முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பொது அறிவு (228)

2271. தமிழ்த் தாத்தா எனப்படுபவர்?      ஊ.வே.சா 2272. தமிழ்த்  தென்றல் எனப்படுபவர்?      திரு.வி.கலியாணசுந்தரனார் 2273. மொழிஞாயிறு எனப்படுபவர்?      தேவநேயப்பாவாணர் 2274. அருந்தமிழ் செல்வி எனப்படுபவர்?      ஔவையார் 2275. மூதறிஞர் எனப்படுபவர்?        இராஜாஜி 2276. பறவைகளின் இறக்கைகள் எந்த உறுப்பின் பரிணாமம்?      முன்னங்கால்கள் 2277. நம் தோலில் உள்ள அடுக்குகள் யாவை?       எபிடெர்மிஸ் (மேல் அடுக்கு) , டெர்மிஸ் (நடு அடுக்கு) , ஹைப்போடெர்மிஸ் (கீழ் அடுக்கு) 2278. நம் நகத்தில் பிறை நிலவினை போல் காணப்படும் பகுதியின் பெயர்?      லுனுலா [லூனார் என்றால் நிலவுடன் தொடர்புடைய என பொருள்.] 2279. எலும்பை எந்த உறை சூழ்ந்துள்ளது?      பெரியாஸ்டினம் 2280. ஆமணக்கு இலைகளை உண்ணும் பட்டுப்பூச்சியில் இருந்து பெறப்படும் பட்டு?        ஆரண்டிப்பட்டு

பொது அறிவு (227)

2261. உலகின் மிக நீளமான குகை?       மம்மோத் குகை 2262. நின்றுகொண்டு அடைகாக்கும் பறவை?      பென்குவின் 2263. ஜிப்கோ இயக்கம் எதற்காக உருவாக்கப்பட்டது?      காடுகளை பாதுகாக்க 2264. பூமியின் தோல் எனப்படுவது?       மண் 2265. தேசிய கொடியிலுள்ள அசோக சக்கரத்தின் நிறம்?        கருநீலம் 2266. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி குறித்து கூறும் நூல்?       பட்டினப்பாலை 2267. இந்தியாவில் எந்த மாநிலத்தில் மட்டும் ஆசிய சிங்கங்கள் அதிகமாக உள்ளன?      குஜராத் 2268. முகர்ந்தால் வாடிடும் மலர் என வள்ளுவர் எந்த மலரை குறிப்பிடுகிறார்?      அனிச்சம் 2269. மின்னணு கழிவுகளில் அதிகம் காணப்படும் உலோகம்?       காப்பர் 2270. தேன் மழை என்ற நூலின் ஆசிரியர்?       சுரதா

பொது அறிவு (226)

  2251. காற்றில் அதிகபடியாய் கலந்துள்ள வாயு?      நைட்ரஜன் 2252. காற்றை அதிகபடியாய் மாசுபடுத்தும் வாயு?       கார்பன் மோனாக்சைடு 2253. அதிக காடுகளை கொண்ட இந்திய மாநிலம்?      மத்திய பிரதேசம் 2254. நிலவொளி பூமியை அடைய ஆகும் காலம்?       1.3 நொடிகள் [சூரிய ஒளி பூமியை அடைய 8.3 நிமிடங்கள் ஆகும். நிலவுக்கு தான் சுயமாய் ஒளி கிடையாதே.... சூரிய ஒளியை தானே பிரதிபலிக்கிறது.... அப்படியென்றால் சூரிய ஒளி 1.3 நொடிகளில் பூமியை அடைகிறது என்று கொண்டாலும் சரிதான்.... பரீட்சையில் எழுதினாலும் சரிதான்... மதிப்பெண் மட்டும் வழங்கப்பட மாட்டாது....] 2255. தாவர வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட முதல் தாவரம்?       புகையிலை 2256. விரல் நுனி வெளிச்சங்கள் என்ற நூலை எழுதியவர்?       தாராபாரதி 2257. பூமி சூரியனுக்கு மிக தொலைவில் இருக்கும் மாதம்?      ஜீலை             2258. பூமி சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் மாதம்?       ஜனவரி 2259. தனையை என்றால் என்ன பொருள்?      மகள் (தனையள் என்றும் கூறலாம் [தனையன் - மகன்]) 2260. தமக்கை என்றால் என்ன பொருள்?       சகோதரி [தமையன் - சகோதரன்]

பொது அறிவு (225)

2241. தாஜ் மஹால் என்ற சொல்லுக்கு என்ன பொருள்?       அரசியின் மணிமுடி 2242. விமான டயர்களில் நிரப்பப்படும் வாயு?      நைட்ரஜன் 2243. நெல் மற்றும் புல் போன்றவற்றின் இலை எவ்வாறு அறியப்படுகிறது?      தாள் 2244. கரும்பு மற்றும் சோளம் போன்றவற்றின் இலை எவ்வாறு அறியப்படுகிறது?       தோகை 2245. மனித உடலில் காணப்படும் மிக நீண்ட செல்?       நரம்பு செல் 2246. அமிலமழை ஏற்பட காரணமான வேதி பொருட்கள்?      கந்தகம் (Sulphur) மற்றும் நைட்ரஜன் (Nitrogen) 2247. அதிக அமிலமழை பொழியும் நாடுகள்?      அமெரிக்கா மற்றும் கனடா 2248. வைட்டமின் C எனப்படும் அமிலம்?       அஸ்கார்பிக் அமிலம்   2249. மனிதனின் கண்ணீரில் உள்ள அமிலம்?       சியாலிக் அமிலம் 2250. மனிதனின் உமிழ்நீரில் உள்ள அமிலம்?        ஹைலூரோனிக் அமிலம்

பொது அறிவு (224)

 2231. மது அருந்துவதால் பாதிக்கப்படும் முதல் உறுப்பு?       கல்லீரல் 2232. இந்திய அரசியலமைப்பின் ஆன்மா அல்லது இதயம் எனப்படும் விதி?       விதி 32 2233. கால் பாதத்தில் எத்தனை எலும்புகள் உள்ளன?      பதினாறு எலும்புகள் 2234. நட்சத்திர மீனுக்கு எத்தனை கண்கள்?       ஐந்து [பொதுவாக நட்சத்திர மீன்களுக்கு எத்தனை கைகள் உள்ளனவோ , அத்தனை கண்கள் இருக்கும். ஏனெனில் கையின் கூரான முனையில் தான் கண் இருக்கும். ஐந்து கைகள் உள்ள பட்சத்தில் ஐந்து கண்கள்.... நாற்பது கைகள் உள்ள பட்சத்தில் நாற்பது கண்கள்....] 2235.சக்கரம் எந்த கற்காலத்தில் உருவாக்கப்பட்டது?        புதிய கற்காலம் 2236. தென்னிந்தியாவின் ஸ்பா (Spa  -  நீரூற்று)?       குற்றாலம் 2237. தென்னிந்தியாவின் நயாகரா எனப்படும் அருவி?       ஒகேனக்கல் 2238. தென்னிந்நியாவின் தாஜ் மஹால்?       திருமலை நாயக்கர் மஹால் 2239. இந்தியாவின் சமாதான மனிதர்?      லா ல் பகதூர் சாஸ்திரி 2240. மாஸ்டர் பிளாஸ்டர் எனப்படும் கிரிக்கெட் வீரர்?        சச்சின் டெண்டுல்கர்

பொது அறிவு (223)

2221. ஆசிட் என்ற ஆங்கில வார்த்தையின் பொருள்?      புளிப்பு 2222. இந்திய தேர்தல் ஆணையம் அமைந்துள்ள இடம் எது?      புது தில்லி 2223. முப்படைகளுக்கும் தலைவர் யார்?       ஜனாதிபதி 2224. இந்தியாவில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே ஜனாதிபதி யார்?       நீலம்சஞ்சீவி ரெட்டி 2225. உலகின் மிகப்பெரிய ஜனநாயக குடியரசு நாடு எது?      இந்தியா 2226. TN 72 என்ற வாகன பதிவு எண் உடைய‌ மாவட்டம்?      திருநெல்வேலி 2227. TN 76 என்ற வாகன பதிவு எண் உடைய‌ மாவட்டம்?      தென்காசி 2228. TN 66 மற்றும் TN 99 என்ற வாகன பதிவு எண்களை உடைய‌ மாவட்டம்?      கோயம்புத்தூர் 2229. TN 01 முதல் TN 10 வரையிலான வாகன பதிவு எண்களை உடைய‌ மாவட்டம்?      சென்னை   2230. மிகவும் மகிழ்ச்சியான விலங்கு?      குவாக்கா (Quokka) [எப்போதும் சிரித்த முகமாய் இருப்பதனால் (Smiley Face) குவாக்கா மிகவும் மகிழ்ச்சியான விலங்கு என பட்டம் பெற்றுள்ளார் ! அவரும் அவ்வப்போது , 'சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும்... சிரிக்காத நாளில்லையே....' என்ற பாடலை கேட்பவர்தான்...]

பொது அறிவு (222)

 2211. மனித உடலில் எத்தனை விலா எலும்புகள் உள்ளன?       12 ஜோடிகள் (24) 2212. உண்மை விலா எலும்புகள் (True Ribs) என்பவை?      முதல் 7 ஜோடிகள் மட்டுமே மார்பெலும்புடன் இணைந்துள்ளன. இவை , உண்மை விலா எலும்புகள். 2213. பொய் விலா எலும்புகள் (False Ribs) என்பவை?      8 , 9 மற்றும் 10வது ஜோடிகள் ஒரு சேர 7வது ஜோடி எலும்புகளோடு இணைந்துள்ளன. இவை , பொய் விலா எலும்புகள். 2214. மிதக்கும் விலா எலும்புகள் (Floating Ribs) என்பவை?      11 மற்றும் 12வது ஜோடிகள் எந்த எலும்புகளோடும் இணையவில்லை. இவையே மிதக்கும் விலா எலும்புகள். 2215. மனித நுரையீரல்களில் எந்த நுரையீரல் பெரியது?      வலது நுரையீரல் 2216. ECG என்றால் என்ன?       Electro Cardio Graphy (ECG) எனப்படுவது இதயத்தின் ஒவ்வொரு மின் அசைவுகளையும் துல்லியமாக அறியச் செய்யும் மருத்துவ கருவியாகும். இதயத்திலுள்ள சிறு சிறு கணுக்கள் மிகவும் சிறிதளவில் இதயத்தில் மின் உற்பத்தி செய்பவை. இவற்றினால் தான் இதயம் சரிவர இயங்குகிறது. இந்த மின் அளவினை , தொடர்ந்து மாறிக்கொண்டேயிருக்கும் வரைபடமாக (Graph) காட்ட ECG பயன்படுகிறது. இதன் மூலமாக மருத்துவர்கள் இதயத்தின் ஒவ்வொரு அ

பொது அறிவு (221)

2201. முதல் தமிழ் கணினிக்கு சூட்டப்பட்ட பெயர்?      திருவள்ளுவர் 2202. நாடும் மொழியும் நமது இரு கண்கள் என்றவர்?       பாரதியார் 2203. இந்தியாவில் நீர் மற்றும் மின் சக்தியில் இயங்கும் முதல் விமான நிலையம்?      இந்திராகாந்தி விமான நிலையம் 2204. தமிழ்நாட்டில் மூன்று பருவங்களிலும் மழை பெறும் மாவட்டம்?       கன்னியாகுமரி 2205. பூட்டானின் தேசிய விளையாட்டு?       வில்வித்தை   2206. முதன் முறையாக விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கிய இந்திய மாநிலம்?      தமிழ்நாடு 2207. கிராண்ட் அணைக்கட் எனப்படுவது?       கல்லணை 2208. சங்ககாலம் என்பது?       கி.மு 300 முதல் கி.பி 300 வரை 2209. Printer Machine-னை கண்டுபிடித்தவர்?      செஸ்டர் கார்ல்சன்   2210. சிவப்பு கண்ணாடியின் வழியாக பச்சை நிறத்தை பார்த்தால் எவ்வாறு தோன்றும்?       க ருப்பு நிறமாக

பொது அறிவு (220)

2191. மண்ணுளி பாம்பின் (Sand Boa) பயன்?       மண்ணிலேயே உண்டு மண்ணிலேயே கழிவிட்டு மண்ணை உரமாக்கும் மகத்துவம் மண்ணுளி பாம்பினது. [மண்ணுளி பாம்பின் வால் பகுதி பிற‌ பாம்புகளை போல கூராகமல் தட்டையாகயிருப்பது, இதற்கு இரண்டு தலைகள் இருப்பது போல் காட்டுகிறது. யாமிருக்கும் இடத்தில் சகல செல்வங்களும் கதித்தோங்கும் என்பது போல மண்ணுளி பாம்பு வசிக்கும் மண்ணெங்கும் செடி கொடிகள் செழித்தோங்கும். மேலும் , இது நாக்கைக் கொண்டு நக்கினால் கேட்கும் திறன் இழந்துவிடுவோம் என்ற பேச்சு பரவலானது. நாக்கைக் கொண்டு நக்குவதற்கும் செவிதிறன் இழப்பதற்கும் என்ன தொடர்பு? இந்த பாம்பினை கொண்டு தீராத நோயெலாம் தீர்க்கலாம்..... மனித எதிர்ப்பு சக்தியை தூண்டலாம்...... என்றெலாம் அளந்துவிட்டு இதை அதிக விலைக்கு விற்கும் சதியொன்று பன்னெடுங்காலமாக அரங்கேறி வருகின்றது. இதன் பின்னணி விவசாயத்தை சரிப்பதே! ஏனெனில் இந்த உயிர் , உரத்திற்கென உயர் பங்களிப்பது ! இது வசிக்கும் இடத்தை சூழ்ந்திருக்கும் பயிர்கள் செழிப்பது உறுதி! இது கடித்து யாரும் இறந்ததாக எந்த பதிவுகளும் இல்லை! ஏனென்றால் இதற்கு விசம் கிடையாது. இனி‌ யாரும் உங்கள் தோட்டங்களிலோ அருகா

பொது அறிவு (219)

  2181. காய்கறிகளின் ராஜா எனப்படுவது?       கத்தரிக்காய் [காய்கறிகளின் ராணி - வெண்டைக்காய்] 2182. நறுமண பொருட்களின் ராஜா எனப்படுவது?       மிளகு [நறுமண பொருட்களின் ராணி - ஏலக்காய்] 2183. கருப்பு தங்கம் அல்லது கருப்பு வைரம் எனப்படுவது?      நிலக்கரி [வெள்ளை தங்கம் எனப்படும் உலோகம் - பிளாட்டினம்] [வெள்ளை தங்கம் எனப்படும் பயிர் - பருத்தி] 2184. பச்சைத் தங்கம் எனப்படுவது?      மூங்கில் [சிவப்புத் தங்கம் எனப்படுவது -  குங்குமப்பூ] 2185. திரவ தங்கம் எனப்படுவது?       பெட்ரோலியம் [திரவ வெள்ளி எனப்படுவது பாதரசம்] 2186. திருக்குறளில் இடம்பெறாத உயிரெழுத்து?      ஔ 2187. திருக்குறளின் தொடக்க மற்றும் இறுதியெழுத்து?      அ மற்றும் ன் [குறளில் தமிழ் என்ற சொல்லே கிடையாது. தமிழ் தாய் ஈன்ற நூலாக இருப்பினும் உலக மக்கள் மொழி பாகுபாடின்றி பொதுவென கற்றுணரவே இவ்வாறென்போம்! ஆயினும் , தமிழின் முதலெழுத்தாகிய "அ"-வில் தொடங்கி , தமிழின் இறுதியெழுத்தாகிய "ன்"-இல் முடிகிறது. வள்ளுவர் தமிழை எழுதாவிடினும் எதார்த்தம் தமிழ் சாரத்தை ஈர்த்துவிட்டது!] 2188. திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்?      த

பொது அறிவு (218)

 2171. ஏற்காட்டின் பழைய பெயர்?      ஏரிக்காடு 2172. நாகப்பட்டினத்தின் பழைய பெயர்?      சோழகுலவல்லிபட்டினம் 2173. திருச்செந்தூரின் பழைய பெயர்?      திருச்சீரலைவாய் 2174. மானாமதுரையின் பழைய பெயர்?       வானவன் மருததுறை 2175. விருதுநகரின் பழைய பெயர்?       விருதுப்பட்டி   2176. இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படும் இடம் எங்குள்ளது?       நாசிக் 2177. இந்தியாவில் சுனாமி எச்சரிக்கை மையம் எங்குள்ளது?      ஹைதராபாத் 2178. இந்தியாவில் அதிக மாடுகள் உள்ள மாநிலம்?      உத்திரபிரதேசம் 2179. நாய்க்கு புகழ் பெற்ற ஊர்?       இராஜபாளையம்   2180. ஜல்லிக்கட்டுக்கு புகழ் பெற்ற ஊர்?       அலங்காநல்லூர்  

பொது அறிவு (217)

  2161. இந்திய இராணுவத்தின் முப்படைகள் யாவை?       இராணுவப்படை , விமானப்படை , கடற்படை 2162. அக்னி பாத் திட்டம் என்பது?       நான்கு ஆண்டுகட்கு இராணுவத்தின் முப்படைகளிலும் இளைஞர்களை பணியாற்ற வழிவகை செய்யும் திட்டம்   2163. புதுக்கோட்டையின் பழைய பெயர்?       புதுகை 2164. சேலத்தின் பழைய பெயர்?      சேரலம்  [சேரர்கள் ஆண்ட நிலம் என்ற பொருளில்...] 2165. ஈரோடு - பழைய பெயர்?       ஈரோடை   [பெரும்பள்ளம் ஓடை மற்றும் பிச்சைக்காரன்பள்ளம் ஓடை ஆகிய இரண்டு ஓடைகளுக்கு நடுவே அமைந்துள்ளதால் ஈரோடை (இரண்டு ஓடை) எனும் பெயரானது. ஈரோட்டிற்கு மறந்தை, உறந்தை, மயிலை, மத்தியபுரி, கபாலபுரி என்று பல்வேறு பெயர்களை ஈரோடு தலபுராணம் கூறுகிறது.]  2166. காவிரி பூம்பட்டினத்தின் பழைய பெயர்?       பூம்புகார் 2167. சிதம்பரத்தின் பழைய பெயர்?       தில்லை 2168. தஞ்சாவூரின் பழைய பெயர்?       தன்செய்யூர் 2169. தனுஷ்கோடியின் பழைய பெயர்?      வில்முனை  [தனுஷ் என்றால் வில் என பொருள்.] 2170. மயிலாடுதுறையின் பழைய பெயர்?      மாயவரம்

பொது அறிவு (216)

2151. கும்பகோணத்தின் பழைய பெயர்?      குடந்தை 2152. திண்டுக்கல்லின் பழைய பெயர்?       திண்டீஸ்வரம் 2153. நாமக்கல்லின் பழைய பெயர்?      ஆரைக்கல் 2154. பொள்ளாச்சியின் பழைய பெயர்?      பொழில்வாய்ச்சி (பொழில் என்றால் சோலை என பொருள்) 2155. வத்தலகுண்டு - ஊரின் பழைய பெயர்?       வெற்றிலை குன்று   2156. கரூரின் பழைய பெயர்?      வஞ்சி 2157. இராமநாதபுரத்தின் பழைய பெயர்?      முகவை 2158. விருத்தாசலத்தின் பழைய பெயர்?      திருமுதுகுன்றம் 2159. பழனியின் பழைய பெயர்?      திருவாவினன்குடி 2160. வேதாரண்யத்தின் பழைய பெயர்?      திருமறைக்காடு

பொது அறிவு (215)

2141. குத்துவிளக்கிற்கு பெயர் பெற்ற ஊர்?       நாச்சியார் கோவில் (கும்பகோணம்) 2142. நாதசுவரத்திற்கு பெயர் பெற்ற ஊர்?       நரசிங்கம்பேட்டை (தஞ்சாவூர்) 2143. வெற்றிலைக்கு பெயர் பெற்ற ஊர்?      கும்பகோணம் ["கும்பகோணத்து வெத்திலைய மடிடா!" என்ற சினிமா பாடல் , "கும்பகோணம் வெத்தல! உன் பாசம் எனக்கு பத்தல!" என்ற கானா பாடல் , "கும்பகோணம் கொளுந்து வெத்தலயா" என்ற தெம்மாங்கு பாடல் என அநேக பாடல்களில் கும்பகோணத்திற்கும் வெற்றிலைக்குமான தொடர்பை அறியலாம்... இந்த பாடல்களையெல்லாம் இப்படிப்பட்ட புரிந்துணர்வோடு கேட்டால் நாலு GK Question-க்காவுது தேறும்!] 2144. கிராம்பிற்கு பெயர் பெற்ற ஊர்?      கன்னியாகுமரி 2145. அரிவாள் உற்பத்திக்கு பெயர் பெற்ற ஊர்?      திருப்பாச்சி 2146. நெட்டை தென்னைக்கு பெயர் பெற்ற ஊர்?      ஈத்தாமொழி (கன்னியாகுமரி) 2147. வெண்பட்டுக்கு பெயர் பெற்ற ஊர்?      சேலம் 2148. பனியனுக்கு பெயர் பெற்ற ஊர்?      திருப்பூர் 2149. கல்சிற்பத்திற்கு பெயர் பெற்ற ஊர்?       மாமல்லபுரம் 2150. மரசிற்பத்திற்கு பெயர் பெற்ற ஊர்?      அரும்பாவூர் (பெரம்பலூர்)

பொது அறிவு (214)

2131. அதிரசத்திற்கு பெயர் பெற்ற ஊர்?       வெள்ளியனை (கரூர்) 2132. டிகிரி காஃபிக்கு பெயர் பெற்ற ஊர்?       கும்பகோணம் 2133. பேரிக்காய்க்கு பெயர் பெற்ற ஊர்?       கொடைக்கானல் 2134. நெல்லிக்காய்க்கு பெயர் பெற்ற ஊர்?       குற்றாலம் 2135. கொத்தமல்லிக்கு பெயர் பெற்ற ஊர்?      அரியலூர் 2136. பால்கோவாவிற்கு பெயர் பெற்ற ஊர்?       ஸ்ரீவில்லிபுத்தூர் 2137. கடலை மிட்டாய்க்கு பெயர் பெற்ற ஊர்?       கோவில்பட்டி 2138. மலை வாழை பழத்திற்கு பெயர் பெற்ற ஊர்?      சிறுமலை 2139. தலையாட்டி பொம்மைக்கு பெயர் பெற்ற ஊர்?      தஞ்சாவூர் 2140. கண்டாங்கி சேலைக்கு பெயர் பெற்ற ஊர்?      காரைக்குடி

நொதிகள்

DNA-ன் இரட்டைச்சுருளை அவிழ்த்து தனி தனி Strand-களாக்கும் நொதி : ஹெலிகேஸ் ATP சக்தியினால் Strand-களில் உள்ள பிணைப்புகளை (Rungs) உடைத்து, ஒற்றை Strand-ஐ சுற்றி வந்து Double Helix-ஆகயிருப்பதை, அவிழ்த்திடுமாம் ஹெலிகேஸ்! அதாவது, ஏணிப்படியின் ஒரு காலை மட்டும் சுற்றிவருவது… ஆற்றலைக்கொண்டு ஒவ்வொரு Rung-ஆக உடைத்துக்கொண்டேபோவது…   DNA to Helicase : சுத்தி சுத்தி வந்தீக… என்ன தத்த தனியா பிரிச்சீக… The DNA double helix is held together by hydrogen bonds between complementary base pairs (A-T and C-G). Helicase uses energy from ATP (adenosine triphosphate) to disrupt these hydrogen bonds. After breaking the hydrogen bonds, helicase starts to rotate or spin around the DNA strand to which it's bound. This rotation creates tension in the DNA molecule, causing the double helix to unwind. DNA பிரதியாக்கத்தின் தொடக்கப்புள்ளியை ஏற்படுத்தும் நொதி : RNA பிரைமேஸ் “இந்த இடத்தில் கிழியுங்கள்” என, RNA Primer-ஐ DNA-யின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் SKETCH MARK போல வைக்குமாம் பிரைமேஸ். DNA Primase synthe

Leading & Lagging Strand உருவாக்கம்

DNA-யின் இரண்டு Strand-களும் எத்தகைய அமைப்பை உடையவை? Anti-Parallel Direction! அதாவது, ஒரு Strand மேல்நோக்கி சென்றால், மற்றொன்று கீழ்நோக்கி செல்லும். Antiparallel strands in DNA refer to the unique arrangement of the two DNA strands within the double helix, where one strand runs in the 5' to 3' direction while the other runs in the opposite 3' to 5' direction. This arrangement is crucial for complementary base pairing, with adenine (A) always bonding with thymine (T) and cytosine (C) bonding with guanine (G). It allows DNA to serve as a stable and accurate template for processes like replication and transcription, ensuring the faithful transmission of genetic information from one generation to the next. 5’ to 3’ எனும் திசையில் செல்லும் DNA Strand : முன்னோடும் Strand (Leading Strand) 3’ to 5’ எனும் திசையில் செல்லும் DNA Strand : பின்தங்கிய Strand (Lagging Strand) புது DNA Strand-களை உருவாக்கும் நொதி : பாலிமரேஸ் DNA என்பதே பல நியூக்ளியோடைடுகள் சேர்ந்ததுதான் என அறிவோம். இந

பொது அறிவு (213)

2121. நியூட்ரான் இல்லாத தனிமம்?       ஹைட்ரஜன் 2122. மோரிகல்சர் எனப்படுவது?       மல்பெரி செடி வளர்ப்பு 2123. வெர்மிகல்சர் எனப்படுவது?       மண்புழு வளர்ப்பு 2124. செரிகல்சர் எனப்படுவது?       பட்டுப்புழு வளர்ப்பு 2125. எபிகல்சர் எனப்படுவது?      தேனி வளர்ப்பு 2126. பலாப்பழத்திற்கு பெயர் பெற்ற ஊர்?       பண்ருட்டி (கடலூர்) 2127. கரும்புக்கு பெயர் பெற்ற ஊர்?       தேனி 2128. தேனுக்கு பெயர் பெற்ற ஊர்?       மார்த்தாண்டம் (கன்னியாகுமரி) 2129. கருப்பட்டிக்கு பெயர் பெற்ற ஊர்?       உடன்குடி (தூத்துக்குடி) 2130. பரோட்டாவிற்கு புகழ் பெற்ற ஊர்?      விருதுநகர்

பொது அறிவு (212)

2111. பொன்னி எனப்படும் ஆறு?       காவேரி 2112. புதுவைக் கவிஞர் எனப்படுபவர்?      பாரதிதாசனார் [புதுவை - புதுச்சேரி] 2113. இயற்கைக் கவிஞர் எனப்படுபவர்?      பாரதிதாசனார் 2114. பாரதிதாசனார் , சாகித்ய அகாதெமி விருது பெற்ற நூல்?       பிசிராந்தையார்   2115. அதிகளவில் பெண் நீதிபதிகள் உள்ள மாநிலம்?      தமிழ்நாடு 2116. ஒடிசாவின் பழைய பெயர்?      ஒரிசா   2117. கேரளாவின் பழைய பெயர்?      கொச்சி    2118. தமிழ்நாட்டின் பழைய பெயர்?      மதராஸ் மாகாணம்   2119. கர்நாடகத்தின் பழைய பெயர்?       மைசூர் மாகாணம்   2120. உத்தரகண்ட் மாநிலத்தின் பழைய பெயர்?      உத்ராஞ்சல்

பொது அறிவு (211)

2101. இரயில் படுக்கைகள் செய்ய பயன்படும் மரம்?       பைன் 2102. தீக்குச்சிகள் செய்ய பயன்படும் மரம்?       இலவம் 2103. உமிழ்நீரில் உள்ள நொதி?       டயலின் 2104. ஸ்ரீ லங்காவின் தலைநகர்?       கொழும்பு 2105. நேபாளத்தின் தலைநகர்?       காத்மண்டு 2106. "புதுநெறி கண்ட புலவர்" என வள்ளலாரை போற்றியவர்?       பாரதியார் 2107. உலகிலேயே பெரிய மாங்குரோவ் காடுகள் (சதுப்புநிலக்காடுகள்) எங்குள்ளன?      சுந்தரவனம் - மேற்கு வங்காளம் 2108. இந்தியாவில் முதல் இரப்பர் தோட்டம் எங்கு அமைக்கப்பட்டது?       கேரளா 2109. இந்தியாவின் முதல் பெண் காவல் நிலையம் எந்த இடத்தில் உள்ளது?      கோழிக்கோடு - கேரளா 2110. சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாக கருதப்படும் நூல்?       மணிமேகலை

பொது அறிவு (210)

2091. மாம்பழத்தின் தாயகம்?       தெற்கு ஆசியா 2092. மாம்பழம் எந்த நாடுகட்கெலாம் தேசிய பழம்?      இந்தியா , பாகிஸ்தான் , பிலிப்பைன்சு 2093. பங்களாதேசின் தேசிய மரம்?       மாமரம் 2094. மாம்பழ உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு?       உலக மொத்த மாம்பழ உற்பத்தியில் பாதிக்கு மேல் இந்தியாவில் தான் உற்பத்தியாகிறது. அடுத்து சீனா,  மூன்றாவது தாய்லாந்து. அதிகளவில் மாம்பழ ஏற்றுமதியும் நாம் செய்கின்றோம். 2095. மாம்பழங்களின் மன்னன்?       அல்போன்சா மாம்பழம் 2096. இந்தியாவுக்கு வெளியே ஆட்சிமொழியாக அறிவிக்கப்பட்ட ஒரே மொழி?      தமிழ் 2097. பெரியபுராணத்தில் திருநாடு எனப்படுவது?       சோழநாடு 2098. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் சச்சின் எனப்படுபவர்?       மித்தாலி ராஜ் 2099. கிரிக்கெட் மட்டைகள் செய்ய பயன்படும் மரம்?      வில்லோ 2100. ஹாக்கி மட்டைகள் செய்ய பயன்படும் மரம்?      மல்பெரி  

பொது அறிவு (209)

 2081. மலிவான விலையில் பெட்ரோல் விற்பனை செய்யும் நாடு?      வெனிசுலா 2082. மலிவான விலையில் தங்கத்தை விற்பனை செய்யும் நாடு?      ஹாங்க் காங்க் 2083. மலிவான விலையில் இணைய வசதியளிக்கும் நாடு?      இஸ்ரேல் 2084. இரு கைகளாலும் எழுத முடிந்த நபர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?      ஆம்பிடெக்ஸ்ட்ரஸ் (Ambidextrous) 2085. எந்த நாட்டில் இலவச பொது போக்குவரத்து சேவை உள்ளது?       லக்சம்பர்க் 2086. இந்தியாவின் வரத்தக தலைநகர்?      மும்பை   2087. ஏழு தீவுகளின் நகரம்?       மும்பை   2088. இந்திய ரிசர்வ் வங்கியின் சின்னத்தில் உள்ள விலங்கு?       புலி 2089. கழை என்பதன் பொருள்?      கரும்பு   2090. உலகின் மிகச்சிறிய செயற்கைகோள்?      கலாம் சாட் - V2  [எடை : 64 கிராம்]

பொது அறிவு (208)

 2071. மாநில அரசின் தலைவர்?      ஆளுநர் 2072. சுதந்திர இந்தியாவின் முதல் தலைமை நீதிபதி?      ஹரிலால் ஜே கனியா 2073. எந்த நாட்டிலிருந்து அடிப்படை உரிமைகள் பெறப்பட்டன?     அமெரிக்கா    2074. சட்டத்தின் முன் யாவரும் சமம் எனும் அரசியல் பிரிவு?       பிரிவு14 (Article 14) (தீண்டாமை ஒழிப்பு குறித்த அரசியல் பிரிவு : பிரிவு 17) 2075. தமிழ்நாட்டின் முதல் பெண் ஆளுநர்?       பாத்திமா பீவி (இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் : சரோஜினி நாயுடு)   2076. சுவாசத்திற்கு உதவும் மூளையின் பகுதி?      முகுளம் 2077. நினைவாற்றலுக்கு உதவும் மூளையின் பகுதி?       பெருமூளை 2078. இந்தியாவில் வைர சுரங்கங்கள் வெகுவாகவுள்ள இடம்?     பன்னா (குளத்தில் வளரும் Tilapia எனப்படும் ஒரு வகை மீனையும் நம் ஊரில் பன்னா என்றழைக்கும் வழமையுண்டு‌. இந்த மீன் தனது குஞ்சுகளை தனது வாயினுள் வைத்து பாதுகாப்பதை இளம்பிராயத்திலேயே அதிகமுறை கண்டுள்ளேன்.‌) 2079. வௌவால்கள் விலங்கியலில் எந்த வகுப்பிற்குள் வகைப்படுத்தப்பட்டுள்ளன?      சிராப்டீரா (Chiroptera) (கையில் சிறகுடையவை (கைச்சிறகிகள்) என பொருள்படும் வகையில் சிராப்டீரா என வகைப்படுத்தியுள்ளனர்

DNA பிரதியெடுத்தல்

நைட்ரஜன் காரங்களின் இணைவில் உள்ள குறிப்பிடுந்தன்மை ஒரு நைட்ரஜன் காரமானது, குறிப்பிட்ட, அதற்கேற்ற பிரிதொரு நைட்ரஜன் காரத்துடன் மட்டுமே கைகோர்க்கும். இன்னார், இன்னார் வீட்லதான் பொண்ணு எடுக்கணுங்ற கதமாதிரி! அடினைன், தைமைனோடு மட்டுமும், குவானைன், சைட்டோசைனோடு மட்டுமுந்தான் கைகோர்க்கும்! இதற்கு, ஜோடியுறு விதிகள் (Pairing Rules) என பெயர். Specifically, a rung of DNA consists of a pair of nitrogenous bases, and these bases follow the base-pairing rules: Adenine (A) always pairs with Thymine (T) in DNA. Cytosine (C) always pairs with Guanine (G) in DNA. நைட்ரஜன் காரங்களின் அமைவுமுறையின் முக்கியத்துவம்  : மல்லிப்பூவை திசைக்கொன்றென இரு திசையிலும் வைத்து, அதனையடுத்து கனகாம்பரத்தையும் திசைக்கொன்றென இரு திசையிலும் வைத்து கட்டப்படும் எளிய அழகிய மாலை போன்றது DNA! இங்கு மல்லி-கனகாம்பரத்திற்கு பதிலாக Adenine, Thymine, Guanine மற்றும் Cytosine. இவ்வாறு, இன்னார் இன்னாரோடுதான் கைகோர்ப்பார் என அமையும் இந்த அமைவுமுறைதான், மரபு பண்பின் நிரல் (Code)! இந்த நிரல் Execute ஆகுவதனால்தான் நம்மில் மரபுபண்புகள் வெளிப

DNA மூலக்கூறின் அமைப்பு

  DNA மூலக்கூறின் அமைப்பு: டீயாக்ஸிரிபோ நியூக்ளிக் அமிலம்! அது தான் அவனோட விரிவு! ஒரு நீண்டுபோன ஏணிய ஒரு திருக்கு திருக்குனா வர்ற வடிவம் அவனோடது! Double Helix Structure அப்டீனு சொன்னா அவனுக்கு கொஞ்சம் கௌரவம்! DNA stands for Deoxyribonucleic Acid. It's a long molecule that carries genetic information in all living organisms. DNA has a double-helix structure, resembling a twisted ladder. Rungs : DNA-யின் ஏணிபோன்ற அமைப்பில் காணப்படும் படிபோன்ற அமைப்புகளுக்கு Rungs என்ன பெயர். Rung என்பது பொதுவாக ஆங்கிலத்தில், ஏணியின் படி என பொருள். In the context of DNA's structure, a "rung" refers to one of the steps or crossbars in the DNA double helix. நியூக்ளியோடைடு : இவையே DNA மற்றும் RNA-யின் அடிப்படை மூலக்கூறுகள். அதாவது, இவையெல்லாம் ஒன்றுசேர உருவாவதுதான் DNA-யும் RNA-யும்! A nucleotide is the basic building block of nucleic acids, such as DNA (deoxyribonucleic acid) and RNA (ribonucleic acid). Nucleotides are essential for carrying and transferring genetic information in living

பொது அறிவு (207)

2061. மனித கண்ணினுள் மூன்றில் இருபங்கு நிரம்பியுள்ள திரவம்?       விட்ரியஸ் திரவம் 2062. கண்ணின் நிறம் நீலமாக இருந்தால் கண்ணின் எந்த பகுதி நீலமாகயிருக்கும்?      ஐரிஸ் [கண்ணின் நிறம் என்பது ஐரிஸின் நிறம்தான்...] 2063. சாதாரண நீரின் வேதி வாய்பாடு H2O. கன நீரின் (Heavy Water) வேதி வாய்பாடு?       D2O 2064. சோளம் என்பது அத்தாவரத்தின் எப்பகுதி?       விதை 2065. தாவரங்களில் உள்ள செல்கள் எவ்வகையவை?      யூகேரியாட்டிக் வகை 2066. கலாச்சாரத்தின் தலைநகரம் எனப்படும் மாவட்டம்?      தஞ்சை 2067. டைட்டானிக் கப்பல் எந்த ஆண்டு மூழ்கியது?       1912 2068. இந்தியாவில் தேர்தல் மை தயாரிக்கப்படும் ஒரே இடம்?      மைசூர்  [மை தயாரிக்கப்படும் இடம் மைசூர்...] 2069. இந்தியாவில் காப்பி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம்?      கர்நாடகா  [இரண்டாவது தமிழகம்] 2070. மயில்கள் சரணாலயம் தமிழகத்தில் எங்குள்ளது?       விராலிமலை

பொது அறிவு (206)

2051. மனிதன் நடந்துகொள்வதுபோலவே செயலுறும் இயந்திரங்களை உருவாக்கும் நுட்பம்?      செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) 2052. செயற்கை நுண்ணறிவியலின் தந்தை?      ஜான் மெக்கார்த்தி (John McCarthy) 2053. செயற்கை நுண்ணறிவின்படி உருவாக்கப்பட்ட முதல் நாய் ரோபோவின் பெயர்?      பிக் டாக் 2054. எந்த ஒரு தட்பவெப்பத்திலும் உறையாத தனிமம்?       ஹீலியம் 2055. இரும்பை போலவே காந்தசக்தியுடைய உலோகம்?       நிக்கல் 2056. பச்சை மலை எனப்படுவது?      கோத்தகிரி 2057. பொருளியல் (Economics) பாடத்தின் கிளைகள்?      நுண்ணியல் மற்றும் பேரியல் 2058. உலகின் பெரும் மருந்தகம் எனப்படுவது?       வெப்பமண்டலக்காடுகள் 2059. சுங்கம் தவிர்த்த சோழன் எனப்படுபவர்?      முதலாம் குலோத்துங்கசோழன் 2060. நீண்டநேரம் ஈரப்பதத்தை தக்கவைக்கும் மண்?      கரிசல் மண்

பொது அறிவு (205)

  2041. புளித்த பாலில் உள்ள அமிலம்?       லாக்டிக் அமிலம் 2042. கெட்டுப்போன வெண்ணெயில் உள்ள அமிலம்?      பியூட்ரிக் அமிலம் 2043. கொழுப்புகளில் உள்ள அமிலம்?       ஸ்டியரிக் அமிலம் 2044. கத்தரிக்காயில் உள்ள அமிலம்?      அஸ்கார்பிக் அமிலம் 2045. அமிலம் என்ன சுவையுடையது?       புளிப்பு சுவை [வலிமை குன்றிய அமிலங்கள் மட்டுமே ருசிபார்க்கப்படுகின்றன.] 2046. பாலை பாதுகாக்க பயன்படும் கரைசல்?       ஃபார்மால்டிஹைடு கரைசல் 2047. புகையிலை உலராமல் தடுக்க பயன்படுவது?       கிளிசரால் [தானாக கண்ணீர் வரவைப்பதில் கிளிசரின் என்ற‌ மற்றொரு பொருள் பயன்படுகிறது‌. சிலருக்கு கிளிசரின் போடாமலே கண்ணீர் வருகிறது‌. ஆனால், கிளிசரின் பார்த்த வேலையால் தான் !  கிளிசரின் போட்டுக்கொண்டு ஏங்கி ஏங்கி அழும் தொலைக்காட்சி தொடர் நடிகைகள் , அநேக இல்லத்தரசிகளை அழவிடுகிறார்கள்! வெங்காயம் வெட்டி வெட்டி இல்லத்தரசர்களும் அழுகிறார்கள்! எல்லாம் கிளிசரினால் தான்!] 2048. ஊறுகாய் கெடாமலிருக்க பயன்படுவது?      சோடியம் பென்சோயேட் 2049. உறுப்பு மயக்கமூட்டியாக பயன்படுவது?       பென்சைல் ஆல்கஹால் [அறுவை சிகிச்சையின் போது வலிமறத்துப்போகச்செய

பொது அறிவு (204)

  2031. சிகரெட் பிடிப்பவரின் மூளையை எத்தனை நொடிகளில் நிக்கோட்டின் அடைகிறது?       8 நொடிகள் [மூளையின் செயல்படும் திறத்தையை மாற்றிவிடும் (Alters the Nerve Signaling Pattern of Brain) தன்மை நிக்கோட்டினுக்கு உண்டு. இதனாலேயே பலரால் சிகரெட் பழக்கத்தை விட்டொழிக்கமுடியவில்லை. திரிபுரா மாநிலத்தில் அதிகபடியான புகையிலை வசப்பட்டோர் உள்ளனர்.] 2032. பீடி சுற்றுகையில் புகையிலை தூளை எந்த தாவரத்தின் இலையில் சுருட்டுகிறார்கள்?       டிஸ்பைரோஸ் (Dispyros) 2033. நிக்கோட்டினிலுள்ள எந்த பொருள் உடலில் ஆக்சிஜன் ஓட்டத்தை தடுக்கிறது?        கார்பன் மோனாக்ஸைடு [ஆக்சிஜன் ஓட்டம் மட்டுமல்ல! எலும்பு வலுவாகவிருக்க வகைசெய்யும் வைட்டமின் Cயின் அளவையும் சிகரெட் குறைக்கிறது! C for Cigarette and Cigarette for C Vitamin Depletion. இதில் வியப்பென்னவெனில் இந்த நிக்கோட்டின் பொருள் கத்தரிக்காய் குடும்பமாகிய சொலனேசியை (Solanaceae) சார்ந்ததுதான்! தக்காளி , கத்தரி , சுண்டைக்காய் , உருளைக்கிழங்கு என நீளும் கண்ணியமிக்க இந்த சொலனேசி குடும்பத்தில் நிக்கோட்டின் என்ற அசுரன் ! ஆனால் , எதுவும் காரணமில்லாமல் இல்லை! அசுரனாயினும் அசிட்டில

பொது அறிவு (203)

2021. குயில்பாட்டு இயற்றியவர்?      பாரதியார் 2022. தமிழகத்தின் ஜெயங்கொண்டான் என்ற பகுதி எந்த தாதுவிற்கு புகழ்பெற்றது?       லிக்னைட் 2023. மெட்ராஸ் மாநிலம், தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்ட வருடம்?      1969 2024. மெட்ராஸ் தமிழ்நாடாக பெயர்மாற்றம் செய்யப்பட்டப் பின், முதல் முதலமைச்சர்?       அண்ணாத்துரை 2025. மெட்ராஸ் , சென்னையாக பெயர்மாற்றம் செய்யப்பட்டது?       1995 2026. எந்த நாட்டிலிருந்து இந்தியாவிற்குள் புகையிலை (Tobacco) கொணரப்பட்டது?       போர்ச்சுகீசிய நாடு [சிகரெட் முதலான வஸ்துகளிலெல்லாம் இந்த புகையிலைதான் நிரப்பப்பட்டுள்ளது.] 2027. எந்த நாட்டில் முதன்முதலில் புகையிலை பயன்பாடு ஆரம்பித்தது?       அமெரிக்கா 2028. புகையிலையில் உள்ள வேதிப்பொருள்?       நிக்கோட்டின் 2029. நிக்கோட்டின் பொதுவாக எந்த விதத்தில் பயன்படுத்தப்படுகிறது?      பூச்சிக்கொல்லியாக (Insecticide) [பூச்சிக்கொல்லியாக பயன்படும் நிக்கோட்டின் அடங்கிய புகையிலையை மனிதர்கள் தீண்டுவது மிக அபாயம். நிக்கோட்டின் அடங்கிய புகையை உள்வாங்கி ஊதாமல் , வெறும் நிக்கோட்டினை தனியே உட்கொண்டால் உடனடியாய் மரணம் ஏற்படுமாம்.] 2030

பொது அறிவு (202)

2011. மஞ்சள் நகரம்?      ஈரோடு 2012. இயற்கை விரும்பிகளின் பூமி?       தேனி 2013. முதன்முதலில் குடையை பயன்படுத்தியவர்கள்?       சீனர்கள் 2014. உலகின் முதல் ஊர் என கருதப்படுவது?      உர் (ஈராக்)  (தமிழில் ஊர் என்பதை உர் என்கிறார்கள்....) 2015. உலகளவில் விண்வெளி ஆய்வின் அடிப்படையில் இந்தியா எத்தனையாவது இடம்?      ஆறு 2016. "நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாட்டக்கரா....?" - யார் இந்த அப்பாட்டக்கர்?       சினிமா வசனங்களிலும் பாடல்களிலும் மிக பிரபலமானது இந்த அப்பாட்டக்கர் என்ற வார்த்தை. அமிர்தலல் விதல்தாஸ் தக்கர் (Amritlal Vithaldas Thakkar) என்பவர் மிக பெரிய சமூக சீர்திருத்தவாதி. குஜராத்தில் பிறந்த இவர் ஹரிஜன மக்களுக்காக பல போராட்டங்களை நடத்தியவர்.  சுதந்திரத்திற்கு முன்னால் மெட்ராஸ் மாகாணத்திலும் பல போராட்டங்களை நடத்தியுள்ளார். இவரை மெட்ராஸ் மக்கள் பாசமாக தக்கர் பாபா என்று அழைத்தனர் (குஜராத்தியில் பாபா என்றால் அப்பா என்று பொருள்). தக்கர் பாபா பெரிய அறிவாளி, பல துறைகளில் சிறந்து விளங்கியவர். அவரிடம் கேட்கப்படும் எல்லா கேள்விகளுக்கும் உடனுக்குடன் பதில் சொல்வார். நாளடைவில் மெட்ராஸ் மக்கள்

பொது அறிவு (201)

2001. தூய இரும்பின் உருகுநிலை?       1500 டிகிரி 2002. தமிழில் தோன்றிய முதல் பிள்ளைத் தமிழ் நூல்?      குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் 2003. கந்தகம் (Sulphur) எந்த நிறத்தில் காணப்படும்?       மஞ்சள் 2004. தமிழகத்தில் முதல் இரயில்வே எங்கு அமைக்கப்பட்டது?       ராயபுரம் 2005. இரத்த அழுத்தத்தை கட்டுபடுத்தும் ஹார்மோன்?       வாசோ பிரஸ்ஸின் 2006. பாண்டிய நாட்டின் பழம் பெரும் துறைமுகம்?      கொற்கை 2007. கற்பூர மற்றும் தைல மரங்களுக்கு பெயர்பெற்ற மாவட்டம்?      நீலகிரி 2008. கூடுகட்டி வாழும் மீன்?       ஸ்டிக்ல் பேக் 2009. தோட்டப்பயிர் பூமி எனப்படுவது?      தருமபுரி 2010. மணநூல் எனப்படுவது?      சீவக சிந்தாமணி

5. செல் சுழற்சி சீர்மைபடுத்தல் (Cell Cycle Regulation)

  செல் சுழற்சி சீர்மைபடுத்தல் : செல் எப்போது பிரியவேண்டும்… எப்போது பிரியக்கூடாது என சீர்மைபடுத்தும் நிகழ்வு. The cell cycle is the series of events that a cell goes through to divide and produce new cells. Proper regulation of the cell cycle is crucial to ensure that cells divide when needed and do not divide uncontrollably. செல் சுழற்சி சீர்மைபடுத்தலில் Checkpoints : ஒவ்வொரு நிலை முடியும்போதும், எல்லாம் சரியாக நடந்துள்ளதா என ஊர்ஜிதப்படுத்தும், இடை நிலைகள். The cell cycle is regulated at specific checkpoints where the cell assesses whether conditions are suitable for progression. G1 Checkpoint occurs at the end of the G1 phase. The cell checks for DNA damage and the availability of essential nutrients. If conditions are favorable, the cell proceeds to replicate its DNA. G2 Checkpoint occurs at the end of the G2 phase, just before mitosis. The cell checks if DNA replication is complete and if there are any DNA errors. If all is well, the cell enters mitosis. Mitotic Checkpo

4. Meiosis (II)

மியாசிஸ் செல் பிரிதலின் இரண்டாம் நிலை : மியாசிஸ் II ஹேப்ளாய்டு : பொதுவாக ஒரு உயிரினத்தின் உடலில் காணப்படும் குரோமோசோம்களின் எண்ணிக்கையில் பாதியை மட்டுமே கொண்டிருக்கும் செல்கள். மியாசிஸில் உருவாகும் செல்களில், குரோமோசோம் எண்ணிக்கை பாதியாக குறையக்கண்டோம்! அவை, ஹேப்ளாய்டுகள்தான்! Haploid refers to a cell or organism that has a single set of chromosomes (n). In humans, the haploid number is 23. This means that gametes, like sperm and eggs, have 23 chromosomes each. Haploid cells are produced through meiosis, where the chromosome number is reduced by half.  டிப்ளாய்டு : இரட்டைப்படை எண்ணிக்கையில் குரோமோசோம்களை கொண்டிருக்கும் செல்கள். Diploid refers to a cell or organism that has two sets of chromosomes (2n). In humans, the diploid number is 46, as most of our somatic cells have 46 chromosomes (23 pairs). Diploid cells have two homologous copies of each chromosome, one inherited from each parent. கேமேட் : இனப்பெருக்க செல்களுக்கு, பொதுவாக கேமேட் என பெயர். இவை, ஹேப்ளாய்டுகள்! மியாச