முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பொது அறிவு (292)

2911. ஒலியின் (Sound) வேகம்?      1236 கி.மீ / மணி [மின்னல் (Lightening) எனப்படுவது ஒளி (Light ). இடி (Thunder) எனப்படுவது ஒலி (Sound). ஒளி அதிவேகமாக பயணிப்பதால் நம் கண்களுக்கு முதலில் மின்னல் தான்‌ தெரியும். ஒலி , ஒளியை‌ விட மிக குறைவான வேகத்தில் பயணிப்பதால் , இரண்டாவது தான் இடி சத்தம் கேக்கும்.] 2912. ஒலியின் வேகத்தை மிஞ்சும் விமானம்?       Super Sonic [ஆனால் , கற்பனை செய்யமுடியாத அளவுக்கு வேகமாகவுள்ள ஒளியின் வேகத்துக்கு ஈடுகொடுக்கும் அளவிற்கு எந்த வாகனங்களும் கண்டறியப்படவில்லை.] 2913. எதிர்பொருள் (Anti Matter) என்றால் என்ன?       உலகில் அனைத்தும் இருமை பண்பை (Dual Property) உடையவை. ஆண் - பெண் , இரவு - பகல் , நன்மை - தீமை என... அவ்வகையில் பொருள் (Matter) என்ற ஒன்று இருந்தால் அதற்கு எதிரான (Anti Matter) பொருளும் இருக்கும் என வில்லியம் ஹீக்ஸ் கூறினார். 2914. பாசிட்ரான் எனப்படுவது?      எலக்ட்ரான் எதிர் மின்சுமை உடையது என அறிவோம். அதே எலக்ட்ரான் , நேர் மின்சுமை உடையதாகயிருந்தால்....? அதுதான் Positive Electron எனப்படும் பாசிட்ரான். இதுவும் ஓர் எதிர் பொருள் (Anti Matter) தானே... சாதாரண எ

பொது அறிவு (291)

2901. ஊர்ட் மண்டலம் என்றால் என்ன?      1932ல் ஜ்அன் ஊர்ட் (Jan Oort) எண்ணற்ற வால்நட்சத்திர கூட்டங்களை ஓரிடத்தில் குழுமியிருக்கக் கண்டுபிடித்தார். அவ்விடம் ஊர்ட் மண்டலம் (Oort's Space) எனப்படுகிறது. 2902. ஹாலியின் வால் நட்சத்திரம் (Halley's Comet) என்பது?       ஹாலி என்பவர் விண்ணில் மிகப் பெரிய வால் நட்சத்திரத்தை கண்டுபிடித்து அது மீண்டும் 76 ஆண்டுகட்கு பின்னர் தோன்றும் என அறிவியல் சாட்சியாக முழங்கினார். அவர் கூறியவாறே அதுவும் தோன்றியது. ஆனால், அது மீண்டும் தோன்றுவதற்கு 16 ஆண்டுகட்கு முன்னரே ஹாலி இறந்துவிட்டார். எனவே , அந்த வால் நட்சத்திரம் , ஹாலியின் பெயரைத் தாங்கி வந்து செல்கிறது. 2903. உயிரி தோன்ற அடிப்படையான வேதிமூலம்?      ரிபோஸ் எனப்படுவது சர்க்கரையின் வேதிப்பொருள் ஆகும். உயிர்கள் தோன்ற இது அடிப்படையானது. அதாவது , ரிபோஸ் இருந்தால் அதிலிருந்து கண்ணுக்கு தெரியாத நுண்ணிய உயிர்கள் தோன்றும். அதிலிருந்து உயிர்கள் பரிணமிக்கும். எனவே , இந்த வேதிமூலம் தான் உயிர்கள் தோன்ற ஆதிமூலம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் , பூமியில் விழுந்த விண்கல் ஒன்றில் இந்த ரிபோஸ் மூலக்கூறுகள் க

பொது அறிவு (290)

2891. பன்றி எத்தகைய உணவு பழக்கம் உடையது?      பன்றி ஓர் அனைத்துண்ணி (Omnivorous). தாவர உண்ணிகளான (Herbivorous) ஆடு‌ மாடுகளோடு வகைபடுத்தப்பட்டிருந்தாலும் , பன்றி ஓர் எலும்பு கிடைத்தால் கூட விடாமல் உண்டுவிடுமாம். 2892. பன்றியின் மோப்ப சக்தி எத்தகையது?       Truffles எனப்படும் காளான்கள் பூமிக்கடியில் வளர்பவை. பூமிபரப்பிலிருந்து மூன்று அடிக்கு கீழேயுள்ள இவற்றை இதற்கான பன்றி வகையைக் (Truffle Hog) கொண்டு கண்டுபிடிப்பார்களாம். பன்றியின் மோப்ப சக்தி இத்தன்மையது. யானைக்கு துதிக்கை போல தான் பன்றிக்கு அதன்‌ மூக்கும். 2893. பன்றிகள் ஏன் சுத்தமாகயிருப்பதில்லை?       வியப்பென்னவெனில் காட்டுப்பன்றிகள் மிகவும் சுத்தமானவை. தம் இருப்பிடத்தை எப்போதும் தூய்மையாகவே வைத்திருக்குமாம். எப்போது பன்றிகள் மனிதனால் பழக்கப்படுத்தப்பட்டனவோ அப்போதே பன்றிகளுக்கு இப்படிப்பட்ட பழக்கம் தொற்றியதாம் ! பன்றியோடு சேர்ந்த கன்றின் கதியை விளக்கும் நாம் , மனிதனோடு சேர்ந்த பன்றியின் கதியை மறப்பதேனோ.... 2894. செம்மறி ஆடுபோலவே காட்சியளிக்கும் பன்றி?      மங்காலிக்கா (Mangalica) 2895. "கேழல் - எய் - எய்ம்மா - ஏனம் - முளவுமா -

பொது அறிவு (289)

2881. பறவைகளின் முன்னோடி எனப்படும் உயிரினம்?      டீரோடாக்டைல் (Pterodactyl) [இது ஊர்வன பண்புகளை ஒருங்கே பெற்றிருக்கும். டீரோடாக்டைல் என்றால் பறக்கும் பல்லி என்று தான் பொருளாம். அதாவது பறவைகள் பல்லி போன்ற ஊர்வன சந்துக்களிலிருந்து பரிணமித்தன என இதிலிருந்து அறியலாம். உதாரணமாக , கோழியையும் டைனோசரையும் சற்றே உற்று நோக்கினால் இரண்டிற்கும் சிறிது உருவ ஒற்றுமையை காணலாம்.] 2882. முதல் பறவை எனப்படுவது?       ஆர்க்கியாப்ட்ரிக்ஸ் (Archaeopteryx) [புதைப்படிமமாக கண்டறியப்பட்ட இந்த ஆர்க்கியாப்ட்ரிக்ஸ் நீண்ட முள்ளெலும்புகளையுடைய வாலை உடையது. கூரிய பற்களை உடையது. தலையில் செதில்களை உடையது. இவை யாவும் ஊர்வனவற்றின் பண்புகள். மேலும் , இறக்கைகளையும் கூரிய அலகையும் உடையது. முன்னங்கால்கள் இறக்கைகளாக பரிணமித்துள்ளன. பாதி ஊர்வனபண்பும் மீதி பறவைகளின் பண்பும் உடையதாகயிருந்து , ஊர்வனவற்றிற்கும் பறவைகளுக்கும் பாலமாக ஆர்க்கியாப்ட்ரிக்ஸ் உள்ளது. மேலும் , இது பறக்கும் பண்புகள் ஏதுமின்றி குதிக்கும் பண்புகளையே அதிகம் பெற்றுள்ளது. (கோழி , பென்குவின் , கிவி , நெருப்புக் கோழி , வான்கோழி போன்றவைதான் தற்காலத்திய டைனோசர்கள்

பொது அறிவு (288)

2871. விண்வெளியில் முதன்முதலில் மலர்ந்த தாவரம்?       ஜின்னியா (Zinnia) [விண்ணில் முதன்முதலில் வளர்ந்த தாவரம் வேண்டுமாயின் தேல் க்ரெஸ்ஸாக இருக்கலாம். ஆனால், முதன்முதலில் மலர்ந்த தாவரம் ஜின்னியா தான். சூரிய ஒளிக்கு பதிலாக LED ஒளியை பயன்படுத்தி தாவரங்கள் விண்ணில் வளர்க்கப்பட்டன. சூரியகாந்தியைதான்‌ முதலில் மலரச்செய்ய முயற்சித்தனர். சூரிய ஒளியில் தான்‌ நான் மலர்வேன் என அடம்பிடித்ததாலோ என்னவோ ஜின்னியா முந்திக்கொண்டது.] 2872. கண்ணாடி வில்லையின் (Lense) கண்டுபிடிப்பு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது?      கண்ணாடி வில்லை கண்டுபிடிப்பால் தொலைநோக்கியும் நுண்ணோக்கியும் உருவாகின. தொலைவிலிருப்பதை காணமுடிந்ததால் கிரகங்களை தேடும் விண்ணாராய்ச்சியியல் பிறந்தது. நுண்ணியவற்றை காணமுடிந்ததால் நுண்ணுயிரியல் பிறந்தது. 2873. கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிர்களை முதலில் கண்டறிந்தவர்?       ஆண்டன் வான் லூவன்ஹூக் [அந்த நுண்ணியிர்களுக்கு பாக்டீரியா என பெயரிட்டவர் கிறிஸ்டியன் கொட்பிரைட் எகிரன்பர்க்.] 2874. மனித கண்களால் காணமுடிந்த  பாக்டீரியா?      எபுலோபிஸியம் பிஷல்சன் (Epulopiscium fishelson) [Brown Surgeon Fish எனு

பொது அறிவு (287)

2861. தமிழ்நாட்டில் பெட்ரோலியம் கண்டறியப்பட்டுள்ள இடம்?      தஞ்சாவூர் 2862. காவேரியாற்றின் மிக நீளமான கிளை நதி?      பவானி 2863. ஜெயகாந்தனுக்கு இராஜராஜன் விருதைப் பெற்றுத் தந்த நாவல்?      சுந்தரகாண்டம் 2864. வைகை ஆறு தோன்றுமிடம்?      அகத்தியர் குன்றுகள் 2865. மணிமுத்தாறு தோன்றுமிடம்?       கல்வராயன் மலை 2866. விண்வெளியை நோக்கி ஏவப்பட்ட முதல் செயற்கைக்கோள்?       ஸ்புட்னிக் - I [சோவியத் யூனியனின் செயற்கைக்கோளான ஸ்புட்னிக்-I , அக்டோபர் 4 , 1957ல் விண்ணில் ஏவப்பட்டது. 92 நாட்கள் விண்ணில் இது இயங்கியவாறு உலா வந்ததாம்.] 2867. விண்வெளியை நோக்கி ஏவப்பட்ட இரண்டாவது செயற்கைக்கோள்?      ஸ்புட்னிக் - II [இதில் தான் லைக்கா எனப்படும் பெண் நாய் இடம்பெற்றது. 10 நாட்கள் விண்வெளியில் லைக்கா உயிர் வாழ்ந்தது‌. இதை வைத்து , விண்ணில் உயிர்வாழ முடியும் என கண்டறியப்பட்டது. இந்த செயற்கைக்கோளும் சோவியத் யூனியனதுதான்.] 2868. விண்வெளிக்கு சென்ற முதல் மனிதர்?       யூரி ககாரின் (Yuri Gagarin) [சோவியத் யூனியனை சேர்ந்த யூரி தான் முதன்முதலில் விண்வெளி சென்ற மனிதராம். VOSTAK - I என்ற விண்கலத்தில் விண்வெளி சென்ற

பொது அறிவு (286)

2851. ஓரெழுத்து ஒரு மொழி சொல் என்றால் என்ன?       ஓர் எழுத்தையுடைய பொருள் தரும் சொல் [வா , தா , போ , கோ(அரசன்) , ஈ(கொடு) , ஆ(பசு)] 2852. தமிழில் மொத்தம் எத்தனை ஓரெழுத்து ஒரு மொழி சொற்கள் உள்ளன?      42 2853. தொகை சொல் என்றால் என்ன?       ஒரு சொல்லின் கீழ் பல சொற்கள் அடங்குமாயின் அதுவே தொகை சொல்லாம். [இருவினை = நல்வினை , தீவினை ; முத்தமிழ் = இயல் , இசை , நாடகம்] 2854. கீழ்வாய் எண் என்றால் என்ன?       ஒன்று எனும் முழு எண்ணை விட குறைந்த பகுதிகள் யாவும் கீழ்வாய் எண்கள். [1/2 - அரை ; 1/4 - கால்] 2855. மேல்வாய் எண் என்றால் என்ன?       ஒன்றிற்கும் மேலான முழு எண்கள் யாவும்.[2,3,4,.......................,ஈறிலி] 2856. உலகின் சமதளமான (தட்டையான) நாடு?      மாலத்தீவு 2857. இந்திய வானாராய்ச்சி மையத்தின் (ISRO) தலைமையகம் எங்குள்ளது?       பெங்களூர் 2858. "கிளிகளை வீட்டில் வளர்த்தால் கைது" - ஏன்?       கிளிகளும் அழிந்துவரும் அரிய பறவைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுவிட்டன. Online-ல் கிளி வணிகம் அமோகமாக நடைபெறுகிறது. செல்லப்பறவையாக அநேக வீடுகளில் கிளிகள் வளர்க்கப்படுகின்றன. அதனாலேயே , கிளிகளின்

பொது அறிவு (285)

2841. சான்று மற்றும் சாட்சி - வித்தியாசம்?       சான்று என்பது ஆதாரம் / அத்தாட்சி(Evidence or Testimony). சாட்சி என்பது கண்காட்சி (Eye Witness). 2842. தப்பு மற்றும் தவறு - வித்தியாசம்?       தெரிந்து செய்தால் அது தப்பு. தெரியாமல் செய்தால் அது தவறு. 2843. அகழ்வாராச்சியாளர்களின் சொர்க்கம்?      எகிப்து 2844. எகிப்திலுள்ள உலர் உடல்கள் (Mummies) சேதமடையாமலிருக்க காரணம்?       வேதியியல் முறையில் பாதுகாக்கபடுவதுதான் காரணம். இதற்கு எம்பாமிங் (Embalming) என்று பெயர். 2845. கீச்சகத்தில் (Twitter) இலச்சினை (logo) யாக இருக்கும் பறவையின் பெயர் என்ன?       இந்த இலச்சினை 2012ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் பெயர் Larry. கூடைப்பந்தாட்ட வீரர் Larry ன் நினைவாக இதற்கு இப்பெயர் சூட்டப்பட்டது. 2846. தமிழ்நாட்டில் காடுகள் ஆராய்ச்சி மையம் எங்கு அமைந்துள்ளது?      மேட்டுப்பாளையம் 2847. தமிழ்நாட்டில் நெல் ஆராய்ச்சி மையம் எங்கு அமைந்துள்ளது?       ஆடுதுறை 2848. தமிழ்நாட்டில் கரும்பு ஆராய்ச்சி மையம் எங்கு அமைந்துள்ளது?      சிறுகமணி / கடலூர் / வேலூர் 2849. தமிழ்நாட்டில் மண் மற்றும் நீர் ஆராய்ச்சி மையம் எங்கு அம

பொது அறிவு (284)

2831. கோட்டை நகரம் எனப்படும் தமிழக மாவட்டம்?       வேலூர் 2832. சிமெண்ட் நகரம் எனப்படும் தமிழக மாவட்டம்?       அரியலூர் 2833. தேரழகு நகரம் எனப்படும் தமிழக மாவட்டம்?       திருவாரூர் 2834. பல்லவர் பூமி எனப்படும் தமிழக மாவட்டம்?      செங்கல்பட்டு 2835. தென்னிந்தியாவின் நுழைவாயில் எனப்படும் தமிழக மாவட்டம்?      சென்னை [தமிழ்நாட்டின் நுழைவாயில் என்று அழைக்கப்படுவது “தூத்துக்குடி மாவட்டம்”.] 2836. நாம் உணவினால் பெற்ற சக்தி என்ன?      உணவினால் தான் நாம் யாதொரு காரியத்தையும் யாதோர் எண்ணத்திலும் செய்கிறோம். அறிவியலின் படி , அடினோசின் டிரை பாஸ்பேட் (Adenosine Tri Phosphate) எனப்படும் ATP தான் நாம் பெற்ற சக்தி. மறக்கவேண்டாம். நாம் உண்ணுவதனால் நமக்கு கிடைக்கும் சக்தி என்பது ATP தான். [Biology Students : நியாபகம் வருதே நியாபகம் வருதே....] 2837. கூடுகட்டும் பாம்பு வகை?       இராஜநாகம் [இராஜநாகம் , கூடுகட்டி அதில் வாழ்வதில்லை. மாறாக முட்டையிட்டு அடைகாத்து குஞ்சுபொறிப்பதற்காக மட்டுமே பிரத்யேகமாக கூடு கட்டுகிறது. இன்னொரு விசயம். என்னதான் இராஜநாகம் என பெயரிருந்தாலும் இது நாகவகையே இல்லை. இதன் கழுத்து

பொது அறிவு (283)

2821. கொடிகாத்த மூதாட்டி எனப்படுபவர்?      மாதங்கனி ஹெஸ்ரா (வங்காளம்) 2822. இந்தியாவில் தொடங்கிய முதல் வங்கி?       பஞ்சாப் தேசிய வங்கி 2823. சென்னை சைதாப்பேட்டையின் பழைய பெயர்?       கண்டர்மேடு 2824. சீனப் பெருஞ்சுவரை கட்டிய மன்னர்?       ஷிங்ஹ்வாங்டி 2825. செயற்கை இதயத்தை கண்டுபிடித்தவர்?     வில்லியம் கோல்ஃப் 2826. செடி , கொடிகள் மற்றும் புற்களென அனைத்து தாவரங்களும் மழை பெய்ததும் பச்சை பசேலென மாறி, பூமித்தாயை பசும் உடையால் போர்த்தி விடுகின்றன. இதே நாம் நீரிட்டு வளர்த்தால் அவ்வளவு சீக்கிரம் செழிப்பில்லை. ஏன்?      வளிமண்டல நைட்ரஜன் , நைட்ரிக் ஆக்சைடாக மாறிதான் மழையோடு பூமிக்கு வருகிறது. மேலும் , இது நைட்ரேட்டாக மாறும்போது தாவரங்களுக்கு சிறந்ததொரு உரமாகி விடுகிறது. நீரிலேயே உரத்தை சேர்த்து மழை, ஊட்டுகிறது. 2827. அமிலமழையின் போது மழையின் தன்மை?       மழையில் நைட்ரிக் ஆக்சைடின் அளவு அதிகமெனில் ,  அமிலத்தன்மை பெறும். 2828. மழையில் மீன்கள் பெய்யுமா?      கிணறுகளில் நீரிரைப்பான்களை (Pump) உபயோகிக்கும்போது குழாயின் வழியாக சில நேரங்களில் நீருடன் சிறு மீன்கள் வருவதுண்டு. நீர்க்கெண்டி தேற்

பொது அறிவு (282)

  2811. இரட்டைக்கொம்பு காண்டாமிருகம் எங்கு காணப்படுகிறது?      ஆப்ரிக்கா 2812. ஆறு‌ மாதம் வரை உணவின்றி வாழும் நீர்வாழ் உயிரினம்?       நீலத்திமிங்கலம் 2813. விண்வெளியை அடைந்த முதல் விலங்கு?      லைக்கா (நாய்) 2814. தைல மரத்து இலைகளை உண்ணும் விலங்கு?      கோலா கரடி 2815. சிந்தி என்பது?      குஜராத்திய பசு வகை 2816. குதிரை பந்தயத்திற்கு பெயர்போன இங்கிலாந்தின் பகுதி?      எப்சம் (Epsom) 2817. முதல் இதயமாற்று அறுவைசிகிச்சையை (Heart Transplant Surgery) செய்தவர்?       கிறிஸ்டியன் பெர்னார்ட் 2818. முதல் இதயமாற்று அறுவைசிகிச்சை யாருக்கு செய்யப்பட்டது?       லூயிஸ் வஷ்கான்ஸ்கி [சிகிச்சையின் பதினெட்டு நாட்களில் வஷ்கான்ஸ்கி காலமானார். Washkansky died of double pneumonia eighteen days after the transplant because of a weakened immune system.] 2819. முதல் இதயமாற்று அறுவைசிகிச்சை எந்த ஆண்டு செய்யப்பட்டது?       1967 2820. முதன் முதலில் சீனா எந்த நாட்டுடன்  போர் புரிந்தது?      பிரிட்டன்

பொது அறிவு (281)

  2801. கனிமசுரங்கம் எனப்படும் மாவட்டம்?      இராணிப்பேட்டை 2802. சந்தன நகரம் எனப்படும் மாவட்டம்?       திருப்பத்தூர் 2803. சமயநல்லிணக்க பூமி எனப்படும் மாவட்டம்?      நாகப்பட்டினம் 2804. கிழக்கு தொடர்ச்சி மலையின் தொட்டில் எனப்படும் மாவட்டம்?      விழுப்புரம் 2805. நெசவாளர்களின் வீடு எனப்படும் மாவட்டம்?      கரூர் 2806. மழையை ஒட்டி விடப்படும் சிவப்பு எச்சரிக்கை (Red Alert) எனப்படுவது?      மிகவும் மோசமான வானிலையை குறிக்க. [இந்த அலர்ட் விடுக்கும்போது, மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைய வேண்டும், பெரும்பாலான பகுதிகளில் மின் இணைப்பு, சாலை வசதிகள் துண்டிக்கப்படும். ] 2807. மழையை ஒட்டி விடப்படும் இளஞ்சிவப்பு எச்சரிக்கை (Orange Alert) எனப்படுவது?      ஒரு சில இடங்களில் மட்டும் கடுமையான வானிலையை குறிக்க. 2808. ஆம்பர் எச்சரிக்கை (Amber Alert) எனப்படுவது?      அதிகபடியான வெப்பநிலையை குறிக்க. 2809. மழையை ஒட்டி விடப்படும் மஞ்சள் எச்சரிக்கை (Yellow Alert) எனப்படுவது?      அடுத்த சில நாட்களில் வானிலை மோசமாக வாய்ப்புள்ளது என்பதை எச்சரிக்க. 2810. பச்சை எச்சரிக்கை (Green Alert) எதற்காக?      எவ்வி

பொது அறிவு (280)

  2791. புள்ளப்பூச்சி என்றால் என்ன?       உண்ணாப்பிள்ளை என்றும் அழைக்கப்படும் இந்த புள்ளப்பூச்சி (Gryllotalpa brachyptera) குழி தோண்டும் பூச்சி என பொருள்படுகிறது. கிராமங்களில் , இது தொப்புளின் வழியாக உடலுக்குள் சென்றுவிடும் என்ற பேச்சு இந்த பூச்சி வரும்போதெல்லாம் உடன்வரும். அவ்வளவு ஏன்.... புள்ளப்பூச்சிய கொண்ணா புள்ள பொறக்காதுனே வாசகம் இருக்குன்னா பாத்துக்கோங்க... [புள் = தோண்டு ; துளை செய் : : புல்லாங்குழல் - துளைகளிடப்பட்ட கருவியாதலின் புள்-புல்லாங்குழல் ஆனது.] 2792. அன்ன பறவை உண்மையிலேயே பாலுடன் கலந்த நீரிலிருந்து பாலை தனியே பிரிக்குமா?       பால் எல்லாம் குடிக்க தருவதில்லை (தந்தாலும் குடிப்பதில்லை) . அன்ன பறவை பாலையும் நீரையும் பிரிக்குமென்பது பொய் தான். அவ்வாறென்றால் இந்த கூற்றிற்கு பொருளென்ன?  சுடுசாதத்தில் (அன்னம்) பால் கலந்த நீரை ஊற்றி வைத்து பாருங்கள்.‌ பாலை அன்னம் உறிஞ்சிவிட , தெளிந்த நீர் பிரிந்து நிற்கும். அன்னம் என்று தான் முன்னோர்கள் சொன்னார்கள். அது பறவை அன்னமல்ல! பசிதீர்க்கும் அன்னம்! 2793. காண்டாமிருகத்தின் கொம்பில் மருத்துவம் உள்ளது எனும் கூற்று சரியா?       இயற்கையை

பொது அறிவு (279)

2781. நவீன கம்பர் எனப்படுபவர்?      மீனாட்சிசுந்தரனார் 2782. இசுலாமிய கம்பர் எனப்படுபவர்?      உமறுப்புலவர் 2783. கிறித்துவ கம்பர் எனப்படுபவர்?      எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை 2784. தமிழுக்கு வித்திட்டவர் எனப்படுபவர்?      பரிதிமாற்கலைஞர் 2785. தமிழை ஆளென வளர்த்து மாண்புறச் செய்தவர்?     தேவநேய பாவாணர் 2786. நவம்பர் 1, குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட காரணம்?      மேற்கில் திருவனந்தபுரத்தையும் கிழக்கே திருநெல்வேலியையும் எல்லைகளாய் கொண்ட குமரி மாவட்டம் , தமிழகத்தோடு இணைக்கப்பட்ட நாள் நவம்பர் 1-ம் தேதி (1956) ஆகும். இதன் பொருட்டு குமரி மாவட்டத்திற்கு நவம்பர் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்தது மாவட்ட நிர்வாகம். 2787. சென்னை என்றால் பொருள் என்ன?       முதலில் சென்னை , சென்னப்ப நாயக்கர் பட்டினம் எனப்பட்டதாம். காரணம் , இது சென்னப்ப நாயக்கருக்கு சொந்தமான பகுதியாம். மேலும் தமிழில் , சென்னி என்றால் உயர்ந்த , உச்சி மற்றும் சிறப்பு என்றெல்லாம் பொருள். தமிழகத்தின் உச்சியில் சிறந்த நகராயும் தலைநகராயும் உள்ளது சென்னை தானே.... ஆனால் , இராமலிங்க வள்ளலாருக்கு ஏனோ சென்னையின் சனசமுத்திரம

பொது அறிவு (278)

2771. உலகில் அணுகுண்டை தயாரித்த முதல் நாடு?      ஜெர்மனி 2772. இந்திய கப்பல்படையின் தலைமையகம் எங்குள்ளது?      புதுடெல்லி 2773. ஜாவா மைனர் எனப்படும் தீவு?      சுமத்ரா 2774. முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்ட வைட்டமின்?      வைட்டமின் ஏ 2775. உலகில் அதிகமாக புழக்கத்தில் உள்ள பணம்?     டாலர் 2776. பெட்ரோல்/டீசல் போன்ற எரிபொருட்கள் எவ்வாறு வண்டியை இயக்கும் ஆற்றலை தோற்றுவிக்கின்றன?      இவை எரிபொருட்களாதனின் , நீராவியை உருவாக்கும் பொருட்டு எரிக்கப்படுகின்றன. இந்த நீராவியைக் கொண்டு மின் இயற்றியை (Generator) சுற்றச்செய்வதன் மூலம் மின் உற்பத்தி அரங்கேறுகிறது. 2777. பெட்ரோலுக்கு மாற்று எரிபொருளாக பயன்படுவது?       அண்மைக் காலங்களில் எத்தனால் ஒரு மாற்று எரிபொருளாய் முன்வைக்கப் படுகிறது. நேரடியாக ஊர்திகளில் எரிபொருளாகவும், கன்னெய் (பெட்ரோல்) போன்ற பிற ஊர்தி எரிபொருட்களோடு கலந்தும் இதனைப் பயன்படுத்தலாம். எரிபொருளுக்காக எத்தனாலைப் பயன்படுத்துவது பல நாடுகளில் இருந்தாலும் பெரும்பாலும் அமெரிக்காவிலும், பிரேசிலிலும் தான் அதிகமாகப் பயன்படுத்தப் படுகிறது. அமெரிக்காவில் சோளத்தில் இருந்தும், பிரேசிலில் கரும்

பொது அறிவு (277)

  2761. தீபாவளி - பெயர்க்காரணம்?      தீபாவளி = தீபம் + ஆவளி. ஆவளி என்றால் வரிசை என்று பொருள். உதாரணமாக , நாமாவளி என்ற சொல்லை எடுத்துக்கொண்டால் , நாமம் + ஆவளி என பிரிந்து நாமங்களின் (பெயர்களின்) வரிசை என்றாகும். ஆக , தீபாவளி என்றால் ஒளிவரிசை என்றும் அகல் விளக்குகளின் வரிசை என்றும் பொருள். அதுசரி... அகல்விளக்குலாம் இப்போ எங்கயிருக்கு!! ஆகாயத்தை கிழிக்கும் அதிர்வேட்டுகள் தான் எங்கும். 2762. தமிழ்நாட்டின் எலுமிச்சை நகரம்?      புளியங்குடி (திருநெல்வேலி) [எலுமிச்சை பழம் -- புளிப்பு -- புளியங்குடி] 2763. தமிழ்நாட்டில் துப்பாக்கி தொழிற்சாலை எங்குள்ளது?      நவல்பட்டு (திருச்சி) 2764. தமிழ்நாட்டில் இரயில்பெட்டிகள் தயாரிக்கும் இடம் எங்குள்ளது?      பெரம்பூர் (சென்னை) 2765. Cat's Eye (பூனையின் கண்) எனப்படும் நவரத்தின வகை?      வைடூரியம் 2766. உடன்கட்டை ஏறும் பழக்கம் இருந்ததைக் கூறும் சங்ககாலத்திய நூல்?      சிலப்பதிகாரம் 2767. சிலப்பதிகாரத்தில் கோவலனுக்கு தவறான தீர்ப்பளித்த மன்னன் யார்?       பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் 2768. சித்தன்னவாசல் ஓவியங்கள் எந்த மாவட்டத்தில் உள்ளன?  

பொது அறிவு (276)

2751. முதன்முதலில் இரப்பர் தாவரத்தைக் கண்டுபிடித்தவர்?      கிறிஸ்டோபர் 2752. பெரியம்மையை உண்டாக்கும் வைரஸ்?       வேரியோலா வைரஸ் 2753. சிறுநீர்ப்பையில் கற்கள் உருவாகக் காரணம்?      புரதம் மற்றும் பாஸ்பேட் பற்றாக்குறையுள்ள உணவை உட்கொள்ளுதல் 2754. கரும்புச்சாற்றில் உள்ள குளுக்கோசின் சதவீதம்?       30 % 2755. எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் மருந்து?      அசிட்டோதயடிமின் AZT 2756. மிகுதியான நீர்யானைகள் வாழக்கூடிய கண்டம் எது?      ஆப்பிரிக்கா 2757. மீன் எண்ணெயில் குணமாகும் முதன்மையான நோய் எது?      எலும்பு மெலிவு நோய் (ரிக்கட்ஸ்) 2758. பாலில் உள்ளதை விட மிகுதியான கால்சியம் உள்ள காய்கறி எது?       வெங்காயம் 2759. இந்தியாவின் உயர்ந்த சிகரம்?      காட்வின் ஆஸ்டின் 2760. இந்தியாவில் முதன்முதலில் வெளிவந்த பெண்கள் பத்திரிக்கை?     இந்தியன் லேடீஸ்

பொது அறிவு (275)

2741. இந்தியாவில் தனக்கென்று சின்னத்தை (Logo) பெற்ற முதல் நகரம்?      பெங்களூரு 2742. கொரில்லா போர் முறை என்றால் என்ன?      எந்த ஒரு முறையையும் சாராத போர் முறை 2743. GST இந்தியாவில் எப்போது நடைமுறைக்கு வந்தது?       சூலை 1 , 2017 2744. பன்றி காய்ச்சலை உருவாக்கும் வைரஸ்?       H1N1 வைரஸ் 2745. உலகின் முதல் மின்கலத்தை (Battery) உருவாக்கியவர்?     அலெசாண்ட்ரோ வோல்ட்டா 2746. கிலி என்றால் என்ன பொருள்?      பயம் 2747. பெயரெச்சம் என்றால் என்ன?      முற்றுப் பெறாத ஒரு வினைச்சொல் (வெர்ப்) ஒரு பெயர்ச்சொல்லைக் (நவுன்) கொண்டு முடிந்தால் அது பெயரெச்சம் ["எழுதிய கடிதம்" - இதில் எழுதிய என்பது வினையை குறிக்கும் வினைச்சொல் என அறிவோம்..... கடிதம் என்பது பெயர்ச்சொல் எனவும் அறிவோம்..... " எழுதிய கடிதம் " - ஆமாம்... எழுதிய கடிதம் தான்.... அந்த கடிதத்துக்கு என்ன தான் ஆச்சு? அதுதான் தெரியல..... அதனாலதான் இது பெயரெச்சம்..... சரியாக இது முற்றுப்பெறாததால் சரியாக நம்மால் எதையும் புரிந்துணர முடியவில்லை. எழுதிய கடிதம் என்னதான் ஆச்சு !? சீத்தாராமம் படத்துல கூட அவங்களோட கடிதம் என்ன ஆச்சுனு ஒ

பொது அறிவு (274)

 2731. மக்கள் ஜனாதிபதி (People's President) எனப்படுபவர்?       அப்துல் கலாம் 2732. அப்துல்கலாம் அவர்களின் தாயின் பெயர்?      ஆஷியம்மா 2733. அப்துல்கலாம் இந்திய ஜனாதிபதியாக தேர்வானபோது பிரதமர்?      வாஜ்பாய் 2734. தம்மை ஒத்த அலைநீளத்தில் (Wavelength) சிந்திப்பவர் என அப்துல்கலாமால் புகழப்பெற்றவர்?      நெல்லை சு.முத்து 2735. இளைஞர்களின் மனதில் அப்துல்கலாம் விதைத்த வாசகம்?     கனவு காணுங்கள் 2736. மாநகராட்சியின் தலைவர்?      மேயர் 2737. மாநகராட்சியின் நிர்வாக அலுவலர்?       ஆணையர் 2738. டெங்கு காய்ச்சலுக்கு காரணமான வைரஸ்?       பிளேவி வைரஸ் 2739. உடலுக்கு ஆற்றல் அளிப்பவை?      கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புகள் 2740. உடலுக்கு வளர்ச்சி அளிப்பவை?     புரதங்கள்

பொது அறிவு (273)

2721. அப்துல்கலாம் அவர்கள் எப்போது பிறந்தார்?      இராமேஸ்வரத்தில் அக்டோபர் 15 , 1931 அன்று பிறந்தார். இதன் நிமித்தம் அக்டோபர் 15, தமிழகத்தில்  இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. மேலும் இந்த நாளை உலக மாணவர்கள் தினமாக ஐ.நா.சபை அறிவித்துள்ளது. 2722. அப்துல்கலாம் இந்தியாவின் குடியரசு தலைவராக பதவி வகித்த காலம்?       2002 முதல் 2007 வரை இந்தியாவின் 11வது குடியரசு தலைவராக பதவி வகித்தார். 2723. அப்துல்கலாம் விண்வெளி பொறியியல் படிப்பு எங்கு பயின்றார்?       சென்னை MIT 2724. அப்துல்கலாம் அவர்களின் சுயசரிதை நூல்?       அக்னி சிறகுகள் 2725. அப்துல்கலாம் தொடங்கிய இ-பத்திரிக்கை?      பில்லியன் பீட்ஸ் 2726. அப்துல்கலாம் அவர்களால்  1980ல் விண்ணில் ஏவப்பட்ட துணைக்கோள்?      ரோஹினி 2727. அப்துல்கலாம் தீவு என பெயர்மாற்றம் செய்யப்பட்ட ஒடிசா மாநிலத்தின் தீவு?       வீலர் தீவு 2728. அப்துல்கலாம் கடைசியாக எங்கு உரை நிகழ்த்தினார்?       ஷில்லாங் 2729. அப்துல்கலாம் நிகழ்த்திய கடைசி உரையின் பெயர்?      பூமியை வாழத்தகுந்த கிரகம் ஆக்குவோம் 2730. அப்துல்கலாம் அவர்களின் தேசிய நினைவிடம் எங்குள்ளது?     பேக்க

பொது அறிவு (272)

     2711. உலகிலேயே அதிக யானைகள் உள்ள நாடு?       ஜிம்பாப்வே 2712. உலகிலேயே அதிக சாலைகள் உள்ள நாடு?       அமெரிக்கா 2713. உலகிலேயே அதிக பிறப்பு விகிதம் உள்ள‌ நாடு?       நேபாளம் 2714. உலகிலேயே அதிகளவு தங்கம் கிடைக்கும் நாடு?      தென்னாப்பிரிக்கா 2715. இந்தியாவின் எஃகு தொழிலின் தந்தை எனப்படுபவர்?     டாடா 2716. ரஷ்யாவின் தேசிய விளையாட்டு?      சதுரங்கம் (Chess) 2717. அமெரிக்காவின் தேசிய விளையாட்டு?      அடிப்பந்தாட்டம் (Baseball) 2718. ஸ்பெயினின் தேசிய விளையாட்டு?       காளைச்சண்டை 2719. கனடாவின் தேசிய விளையாட்டு?      பனி வளைதடிப்பந்தாட்டம் (Ice Hockey) 2720. ஜப்பானின் தேசிய விளையாட்டு?     ஜப்பானிய மல்யுத்தம் (Sumo)

பொது அறிவு (271)

2701. Enceladus எனப்படுவது?      சனி கிரகத்தின் நிலவுகளில் ஒன்று 2702. சூரியக் குடும்பத்தின் உயரமான மலை?       Olympus Mons [இது பூமியின் எவரெஸ்ட் சிகரத்தை விட 3 மடங்கு உயரமானது.] 2703. நிலவில் ஏன் காலடித்தடம் பதியாது?       நிலவில் காற்று மண்டலம் கிடையாது. காலை பதித்து பின் எடுத்தாலும் காற்று ஊடகம் ஏதுமின்றி தடம், தடமின்றி மறையுமாம்... 2704. சூரியனும் தற்சுழற்சி உடையதுதான். எத்தனை நாட்களில் சூரியன் தன்னை முழுவதுமாக சுற்றுகிறது?       25-35 நாட்கள் 2705. சூரியக் குடும்பத்தில் எந்த கிரகத்தில் அதிக எரிமலைகள் உள்ளன?     வெள்ளி 2706. மனிதர்களை கண்டு பயப்படும் வியாதி?       ஆண்ட்ரோஃபோபியா (Androphobia) 2707. இந்தியாவில் வாக்காளர் அட்டையை அறிமுகம் செய்த முதல் மாநிலம்?      ஹரியானா 2708. தமிழகத்தில் முயல் வளர்ப்பில் முதலிடம் வகிக்கும் மாவட்டம்?      தர்மபுரி 2709. கண்ணாடியை கரைக்கும் அமிலம்?      ஹைட்ரோ குளோரிக் அமிலம் 2710. புளிப்புச்சுவையுடைய பழங்களில் பெரும்பாலும் எந்த வைட்டமின் இருக்கும்?     வைட்டமின் C 

பொது அறிவு (270)

2691. மின்சார பிளக்கின் மூன்று ஊசிகளிலும் கீறல் இருப்பதற்கான காரணம் என்ன?       ஊசிகளின் வழியாக மின்சாரம் பாயும் போதெல்லாம், வெட்டுக் காரணமாக மின்சாரம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது, இதனால் அவை விரைவாக வெப்பமடையாது. அதனால் சேதம் ஏற்படும் அபாயம் இல்லை. 2692. வச்சிரவல்லி எனப்படுவது?      பிரண்டை [பிரண்டை நம்மூர்களில் சாதாரணமாக வளரும் அசாதாரண மூலிகை! வேர்முதல் குருத்து நுனி வரை மருந்துதான்! புதைக்குழிகளின் மேல் நட்டு வைக்கும் வழக்கம் உண்டு. பிரண்டை கொடியும் குழியை மேவி செழிப்பதுண்டு. இந்த பிரண்டை செழிப்பது போல் வம்சம் செழிக்கும் என்ற எண்ணவோட்டம் அக்காலம் தொட்டு இருந்துவருகின்றது. உலகிலேயே கடினமான பொருளான வைரத்தையே தகர்க்கும் சக்தி பிரண்டைக்கு உண்டாம். பிரண்டையை துவையல்/சட்னி செய்து உண்டால் உடல் வலி வேறு வழியின்றி ஓடிடும் ! கொஞ்சம் கவனமா இருக்கணும்.... குருத்து பிரண்ட தான் துவையலுக்கு... விளைஞ்ச பிரண்டய சாப்டா , வாயெல்லாம் அரிக்கும்.... (அனுபவம் ) இதற்கான தீர்வு , புளி சேர்த்து சமைப்பதுதான்....] 2693. தாவரம் - சொல்லின் காரணம்?       தாவரம் என்ற சொல்லை சொல்லிக்கொண்டேயிருந்தால் , தாவர

பொது அறிவு (269)

  2681. 100% எழுத்தறிவு பெற்ற முதல் மாவட்டம்?      எர்ணாக்குளம் 2682. சிமெண்ட் உற்பத்தியில் தமிழ்நாட்டின் இடம்?       நான்காம் இடம் 2683. மின் அடுப்பில் உள்ள சூடேற்றும் பொருள் எதனால் தயாரிக்கப்படுகிறது?      நைக்ரோம் 2684. ஒளி செல்லும் வேகத்தை கண்டுபிடித்த விஞ்ஞானி யார்?      ரோமர் 2685. காற்றாலைகள் அமைக்க தேவையான காற்றின் சராசரி வேகம்?      18 கி.மீ 2686. படமியின் (Camera) படப்பிடிப்பு வில்லை (Lens) வட்ட வடிவில் இருந்தும் புகைப்படம் கட்ட வடிவில் கிடைக்க காரணம்?       படமியின் படப்பிடிப்பு வில்லை தன் மீது படும் ஒளியை சதுர/செவ்வக வடிவில் குவிப்பதால் புகைப்படமும் அவ்வடிவை பெறுகிறது. இதற்கு வில்லையும் சதுர/செவ்வக வடிவில் இருந்தால் வேலை சுலபமாகலாமே என்ற எண்ணம் வரலாம். ஆனால் , வில்லையானது வட்ட வடிவில் உள்ளபோது தான் காட்சி பெருக்கம் / சுருக்கம் (Zoom Adjustments) எளிதாகிறது. 2687. அம்மான் என்றால் என்ன பொருள்?      தாயுடன் பிறந்தவர்களைக் குறிக்கும் ஆண்பால் சொல். அதாவது , அம்மாவுடன் பிறந்தவர் அம்மான். (தாய்மாமன்) அன்றைய அம்மான்தான் இன்று மாமா , மாமோய்.... மாம்ஸ் என்றெல்லாம் உருத்தரித்து நிற

பொது அறிவு (268)

2671. பொன்னி நதி எனப்படுவது?      காவேரி 2672. பொன்னி அரிசியின் பெயர்க்காரணம்?       பொன்னி நதியாகிய காவேரியின் படுகைகளில், அரியலூர், திருச்சி, மதுரை மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி  ஆகியப் பகுதிகளில் அதிகமாகப் பயிரிடப்படுவதால் இவ்வாறு பெயர். 2673. நீரை வேகமாக உறிஞ்சும் மண்?      செம்மண் 2674. இரும்பு ஆக்சைடு கலந்த மண்?       துருக்கல் மண் (இரும்பு ஆக்சைடு = துரு) 2675. துருக்கிய நாட்டு மக்களின் துக்க நிறம்?      ஊதா 2676. அமெரிக்க பண புழக்கத்தில் ஒரு டாலர் (Dollar) என்பது எத்தனை சென்ட் (cents)?      100 Cents 2677. இந்திய திட்ட நேரம் எந்த நகரத்தின் நேரத்தை குறிக்கிறது?       அலகாபாத் 2678. இந்தியாவின் பழமையான பொது அஞ்சல் அலுவலகம் எங்கு அமைந்துள்ளது?       சென்னை 2679. பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்ட நவீன வாக்காளர் அடையாள அட்டை எந்த மாநிலத்திற்கு முதன்முதலாக வழங்கப்பட்டது?       திரிபுரா 2680. இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் எங்கு அமைந்துள்ளது?      விசாகப்பட்டினம்

பொது அறிவு (267)

  2661. தமிழ்நெறியில் ஓர் ஆண்டை எத்தனை பருவங்களாக பிரிப்பர்?      ஆறு 2662.தமிழர்தம் ஆறு பருவங்கள்?      கார் - கூதிர் - முன்பனி - பின்பனி - இளவேனில் - முதுவேனில் 2663. கார் காலம் எனப்படுவது?       மழை காலம் (ஆவணி , புரட்டாசி) 2664. கூதிர் காலம் எனப்படுவது?       குளிர் காலம் (ஐப்பசி , கார்த்திகை) 2665. ஒரு நாளின் ஆறு பொழுதுகள்?      மாலை - யாமம் - வைகறை - விடியல் - நண்பகல் - எற்பாடு 2666. எந்த தட்பவெப்பத்திலும் உறையாத தனிமம்?      ஹீலியம் 2667. இராஜநாகம் எவ்வளவு நீளமுடையது?       18 அடிகள் 2668. சிறுகுடல் எவ்வளவு நீளமுடையது?      22 அடிகள் 2669. அதிக இனிப்பான பொருள்?      தாலின் 2670. தமிழ்நாட்டின் இயற்கை பூமி எனப்படுவது?      தேனி

பொது அறிவு (266)

2651. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் எத்தனை சதவீதம் இந்தியர்கள் பணிபுரிகிறார்கள்?      34 % 2652. உலகிலேயே மிகப்பெரிய கண் வங்கி  உள்ள நாடு?      இலங்கை 2653. உலகிலேயே அதிளவில் வெண்ணெய் சாப்பிடும் மக்கள் யாவர்?       நியூசிலாந்து நாட்டினர் 2654. அமெரிக்க அதிபரின் பயணத்திற்கு மட்டுமே பயன்படும் விமானம்?       ஏர்ஃபோர்ஸ் I 2655. மனித உடலில் இரத்தம் ஒருமுறை சுற்றிவர எத்தனை நொடிகளாகும்?       64 நொடிகள் 2656. சேரர்கள் ஆண்ட பகுதிகள்?      கோவை மற்றும் கேரளா 2657. சோழர்கள் ஆண்ட பகுதிகள்?      திருச்சி மற்றும் தஞ்சை 2658. பாண்டியர்கள் ஆண்ட பகுதிகள்?       மதுரை மற்றும் திருநெல்வேலி 2659. சேர சோழ பாண்டிய நாட்டின் நதிகள்?       சேர நாடு - பொய்கை நதி      சோழ நாடு - காவிரி நதி      பாண்டிய நாடு - வைகை நதி 2660. தென்னர் என்பது யாரை குறிக்கும் சொல்?      பாண்டியர்கள்

பொது அறிவு (265)

  2641. தமிழ் இமயம் எனப்படுபவர்?      வ.சுப.மாணிக்கம் 2642. தமிழ் வியாசர் எனப்படுபவர்?       நம்பியாண்டார் நம்பி 2643. தமிழ் மாறன் எனப்படுபவர்?       நம்மாழ்வார் 2644. தமிழ் தென்றல் எனப்படுபவர்?      திரு.வி.கலியாணசுந்தரனார் 2645. தமிழ் தாத்தா எனப்படுபவர்?      உ.வே.சுவாமிநாதர் 2646. ஒரு குறிப்பிட்ட பொருளையோ மனிதரையோ சுட்டிக் காட்டும் பொருளில் வரும் எழுத்து?      சுட்டு எழுத்து 2647. சுட்டு எழுத்துகள் யாவை?       'அ', 'இ', உ' என்ற மூன்று எழுத்துகளும் சுட்டெழுத்துகள் 2648. அண்மையில் (அருகில்) உள்ளவற்றைக் குறிக்க உதவும் சுட்டு?       அண்மைச்சுட்டு [இ என்ற சுட்டெழுத்து அண்மையைக் குறிக்க உதவுகிறது. சான்றுகள் : இக்காட்சி, இவன்,இவர்,இங்கே.] 2649. சேய்மையில் (தொலைவில்) உள்ளவற்றைச் சுட்டிக் காட்ட உதவும் சுட்டு?       சேய்மைச் சுட்டு [அ என்ற சுட்டெழுத்து தொலைவைக் குறிக்க உதவுகிறது. சான்றுகள் : அக்கடிதம்,அவன்,அவர்,அங்கே.] 2650. தமிழ்நாட்டில் வழக்கில் இல்லாத சுட்டெழுத்து?       உ [சேய்மைக்கும் அண்மைக்கும் இடையில் உள்ளவற்றைக் குறிக்க 'உ' என்ற சுட்டெழுத்து பயன்பட்டது.

பொது அறிவு (264)

2631. சீனக்குடியரசின் தந்தை எனப்படுபவர்?      சன்யாட்சன் 2632. தமிழ்நாட்டில் குறிஞ்சி மலர் எங்கு மலர்கிறது?     நீலகிரி [குறிஞ்சி மலரும் நீலநிறம் தான்....] 2633. செஞ்சிக்கோட்டை அமைந்துள்ள மலை?      கிருஷ்ணகிரி 2634. பேஸ்பால் விளையாட்டு களம் (Ground) எவ்வாறு அழைக்கப்படுகிறது?       டைமண்ட் (Diamond) 2635. நம் உடலிலுள்ள செல்லின் அளவு எந்த அலகினால் குறிக்கப்படுகிறது?       மைக்ரான் 2636. தமிழில் முதல் உரைநடை நூல்?       வீரமாமுனிவர் எழுதிய "பரமார்த்தகுரு கதைகள்" 2637. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை பற்றிய நூல்களில் மிக முக்கியமானது?     குஷ்வந்த் சிங் எழுதிய Train to Pakistan 2638. மனிதனுக்கு நிமோனியா சளி காய்ச்சல் எந்த வைரசால் பரவுகிறது?       அடினோ வைரஸ் 2639. இரத்தத்தில் ஆக்சிஜனை சுமந்து செல்லும் திறனை குறைப்பது?      கார்பன் மோனாக்சைடு 2640. அரியணையை‌ துறந்து வைணவத்தொண்டாற்றிய மன்னர்?      குலசேகரர்

Genetics II

அல்லீல்களின் இரண்டு வகைகள் : ஓங்கு அல்லீல் மற்றும் ஒடுங்கு அல்லீல். Dominant and recessive alleles are terms used in genetics to describe the interactions between different forms of a gene (alleles) and how they influence the expression of a specific trait. They are typically notated using letters. ஓங்கு (Dominant) அல்லீல் பெரிய எழுத்தால் இது குறிக்கப்படும். அதாவது, Aa என்பதில் A என்பது ஓங்கு அல்லீல். சரி… Aa என்றால் என்ன? ஒரு ஜீனோடைப் தானே!? ஒரு ஜீனோடைப்பில் ஓங்கு அல்லீல் இருந்தால், வெளிப்படும் மரபு பண்பு ஓங்கு அல்லீலினதுதான். உதாரணமாக, A என்பது ஊதா நிற கண்விழிக்கும், a என்பது பச்சை நிற கண்விழிக்குமான அல்லீல்கள் என்போம். அல்லீல்களை ஒருசேர கூறுவதுதானே ஜீனோடைப்… Aa என்ற ஜீனோடைப், ஓங்கு அல்லீலின் பண்பாகிய, ஊதா கருவிழியை வெளிப்படுத்தும். Genotype-ல் எது ஓங்கு அல்லீலோ, Phenotype-ல் அதுவே வெளிப்படும். A dominant allele is one that, when present in an individual's genotype, will mask the effect of the corresponding recessive allele. In other words, the dominant allele's trait will be

Genetics I

  Traits மரபுரீதியாக கடத்தப்படும் பண்புகள்தான் Traits எனப்படுகின்றன. உதாரணமாக, கண்விழியின் நிறம், முடி அமைவு, உயரம் முதலானவை மரபுரீதியாக கடத்தப்படுவை… இவை யாவும் Traits தான். A "trait" in genetics and biology refers to a specific characteristic or feature of an organism, such as eye color or hair texture, which is determined by the combination of alleles (gene variants) inherited from one's parents. மெண்டல் விதிகள் Traits, ஒரு தலைமுறையிலுருந்து மற்றொரு தலைமுறைக்கு கடத்தப்படுவதை விவரிக்கும் விதிகள். Mendelian genetics is based on the principles discovered by Gregor Mendel and focuses on the inheritance of traits from one generation to the next. ஜீனோடைப் ஜீன் என்பது மரபுவிதியை தன்னகத்தே வைத்திருக்கும் DNA துண்டம். ஒருவருடைய கண்ணின் நிறம் இன்னதாக இருக்கவேண்டும் என நிர்ணயிப்பது இந்த விதிதான். அல்லீல் என்பது ஒரே ஜீனின் விதவித தோற்றங்கள். அதாவது, ஒரு ஜீனானது கண்ணின் நிறம் ஊதாவாக இருக்கக்கடவட்டும் என விதிக்கும். மற்றொன்றோ, பச்சை மீதுதான் என் இச்சை என புதிய விதிவகுக்கும். இவைதான்

பொது அறிவு (263)

2621. இந்தியாவில் பூலோக சுவர்க்கம் எனப்படுவது?      காஷ்மீர் பள்ளத்தாக்கு 2622. நான்கு வரிகளையுடைய தேசிய கீதத்தை உடைய நாடு?     ஜப்பான் 2623. கல்கத்தா விமான நிலையத்தின் பழைய பெயர்?       டம்டம் 2624. விஷமில்லாத பாம்புகளில் மிகப்பெரியது?      அனகோண்டா 2625. எரிமலையே இல்லாத கண்டம்?      ஆஸ்திரேலியா 2626. உலகம் ஐம்பூதங்களால் ஆனது என கூறும் இரு சங்ககால இலக்கியங்கள்?       தொல்காப்பியம் , புறநானூறு 2627. ஏறுதழுவுதல் எந்த நிலத்தில் நடைபெறும் வீர விளையாட்டு?     முல்லை நிலம் [முல்லை = காடும் காடு சார் நிலமும்....] 2628. சிறந்த ஊர்களை குறிக்கும் சொல்?      புரம் [எ.கா : சுப்பிரமணியபுரம்....] 2629. அடர்ந்த காடுகள் அதிகமுள்ள மாநிலம்?       அருணாச்சலபிரதேசம் 2630. எலிகள் மூலம் பரவும் நோய்களில் மிக முக்கியமானது?       பிளேக்