமான கோளவடிவ பாதரசமே ரசமணியாம். 3012. சிவப்பு பாதரசம் என்ற ஒன்று உண்டா?       மெய்யாகவே மெய்யாகவே அப்படி யாதொன்றும் இல்லை. இரண்டு வருடங்களுக்கு முன்பாக, இந்த சிவப்பு மெர்குரி உடையவர்கள் கோடீஸ்வரர்கள் என்று சில வாலில்லா பேசும் குரங்குகளால் பரப்பப்பட்ட புரளியின் காரணமாக பாதரசம் குறித்த தேடலில் அவ்வப்போது சிவப்பு பாதரசம் எட்டிப் பார்க்கிறது. 3013. Mercury என்பது பாதரசம் என்ற திரவ உலோகத்தை குறிப்பதோடு எந்த கிரகத்தையும் குறிக்கிறது?      புதன் எனும் கிரகத்தை Mercury என்றே அழைப்பர். 3014. புதன் ஏன் மெர்குரி என அழைக்கப்படுகிறது?       மெர்குரி என்றால் பாதரசம் என பொருள். ஆனால், பாதரசத்திற்கும் புதனுக்கும் எள்ளளவும் பந்தமில்லை. புதனோ அதிகபடியான இரும்பினால் ஆன கிரகம். இங்கே மெர்குரி என்பது பாதரசத்தை குறிக்கவில்லை. மாறாக , ரோமானிய புராணங்களில் வரும் தூது செய்யும் தேவதையான மெர்குரியை‌ குறிக்கிறது. [மெர்குரி என்பது வழக்கொழிந்துபோன பண்டைய ரோமானிய புராணங்களில

பொது அறிவு (301)

3001. திரவ நிலையில் இருக்கும் உலோகம்?       பாதரசம் (Mercury) [முதன்முதலாக இதை பார்க்கும்போது , அடடே விநோதமா இருக்கேனு விளையாட தூண்டும்... அபூர்வமான இந்த திரவ உலோகம் , ஆபத்தும் கூட... அதிக நச்சுத்தன்மை பாதரசத்தில் உள்ளது.] 3002. பாதரசத்தின் தாது?      சின்னபார் [இயற்கையில் வேதிப்பொருட்கள் பிற வேதிப்பொருட்களோடு இணைந்துதான் காணப்படும். அவ்விதம் சின்னபார் எனப்படும் வேதிப்பொருள் கலவையிலிருந்துதான் பாதரசம் அதிகமாய் கிடைக்கிறது.] 3003. சூதம் என்றால் என்ன பொருள்?       பாதரசம் [சூதம், கொடிய விடமுடைய பாதரசத்தினை குறிக்கும் சொல். இச்சொல் , சித்தர்களால் புழங்கப்படுகிறது. சீனா , எகிப்து போன்ற நாடுகளின் பண்டைய நம்பிக்கையின்படி , பாதரசம் சாகாத வரத்தை தருமாம். அதை குடித்து இறந்துபோன சீன மன்னர் மீண்டும் உயிருடன் வரவேண்டுமென அவரை தகனித்த இடத்தில் பாதரசத்தை பாயவிட்டிருக்கின்றனர். இவர்கள் இப்படியிருக்க, சித்தர்களோ இதன் விசத்தன்மையை நன்கறிந்திருந்தனர்.] 3004. பார்ப்பதற்கு பாதரசம் போலவே தோன்றும் உலோகம்?       கேலியம் (Gallium) [பாதரசம் , அறை வெப்பநிலையிலேயே உருகிவிடும். கேலியம் திடமாய் நிற்கும்.] 3005. ப