முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பொது அறிவு (142)

  1411. ஜான்சிராணிக்கு முன்பாகவே வெள்ளையர்களை எதிர்த்த வீரப்பெண்?     வீரமங்கை வேலுநாச்சியார் 1412. வேலுநாச்சியார் அறிந்த மொழிகள்?     தமிழ் , ஆங்கிலம் , பிரஞ்சு , உருது 1413. இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை ?     வேலுநாச்சியார் 1414. வேலுநாச்சியாரின் காலம்?     17ம் நூற்றாண்டு 1415.வேலுநாச்சியார் ஆட்சி செய்த இடம்?     சிவகங்கை 1416. திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி என பாடியவர் ?      திருநாவுக்கரசர் 1417. இரட்டை நகரங்கள்?      திருநெல்வேலி , பாளையங்கோட்டை 1418. தாமிரபரணி கடலோடு கலக்கும் இடத்தில் உள்ள துறைமுகம் ?      கொற்கை 1419. தண்பொருநை புனல் நாடு என திருநெல்வேலியை புகழ்பவர்?      சேக்கிழார் 1420.திருநெல்வேலியின் பழைய பெயர்?      வேணுவனம்

பொது அறிவு (141)

   1401. மிக நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர்?      நேரு   1402. முதல் பெண் பிரதமர்?     இந்திரா காந்தி 1403. முதல் பிரதமர்?     நேரு 1404. உலோகங்களின் ராஜா?       தங்கம்   1405. உலோகங்களின் ராணி?     வெள்ளி 1406. ஆண்பனை எவ்வாறு தமிழில் அறியப்படுகிறது?      ஏற்றை 1407. பெண்பனை எவ்வாறு தமிழில் அறியப்படுகிறது?     பெண்ணை [பனையில் ஆண் மரங்கள் பூக்குமே ஒழியக் காய்க்கா, ஆனால் பெண் பனைகளுக்குச் சிறப்பான காரணப்பெயர் பெண்ணை என்பது. பெண்கள் குழந்தை பெறுவது போல, பெண்ணை (பெண் பனைகள்) குரும்பைகளை ஈனுகின்றன. பலா, தென்னை மரங்களில் ஆண் பூக்களும், பெண் பூக்களும் ஒரே மரத்தில் இருக்கின்றன. எனவே எல்லாத் தென்னை மரங்களும், பலா மரங்களும் குலை ஈனுகின்றன. ஆனால் பனையில் பாற்பகுப்பு இருப்பதால் ஆண்பனை ஆண்பூவும், பெண்பனை பெண்பூவும் பூக்கும். ஆனால் ஆண்பனை காய்க்காது.] 1408. தூக்கணாங்குருவிகள் எந்த பனையில் கூடுகட்டும்?     பெண்ணை ( பெண்பனை ) 1409. இளம்பனைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?      வடலி 1410. பனையில் எத்தனை வகைகள் உள்ளன?      34 [1. ஆண் பனை, 2. பெண் பனை, 3. கூந்தப்பனை, 4. தாளிப்பனை, 5. குமுதிப்பனை, 6.

பொது அறிவு (140)

  1391. இல்லாதவர்க்கு ஒரு பொருளைக் கொடுத்தற் பொருட்டு வினாவுவது?     கொடை வினா [புலவரிடம் பொருள் இல்லையோ? என்று மன்னன் புலவரிடம் வினாவுதல் கொடை வினாவாகும். கொடுத்தற் பொருட்டு வினாவுவதால் கொடை வினாவாயிற்று.] 1392. ”நெல்லைக்கு வழி யாது?” என்று வினவினால் ‘இது’ என்பது போலச் சுட்டிக் கூறும் விடை?      சுட்டு விடை 1393.”இது செய்வாயா?” என்று வினவியபோது, ’மாட்டேன்'’ என்பதுபோல எதிர்மறுத்துக் கூறும் விடை?      மறை விடை 1394. ”இது செய்வாயா?” என்று வினவியபோது, ’செய்வேன்’ என்பதுபோல உடன்பட்டுக் கூறும் விடை?     நேர்விடை 1395. ”இது செய்வாயா?” என்று வினவியபோது, ’நீயே செய்’ என்று ஏவிக் கூறுவது?      ஏவல் விடை 1396. "இது செய்வாயா?” என்று வினவியபோது, ’செய்யாமலிருப்பேனோ?’ என்று வினாவையே விடையாகக் கூறுவது?      வினா எதிர் வினாதல் விடை 1397. நீ படித்தாயா? என்னும் வினாவிற்குத் ‘தலைவலித்தது’ என  தனக்கு நேர்ந்ததை விடையாக கூறுவது?     உற்றது உரைத்தல்விடை 1398. நீ படிப்பாயா? என்னும் வினாவிற்குத் ‘தலைவலிக்கும்’ என தனக்கு நிகழ உள்ளதைக் கூறுவது?      உறுவது கூறல் விடை 1399. ”ஆடுவாயா?” என்று வினவிய போது,

பொது அறிவு (139)

  1381. கேரளத்தின் மாநில விலங்கு?      யானை 1382. கேரளத்தின் மாநில பறவை?       மலை இருவாய்ச்சி ( Great Hornbill ) 1383. கேரளத்தின் மாநில மரம்?      தென்னை 1384. கேரளத்தின் மாநில மலர்?     கொன்றை ( Golden Shower Tree ) 1385. கேரளம் என்பதன் பெயர்க்காரணம்?     பண்டைய சேரர்களின் ஆட்சிநிலம் மலையாளதேசமாகிய கேரளம். ஆகவே , சேரளம் , கேரளமாயிருக்கும் என தமிழ் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மேலும் , எனது எண்ணப்படி , கேரம் என்றால் தமிழில் தேங்காய் (நாளிகேரம்) என பொருள். தேங்காய் உற்பத்தியில் முதலிடத்திலுள்ள இந்திய மாநிலம் கேரளமே ! உப்பு உற்பத்தி செய்யப்படும் இடம் உப்பளம் எனப்படுவது போல கேரம் உற்பத்தி செய்யப்படும் இடம் கேரளம் என்றாயிருக்குமோ என்பது என் ஐயம்) 1386. ஒரு பொருளை வாங்கிக்கொள்ளும் பொருட்டுப் மற்றவரிடம் வினாவும் வினா?     கொளல் வினா [மாணவன் புத்தகக் கடைக்குச் சென்று தமிழ் புத்தகம் உள்ளதோ? என கேட்பது கொளல் வினா.] 1387. பிறர் அறிவை அளந்தறியவும் அறியாதவர்க்கு உண்மைப் பொருளை உணர்த்தவும் தாம் அறிந்த ஒரு பொருள் பற்றிப் பிறரிடம் வினாவுவது?     அறிவினா [இப்பாடற் பொருள் யாது? என ஆசிரியர் மாணவரிடம் வ

பொது அறிவு (138)

  1371. தொற்றுநோயை தடுக்கும் தாது உப்பு?     துத்தநாகம் 1372. இறுதி விருந்து (The Last Super) என்ற ஓவியத்தை வரைந்தவர்?     லியானர்டோ டாவின்ஸி 1373. சீனாவின் வள்ளுவர் எனப்படுபவர்?       கன்ஃபியூஷியஸ் 1374. மகாகவி பாரதியார் பணிபுரிந்த பள்ளி?      சேதுபதி உயர்நிலை பள்ளி , மதுரை 1375. எகிப்தியரின் முக்கிய கடவுள்?     சூரியன் 1376. புலி உறுமும்.... சிங்கம் ?     முழங்கும் ( கர்ஜனை‌ ) 1377. காக்கை கரையும்.... கூகை ?      குழறும் 1378. மயில் அகவும்.... வாத்து?       கத்தும் 1379. பசு கதறும்..... வண்டு ?      முரளும் 1380. குதிரை கனைக்கும்..... கழுதை ?      கத்தும்

பொது அறிவு (137)

  1361. அறை‌ வெப்பநிலையில் நீர்மமாகவுள்ள உலோகம்?     மெர்குரி 1362. அறை‌ வெப்பநிலையில் நீர்மமாகவுள்ள அலோகம்?      புரோமின் 1363. அதிக உருகுநிலை கொண்ட உலோகம்?     டங்ஸ்டன் 1364. புவியில் மிக அதிக அளவில் உள்ள தனிமம் ?      ஆக்ஸிஜன் 1365. அண்டம் மற்றும் விண்மீன்களில் உள்ள முக்கியமான தனிமங்கள் ?     ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் 1366. அதிக பொது போக்குவரத்து உடைய மாநிலம்?     தமிழகம் 1367. இந்தியாவின் முதல் தொலைக்காட்சி அலுவலகம் எங்கு அமைக்கப்பட்டது?     கொல்கத்தா 1368. சைக்கிள் உற்பத்தியில் சிறந்து விளங்கும் முதல் மூன்று நாடுகள்?      சீனா , இந்தியா , தைவான் 1369. கிரேக்க நாட்டின் வீர காவியங்கள்?     இலியட் , ஒடிஸி 1370. கிரேக்க நாட்டின் வீர காவியங்களை இயற்றியவர்?     ஹோமர்

பொது அறிவு (136)

  1351. கடாரம் கொண்டான் என்று அழைக்கப்படுபவர்?      இராஜேந்திர சோழன்   1352. இந்தியாவின் பழமையான அணை?      கல்லணை 1353. நாடாளுமன்றத்தில் தமிழை செம்மொழியாக அறிவித்த குடியரசு தலைவர்?      டாக்டர்.ஏ‌.பி‌.ஜே‌.அப்துல் கலாம் 1354. ஔவையாரை ஆதரித்த மன்னன் ?     அதியமான் 1355. கம்பரை‌ ஆதரித்தவர் ?      சடையப்ப வள்ளல் 1356. டெஸ்ட் கிரிக்கெட்டில் முதன்முதலில் சதம் அடித்த இந்திய வீரர்?     லாலா அமர்நாத் 1357. கழுதை பந்தயம் நடத்தும் இந்திய மாநிலம்?     இராஜஸ்தான்   1358. பனிச்சறுக்கு விளையாட்டை அறிமுகம் செய்தவர்?     ஜோசப் மெர்லின் 1359. அதிகளவில் பேரழிவு மற்றும் பேராபத்து தரும் பேரிடர் ?     நிலநடுக்கம்   1360. இயற்கையில் அதிகம் காணப்படும் உலோகம் ?      அலுமினியம்  

பொது அறிவு (135)

  1341. இதுவரை எந்த நாட்டுடனும் போர் புரியாத நாடு?     சுவிட்சர்லாந்து 1342. பால் பாயிண்ட் பேனாக்கள் செய்ய உதவும் வேதிப்பொருள்?     கந்தகம் ( Sulphur ) 1343. பத்ம விருதுகள் யாவை?     பத்மபூஷன் , பத்ம விபூசண் , பத்மஸ்ரீ 1344. ஒரு பில்லியன் என்பது ?      100 கோடி 1345. ஒரு டிரில்லியன் என்பது ?      1000 பில்லியன் 1346. முகநூல் ( Facebook ) தொடங்கப்பட்ட ஆண்டு?     2004 1347. புலனம் / கட்செவி அஞ்சல் ( Whatsapp ) தொடங்கப்பட்ட ஆண்டு?     2009 1348. படவரி ( Instagram ) தொடங்கப்பட்ட ஆண்டு?     2010 1349. இந்திய தொல்லியல் துறை தொடங்கப்பட்ட ஆண்டு ?      1861 1350. தமிழக தொல்லியல் துறை தொடங்கப்பட்ட ஆண்டு ?     1961  

பொது அறிவு (134)

1331. திருஞானசம்பந்தரின் இயற்பெயர்?      சம்பந்தன் 1332. திருஞானசம்பந்தர் என்ற சொல்லின் பொருள்?       அறிவுசேரர் 1333. திருஞானசம்பந்தரின் வேறுபெயர்கள்?      ஆளுடைய பிள்ளையார், பாலாராவயர், பரசமய கோலரி 1334. திருஞானசம்பந்தரின் ஊர்?      சீர்காழி 1335. திருஞானசம்பந்தரின் தமிழ் எவ்வாறு அறியப்படுகிறது ?     கெஞ்சு தமிழ்  1336. மழைத்துளி கோள வடிவத்தில் இருப்பதன் காரணம்?     பரப்பு இழு விசை [பரப்பு இழுவிசை (surface tension) என்பது நீர்மத்தின் மேற்பரப்பு , புறவிசையை எதிர்க்கின்ற பண்பு. மேலும் நீர்ம பரப்பு ஒரு படலம் போல செயல்படும்‌. மழைத்துளி வேகமாக பூமிக்கு விரையும் போது , புறத்தே உள்ள காற்று மண்டல விசை அதனை அனைத்து புறங்களிலும் சமமாக தள்ளும். எனவே மழைத்துளி கோள வடிவம் பெறுகிறது]  1337. பூமி முதலான கிரகங்கள் கோள வடிவில் இருப்பதன் காரணம்?       பரப்பு இழு விசை [பூமி முதலான கிரகங்களின் ஈர்ப்பு விசை  , அவற்றை அனைத்து புறங்களிலும் சமமாக உள்நோக்கி தள்ளுவதனால் கிரகங்கள் கோள வடிவம் பெற்றுள்ளன. A planet is round because of gravity. A planet's gravity pulls equally from all sides.] 1338. பூமி

பொது அறிவு (133)

 1321. திருத்தொண்டத் தொகையை இயற்றியவர்?     சுந்தரர் [திருத்தொண்டத் தொகை , திருப்பாட்டு மற்றும் ஏழாம் திருமுறை என்றும் அழைக்கப்படுகிறது.] 1322. சுந்தரரின் இயற்பெயர்?     நம்பி ஆரூர் 1323. சுந்தரர் எந்த அரசனால் தத்து எடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டார்?     திருமுனைப்பாடி நாட்டை ஆண்ட நரசிங்கமுனையர் 1324. சுந்தரரின் ஊர்?     திருநாவலூர் 1325. சுந்தரரின் தமிழ் எவ்வாறு அறியப்படுகிறது ?     மிஞ்சு தமிழ் 1326. திருநாவுக்கரசரின் இயற்பெயர்?     மருள் நீக்கியார் 1327. சைவ உலகின் செஞ்ஞாயிறு எனப்பட்டவர்?     திருநாவுக்கரசர் 1328. திருநாவுக்கரசரின் வேறுபெயர்கள்?     அப்பர் , வாகீசர் 1329. திருநாவுக்கரசரின் ஊர்?      தென்னாற்காடுமாவட்டம் - திருவாமூர் 1330. திருநாவுக்கரசரின் தமிழ் எவ்வாறு அறியப்படுகிறது ?     கெஞ்சு தமிழ்

பொது அறிவு (132)

  1311. சைவ உணவு உண்பவர்கள் அதிகமுள்ள நாடு?     இந்தியா 1312. அசைவ உணவு உண்பவர்கள் அதிகமுள்ள நாடு?     ரஷ்யா 1313. ரோபோட்டிற்கு குடியுரிமை தந்த நாடு?     சௌதி அரேபியா , சோஃபியா என்ற ரோபோவிற்கு குடியுரிமை தந்துள்ளது. 1314. உலகின் முதல் ரோபோவை உருவாக்கியவர்?     ஜார்ஜ் டேவோல் 1315.ரோபோட்டிக்ஸ் துறையின் தந்தை எனப்படுபவர் ?     ஜோசஃப் எங்கெள்பெர்கர் 1316. திருவாசகத்தை இயற்றியவர்?     மாணிக்கவாசகர் 1317. மாணிக்கவாசகரின் மற்றுமொரு நூல்?     திருக்கோவையார் 1318. மாணிக்கவாசகர் எந்த அரசனின் அவையில் தலமையமைச்சராக திகழ்ந்தார்?     அரிமர்த்தன‌ பாண்டிய மன்னன் 1319. மாணிக்கவாசகர் பிறந்த ஊர்?     திருவாதவூர் 1320. திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ?     ஜி.யு.போப்

பொது அறிவு (131)

  1301. தேசிய கொடியின் அகலம் மற்றும் நீளத்தின் விகிதம்?     2:3 1302. மரபியலின் தந்தை?     கிரிகர் ஜோகன் மெண்டல் 1303. ரோபோட்டிக்ஸின் தந்தை?      நிக்கோலா டெஸ்லா 1304. வடிவியலின் தந்தை?     யூக்ளிட் 1305. இந்திய பசுமை புரட்சியின் தந்தை?     M.S.சுவாமிநாதன் 1306. செயற்கை வைரத்தை உருவாக்கிய நாடு?     அமெரிக்கா 1307. தொலைக்காட்சியில் முதன்முதலில் நேரடி ஒளிபரப்பு செய்த நாடு?     ஜப்பான் 1308. இரட்டை அடுக்கு பேருந்து முதன்முதலில் எங்கு அறிமுகமானது?     லண்டன் 1309. பறந்து வரும் பூச்சிகளை பிடிப்பதற்காக தன் வாயை திறந்து கொண்டே பறக்கும் பறவை?     பக்கி / பாதுகைக் குருவி / நைட்ஜார் 1310. ரோபோக்களின் வீடு எனப்படும் நாடு?     ஜப்பான்

பொது அறிவு (130)

 1291. திருக்குறளை தெலுங்கில் மொழிபெயர்ப்பு செய்தவர்?         வைத்தியநாத பிள்ளை 1292. திருக்குறளை பிரெஞ்சில் மொழிபெயர்ப்பு செய்தவர்?     ஏரியல் 1293. திருக்குறளை இலத்தீனில் மொழிபெயர்ப்பு செய்தவர்?     வீரமாமுனிவர் 1294. திருக்குறளை இந்தியில் மொழிபெயர்ப்பு செய்தவர்?     பி.டி.ஜெயின் 1295. திருக்குறளை ஜெர்மனில் மொழிபெயர்ப்பு செய்தவர்?     கிரால் [திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்தவர் , ஜி.யு.போப்] 1296. நாசா எப்போது தொடங்கப்பட்டது?      அக்டோபர் 1 ,1958 1297. நாசா எங்குள்ளது?      வாஷிங்டன் , அமெரிக்கா 1298. சூரியனை ஆராய்வதற்காக இஸ்ரோ அனுப்பவுள்ள ராக்கெட்?      ஆதித்யா L-1 1299. இஸ்ரோ எங்குள்ளது?     பெங்களூர் ( தலைமையகம் ) 1300. கேரளத்தில் இஸ்ரோ அமைப்பு எங்குள்ளது?      திருவனந்தபுரம்

பொது அறிவு ( 129 )

 1281. உலகின் யோகா தலைநகரம் ?      ரிஷிகேஷ் ( உத்தரகண்ட் ) 1282. விண்வெளியில் உபயோகித்த முதல் பாடல்?     ஜங்கிள் பெல் ( Jingle Bell ) 1283. தக்காளி உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் இந்திய மாநிலம்?     ஆந்திர மாநிலம் 1284. பலா பழ உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் இந்திய மாநிலம்?      திரிபுரா 1285. சப்போட்டா பழ உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் இந்திய மாநிலம்?      கர்நாடகா 1286. அப்துல்கலாம் எங்கு பள்ளிப்படிப்பை தொடங்கினார்?     இராமேஸ்வரம் ( அரசு பள்ளி ) 1287. அப்துல்கலாம் தன்னுடைய விண்வெளி பொறியியல் படிப்பை எங்கு தொடங்கினார்?      சென்னை எம்.ஐ.டி 1288. அப்துல்கலாம் திட்ட இயக்குநராக பணியாற்றிய ஏவுகணைகள்?     திரிசூல்     அக்னி     பிருத்வி     நாக்     ஆகாஷ் 1289. அப்துல்கலாம் அவர்களுக்கு மத்திய அரசு வழங்கிய உயர் விருது?     பாரதரத்னா 1290. பியூட்டேன் மற்றும் புரொப்பேன் வாயுக்களின் கலவை?     இண்டேன்

பொது அறிவு ( 128 )

  1271. தமிழகத்தில் எத்தனை தேசிய பூங்காக்கள் உள்ளன?     5 1272. தமிழகத்தில் எத்தனை விலங்குகள் சரணாலயங்கள் உள்ளன?     15 1273. தமிழகத்தில் எத்தனை பறவைகள் சரணாலயங்கள் உள்ளன?     15 1274. ஜனாதிபதியின் சம்பளம்?     500000 ₹ 1275. துணை ஜனாதிபதியின் சம்பளம்?     400000 ₹ 1276. சொந்த பயன்பாட்டிற்காக கஞ்சாவை அங்கீகரித்த நாடு ?     ஐரோப்பா 1277. தமிழகத்தின் மிகப்பெரிய காய்கறி சந்தை?     ஒட்டன்சத்திரம் , திண்டுக்கல் 1278. பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் இந்திய திருநங்கை?     நர்த்தகி நட்ராஜ் 1279. பிரதமரின் சம்பளம்?     280000 ₹ 1280. இந்திய தலைமை நீதிபதியின் சம்பளம்?     280000 ₹  

பொது அறிவு ( 127 )

   1261. ஐம்பொன் என்பதில் உள்ள ஐந்து உலோகங்கள் யாவை?     பொன் , வெள்ளி , செம்பு , இரும்பு , ஈயம் 1262. முச்சுடர்?     ஞாயிறு (சூரியன்) , திங்கள் (நிலா) , நெருப்பு 1263. மூவாசை?     மண்ணாசை , பெண்ணாசை , பொன்னாசை 1264. இந்தியாவிலேயே மாற்று திறனாளிகளுக்கு அதிக சேவை வழங்கியுள்ள மாநிலம்?     தமிழ்நாடு 1265. இந்தியாவில் திருநங்கைகளுக்கான பல்கலைக்கழகம் எங்கு அமைந்துள்ளது?     உத்திரபிரதேசம் 1266. இராணுவத்தில் வழங்கப்படும் மிக உயர்ந்த விருது?     அசோகசக்ரா விருது 1267. இரும்பால் ஆன முதல் கப்பலை செய்தவர்?     வில்கின்சன் 1268. நவீனக் கம்பன் என்றழைக்கப்பட்டவர்?     மீனாட்சி சுந்தரம் பிள்ளை 1269. வட மற்றும் தென் துருவங்களில் குளிர் குறைவானது?     தென் துருவம் 1270. மழை காலங்களில் மட்டும் குட்டிப்போடும் விலங்கு?     கங்காரு

பொது அறிவு ( 126 )

1251. மழை காலங்களில் வெளிவரும் சிவந்த மென் பட்டு துணி வகை போன்ற நிறத்தை ஒத்த பூச்சி?     மூதாய் பூச்சி ( வெல்வெட் பூச்சி - Velvet Insect ) 1252. மூதாய் எந்த பூச்சியினத்தை சார்ந்தது?     சிலந்தி வகை 1253. சித்த மருத்துவத்தில் மூதாய் பூச்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது?     இந்திரகோப பூச்சி 1254. மூதாய் பூச்சியின் மருத்துவ பயன்?     இதிலிருந்து பெறப்படும் எண்ணெய் முடக்குவாத சிகிச்சைக்கு பாரம்பரிய இந்திய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது 1255. மூதாயின் மற்றுமொரு பெயர்?     தம்பலப்பூச்சி [கிச்சுக் கிச்சுத் தம்பலம் என்பது சிறுவர், சிறுமியர் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று. மூதாய் பூச்சியை உடலில் செல்ல விட்டால் அதன் முன் கொம்புகளினால் தொடர்ந்து தொட்டுக்கொண்டே செல்லும் ( கடிக்காது ). இது கிச்சுக் கிச்சு மூட்டும்.] 1256. வரிக்குதிரையின் நிறம்?     கருப்பில் வெள்ளை வரிகள் ( வெள்ளையில் கருப்பு வரிகள் கிடையாது ) 1257. மிகப்பெரிய புறா வகை?     விக்டோரியா ராணியின் கிரீடமணிந்த புறா ( Victoria Crowned Dove ) 1258. கொலம்பியாவின் குறிப்பிட்ட வண்ணத்துப்பூச்சி வகை ஏன் 89'98 என அழைக்கப்படுகிறது?     அ

பொது அறிவு ( 125 )

 1241. இந்தியாவில் அதிக வாசகர்களை கொண்ட நாளிதழ்?     தினத்தந்தி 1242. இந்தியாவில் தற்போது அதிகப்படியாக விற்பனையாகும் கணினி?     பென்டியம் 1243. "அறிவே சக்தி" என்று கூறிய விஞ்ஞானி?     ஃபிரான்சிஸ் பேகன் 1244. மழையில் உள்ள வைட்டமின்?     வைட்டமின் பி-12 1245. சீன நாட்டின் தேசிய பூ?     திராட்சை பூ 1246. வெறும் மூன்று சேனல்களை ஒளிபரப்பும் நாடு?     வடகொரியா 1247. ஆண்களுக்கு வீட்டுவேலை செய்ய பயிற்சி அளிக்க தொடங்கிய மாநிலம்?     கேரளா 1248. தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் நடமாடும் டீக்கடையின் பெயர்?     INDCO TEA 1249. இந்தியாவில் பெண்களுக்காக தொடங்கப்பட்ட முதல் வங்கி?     பாரதிய மகிளா வங்கி 1250. ஹிட்லர் எந்த விலங்கிற்கு பயப்படும் சுபாவம் கொண்டிருந்தார்?     பூனை

பொது அறிவு ( 124 )

1231. தமிழக அரசின் மாநில பாடலாக அறிவிக்கப்பட்டுள்ள பாடல்?     தமிழ்த்தாய் வாழ்த்து 1232. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை எத்தனை நொடிகள் பாட வேண்டும் என அரசு நிர்ணயித்துள்ளது?     55 நொடிகள் 1233. மாணவர்கள் ஏற்றத்தாழ்வின்றி பள்ளியில் படிக்க காமராஜர் அறிமுகப்படுத்திய திட்டம்?      சீருடை திட்டம் 1234. சுவிட்சர்லாந்தில் அறிவியல் நாள் யாருடைய பிறந்தநாளில் கொண்டாடப்படுகிறது?      ஏ.பி.ஜே.அப்துல் கலாம் 1235. இந்திய ஜனாதிபதி மாளிகையில் சைவ உணவு மட்டுமே சாப்பிட்ட ஒரே ஜனாதிபதி?     ஏ.பி.ஜே.அப்துல் கலாம்   1236. தமிழ்நாட்டின் நுழைவுவாயில்?     தூத்துக்குடி 1237. பாலைவனமும் கடலும் சந்திக்கும் ஒரே நாடு?      நமீபியா 1238. எந்த இந்திய மாநிலத்தில் அதிக புலிகள் உள்ளன?     மத்திய பிரதேசம் 1239. எந்த இந்திய மாநிலத்தில் அதிக பழங்குடியினர்  உள்ளனர்?      மத்திய பிரதேசம் 1240. எந்த இந்திய மாநிலம் வைரம் உற்பத்தி செய்வதில் முதலிடத்தில்  உள்ளது?     மத்திய பிரதேசம்  

பொது அறிவு ( 123 )

 1221. தெற்கிலிருந்து வீசும் காற்று?      தென்றல் காற்று 1222. வடக்கிலிருந்து வீசும் காற்று?      வாடை காற்று 1223. கிழக்கிலிருந்து வீசும் காற்று?      கொண்டல் காற்று 1224.  மேற்கிலிருந்து வீசும் காற்று?      மேலை காற்று ( மேகாற்று ) 1225. 120 கிமீக்கு  மேல் வேகமாக வீசும் காற்று?     சூறாவளி   1226. சிலிக்கா என்பதன் மற்றொரு பெயர்?      சிலிக்கான் டை ஆக்ஸைடு   1227. கங்காரு இனத்தில் பெரியவை?     சிவப்பு கங்காருகள் 1228. "சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே" என்றவர்?     பாரதியார் 1229.  அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகரம்?     போர்ட் பிளேயர்   1230. பாகிஸ்தான் என்ற பெயரை உருவாக்கியவர்?     முகமது அலி ஜின்னா

பொது அறிவு ( 122 )

  1211. ஆட்சி மாற்றம் இல்லாத நாடு?     மெக்சிகோ 1212. இந்திய விவசாயிகள் தினம்?     டிசம்பர் 23 1213. மின்சாரம் அதிகமாக உற்பத்தி செய்யும் நாடு?     அமெரிக்கா 1214.  இடப்பட்ட பின்னர் ( இரப்பர் போல் ) பெரிதாகும் முட்டை?     பாம்பு முட்டை 1215. பிறந்த குழந்தை என்னதான் அழுதாலும் கண்ணீர் வருவதில்லை. ஏன்?     பிறந்த 15 ஆவது நாளில்தான் கண்ணீர் சுரப்பி முழுமையாக வளர்ந்திருக்கும். 1216. அதிக மக்கள்தொகை கொண்ட தீவு?     ஜாவா 1217. அதிக யானைகள் உள்ள நாடு?     ஜிம்பாப்வே 1218. அதிவேகமாக தாவும் விலங்கு?     சிறுத்தை 1219.  அதிவேகமாக பறக்கும் பறவை?     தேன் சிட்டு ( Humming Bird ) 1220. பழமையான பூச்சி வகை?     கரப்பான் பூச்சி

பொது அறிவு ( 121 )

1201. சிறுபொறி = சிறுமை + பொறி. இதில் பயின்று வந்துள்ள புணர்ச்சி விதி யாது?     ஈறு என்றால் கடைசி என பொருள். சிறுமை என்ற முதல் சொல்லிலுள்ள கடைசி ( ஈறு ) எழுத்தாகிய மை என்ற சொல் நீங்கி சிறுபொறி என சேர்ந்துள்ளது. ( புணர்ச்சி - சேருதல் ) இவ்வாறு கடைசி எழுத்து மறைந்து புணர்வதன் புணர்ச்சி விதி , "ஈறு போதல்" எனப்படும். 1202. சிறுபொறி = சிறுமை + பொறி. இதில் நிலைமொழி யாது?     சிறுமை என்ற முதல் சொல் நிலைமொழி. 1203. சிறுபொறி = சிறுமை + பொறி. இதில் வருமொழி யாது?     பொறி என்ற இரண்டாம் சொல் வருமொழி. 1204.  சிறுபொறி என்ற சொல்லில் பயின்று வந்துள்ள இலக்கணநயம் யாது?     சிறுபொறி என்ற சொல் சிறிய பொறி எனுமாறு பொருள் தரும்‌. சிறியது என்பது ஒரு பண்பாதலால் இதில் "பண்புத்தொகை" என்ற இலக்கணநயம்  பயின்று வந்துள்ளது. 1205. " Shoe Flower " அல்லது சீன ரோஜா என அழைக்கப்படும் மலர்?     செம்பருத்தி ( hibiscus rosa sinensis ) 1206. 1/2 என்பது?     அரை 1207. 1/4 என்பது?     கால் 1208. 1/8 என்பது?     அரைக்கால் 1209.  1/16 என்பது?     வீசம் 1210. 1/80 என்பது?     காணி

பொது அறிவு ( 120 )

 1191. உலகின் மிகப்பெரிய கழிமுகம்?     சுந்தரவனம் ( இந்தியா ) [டெல்டா என்பதற்குரிய தமிழ்ச்சொல், கழிமுகம் என்பது. ஆறு கடலில் சேர்ந்து கலக்குமிடத்தையொட்டிய நிலப்பகுதிக்குக் 'கழிமுகம்' என்று பெயர். 'கடைமடை' என்றும் சொல்லலாம்.] 1192. நைல் நதியின் இரண்டு துணை ஆறுகள்?     நைல் ஆறு, வெள்ளை நைல் மற்றும் நீல நைல் என்ற இருபெரும் துணை ஆறுகளைக் கொண்டது. இவற்றில் வெள்ளை நைல் அதிக நீளம் கொண்டது. 1193. பண்டைய எகிப்திய மொழியில் நைல் என்பதன் பொருள்?     பெரிய ஆறு 1194. தமிழகத்தில் கேழ்வரகு உற்பத்தியில் முதலிடம் வகிப்பது?     கிருஷ்ணகிரி 1195. குழந்தைகள் நீதிமன்றம் அமைந்துள்ள முதல் மாநிலம்?     டெல்லி 1196. எவ்விடத்தில் தமிழ் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது?     தஞ்சாவூர் 1197. அணுக்கொள்கையை உருவாக்கியவர் யார்?     ஜான் டால்டன் 1198. ஜான் டால்டன் அவர்களின் அணுக்கொள்கையின் அடிப்படையில் அணு என்பது?     பிரிக்கமுடியாத கடினமான கோளங்கலாகும். 1199.  நவீன அணுக்கொள்கை, அணுவைப் பற்றி கூறுவது என்ன?     அணுக்கள் பிளக்ககூடியவை. 1200. அணுவானது அணுக்கருவைக் கொண்டுள்ளது என்று முதன் முதலில் கண்டறிந்தவர்?    

பொது அறிவு ( 119 )

  1181. நெய்யின் பூர்விகம்?          இந்தியா 1182. நெய் மற்றும் வெண்ணெய் ஆகிய இரண்டில் எதில் கொழுப்பு ( கொலஸ்ட்ரால் ) அதிகம்?     வெண்ணெய் 1183. நெய் எவ்வாறு பெறப்படுகிறது?     வெண்ணெய் உருக்கப்பட்டு நெய் பெறப்படுகிறது. 1184. புகழ்பெற்ற வெண்ணெய்?     திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் உற்பத்தி செய்யப்படும் வெண்ணெய் மற்றும் நெய் இந்திய அளவில் மிகவும் புகழ்பெற்ற ஒன்றாகும். 1185.  சித்த மருத்துவத்தில் மருந்துகளுக்குத் துணைமருந்தாகவும், மருந்துகள் கெடாமல் பாதுகாப்பதற்கும் பயன்படுவது?     நெய் 1186. அணு ஆற்றலினால் இயங்கும் கப்பலை முதன்முதலாக தயாரித்த நாடு?     அமெரிக்கா 1187. நிறங்களின் ராஜா?     சிவப்பு நிறம் [ Red is the king of colors. ] 1188. செயல்பட்டுக்கொண்டிருக்கும்  எரிமலைகள் அதிகமாக உள்ள நாடு?     இந்தோனேசியா 1189. அம்மீட்டரின் பயன்பாடு?     மின்னோட்டத்தை அளக்க பயன்படுகிறது. 1190.  வோல்ட்மீட்டரின் பயன்பாடு?     மின்னழுத்தத்தை அளக்க பயன்படுகிறது.

பொது அறிவு ( 118 )

  1171. அப்பளம் எந்த மாவில் தயாரிக்கப்படுகிறது?     அரிசி மாவு மற்றும் உளுந்த  மாவு   1172. அப்பளத்தின் வேறு பெயர்கள்?     பப்படம், பப்பட், அப்பளா   1173. சுவையான அப்பளத்திற்கு பெயர் போன ஊர்?     கல்லிடைக்குறிச்சி  (நெல்லை)   1174. சங்க இலக்கியங்களில் உளுந்து எவ்வாறு அறியப்படுகிறது?     ஊந்தூழ்   1175. ஆங்கிலத்தில் உளுந்து எவ்வாறு அறியப்படுகிறது?     Vigna mungo ( விக்ன முங்கோ )   1176. பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரபலமான ஈபிள் கோபுரத்தை வடிவமைத்தவர்?     கஸ்டவ் ஈபிள்   1177. அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி ( Statue of Liberty ) சிலையை வடிவமைத்தவர்?     கஸ்டவ் ஈபிள்  [Alexandre Gustave Eiffel was a French civil engineer.]   1178. கணினி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு?     1952   1179. முதன்முதலில் புறாப் பந்தயம் தோன்றிய இடம்?     பெல்ஜியம் 1180. 'அமைதியின் மனிதர்' என்று அழைக்கப்படுபவர்?     லால்பகதூர் சாஸ்திரி

பொது அறிவு ( 117 )

 1161. குளிர் காலங்களில் வாயை திறந்தால் பனி ( வெண் புகை போல் ) வெளியேறுவது ஏன்?      உடலினுள் உள்ள காற்று வெப்பமானது. சூழலில் உள்ள காற்று குளிர் காலங்களில் அதிக குளிர்வடைந்து குளிர்விக்க ஏதுவானதாகயிருக்கும். உடலிலிருந்து வெதுவெதுப்பான காற்று வெளியேறும் போது அந்த காற்று , சூழலின் காற்றினால் குளிர்விக்கப்பட்டு  உறைந்து மேகத்திற்கு ஒப்பானதாக பனிமூட்டமாகிறது. 1162. "பொங்குகடல்" - இந்த சொல்லில் எந்த இலக்கணம் பயின்று வந்துள்ளது?     வினைத்தொகை ( பொங்கிய கடல் - பொங்குகின்ற கடல் - பொங்கும் கடல் ) [தமிழ் இலக்கணத்தில் வினைத்தொகை என்பது மூன்று கால வினைகளையும் தொகுத்து ஒருசேரக் குறிக்குமாறு வரும் ஒரு பெயர்ச்சொல். பரவலாக எடுத்துக்காட்டப்படும் சொல் ஊறுகாய் என்பது. இச்சொல் ஊறுகின்ற காய் ( நிகழ் காலம் ), ஊறின காய் ( கடந்த காலம் ), ஊறும் காய் ( எதிர் காலம் ) என முக்கால வினைகளையும் குறிக்கும்.]   1163. லேசர் விளக்கை கண்டுபிடித்தவர்?     டி.ஹெச்.மெய்மன் ( Theodore H.Maiman )     1164. இயந்திர பொறியியலின் தந்தை எனப்படுபவர்?     ஜேம்ஸ் வாட் [James Watt is often coined the father of mechanical en

பொது அறிவு ( 116 )

1151. இந்தியாவில் இஞ்சி அதிகமாக விளையும் மாநிலம்?     கர்நாடகம் 1152. அதிக வாக்காளர்களை கொண்ட தமிழக தொகுதி?     சோழிங்கநல்லூர் தொகுதி 1153. டைனோசர் என்பதன் பொருள்?     பயங்கரமான பல்லி 1154. மூங்கிலால் செய்யப்பட்ட கிரிக்கெட் மட்டைகளை அறிமுகம் செய்த மாநிலம்?     திரிபுரா 1155. மூன்று பக்கங்களும் வங்கதேசத்தால் சூழப்பட்ட மாநிலம்?     திரிபுரா 1156. பாலில் கொழுப்புச்சத்து எக்காலத்தில் குறைவாகயிருக்கும்?     குளிர் காலத்தில் 1157. எலும்புக்கூடு இல்லாத விலங்கு?     ஜெல்லி மீன் 1158. யானைக்கால் நோய் எப்படி பரவுகிறது?     கொசுக்கடியால் 1159. வசந்தகால மாதங்கள்?     சித்திரை , வைகாசி 1160. பூசணிச்செடியின் இருவித பூக்கள்?     காய்க்கும் பூ மற்றும் காயாத பூ    

வணங்கான்

காலங்கள் விரைந்தோடினாலும் - சில   காயங்கள் மறைந்தோடுவதில்லை !  நெடும் மாத இடைவேளிக்கு பின்னர் ஒரு சிறுகதையை வாசிக்க நேர்ந்தது. கதையின் பெயர், "வணங்கான்". ஜெயமோகனின் எழுத்துக்கள் என்றால் சொல்லவா வேண்டும். தலைப்பை கிரகித்ததும், "இறை மறுப்பாளரின் கதை" என மனதில் பதிந்து வாசிக்க ஆரம்பித்த சில நொடிகளிலேயே தெரிந்தது. "இது இறைமறுப்பாளரினது அன்று. சாதியம் எனும் திரை மறுப்பாளரினது" என்று.     பொழிக்கம்பை நட்டுவைத்தாலும் தளிர்விடும் இயல்பு நாஞ்சில்நாட்டினது. "ஏலே பிலேய்... எனக்க மக்கா..." என்ற கொஞ்சும் கிளியின் நாக்கில் பிறக்கும் மொழியை போன்றது குமரித்தமிழ். இவ்வளவு எழிலை கொடுத்த இறை அல்லது இயற்கை, அக்காலத்தில் இந்த அழகு தெச்சணத்தை ஆண்டவர்களுக்கு நல்ல மனத்தை மட்டும் கொடுக்க தவறிவிட்டதுபோலும். தென் திருவிதாங்கூர் கொடுமைகள், நினைக்கும்போதே மனத்தை பெரும்வலியில் ஆழ்த்துபவை. மனிதனை மனிதன், விலங்குபோல் நடத்துவது அக்கால வாடிக்கை. அடி, மிதி, மானபங்கம், மறைக்கா அங்கம், அதற்குமொரு வரி, அதுவும் அளவுக்கொரு வரி மற்றும் இன்னும் பல பல விதத்தில் குறிப்பிட்ட மக

பொது அறிவு ( 115 )

1141. அகத்தி கீரையில் என்ன வைட்டமின் உள்ளது?     வைட்டமின் ஏ 1142. நம் உடலிலுள்ள எந்த உறுப்பை மூளை அதிகமாக வேலை வாங்குகிறது?     நம் இரு கைகளின் கட்டை விரல்களை 1143. பல்லவர்களின் தலைநகரம்?     காஞ்சிபுரம் 1144. பல்லவர்கள் பின்பற்றிய சமயம்?     சைவ சமயம் 1145. உணவு கிடைக்காத போது தன் இனத்தையே கொன்று தின்னும் உயிரினம்?     தேள் 1146. முதன்முதலில் கேள்விக்குறியை பயன்படுத்திய மொழி?     இலத்தீன் 1147. ஒரே நேரத்தில் வெவ்வேறு வாசனை வீசும் மலர்?     மனோரஞ்சித மலர் 1148. மிகச்சிறிய தேசிய கீதம் கொண்ட நாடு?     ஜப்பான் ( 4 வரிகள் ) 1149. மிகப்பெரிய தேசிய கீதம் கொண்ட நாடு?     கிரேக்க நாடு ( 128 வரிகள் ) 1150. பேரீச்சம் பழத்தில் உள்ள வைட்டமின்கள்?     வைட்டமின் A மற்றும் வைட்டமின்  C

பொது அறிவு ( 114 )

1131. குரோமோசோம் தமிழில் எவ்வாறு அறியப்படுகிறது?     நிறப்புரி அல்லது நிறமூர்த்தம்    1132. குரோமோசோம் என்பது?      மரபு பண்புகளை கடத்தும் புரத மூலக்கூறு  [ தாய் தந்தையரின் பண்புகள் அடுத்த தலைமுறைக்கு குரோமோசோம்களினால் கடத்தப்படுகின்றன. A chromosome is a long DNA molecule with part or all of the genetic material of an organism ] 1133. மனித உடலின் செல்கள் ஒவ்வொன்றிலும் எத்தனை குரோமோசோம்கள் உள்ளன?     46 குரோமோசோம்கள் ( 23 ஜோடிகள் )  1134. மனிதர்களில் குரோமோசோம்களின் எண்ணிக்கை 47 ஆக காணப்படும் போது என்ன நோய் ஏற்படுகின்றது?     கிளைன் பெல்டர்ஸ் சின்ட்ரோம்  1135. குரங்கின் உடலின் செல்கள் ஒவ்வொன்றிலும் எத்தனை குரோமோசோம்கள் உள்ளன?     46 குரோமோசோம்கள் ( 23 ஜோடிகள் ) 1136. நொடிக்கு இருபது முறை கொத்தும் பறவை?     மரங்கொத்தி 1137. தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஒன்பது நாட்கள் வாழும் உயிரினம்?     கரப்பான் பூச்சி 1138. தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை என்று பாடியவர் யார்?     பாரதிதாசன் 1139. பிளாஸ்டிக்குகளை எரிக்கும் பொழுது எந்த நச்சுப் புகை வெளியாகிறது?     டையாக்ஸின்  1140. தண்ணீருக்கு அட

பொது அறிவு ( 113 )

1121. உலக துன்பத்திற்கு காரணம் வறுமை என்றவர்?     கார்ல் மார்க்ஸ் 1122. உலக துன்பத்திற்கு காரணம் அறியாமை என்றவர்?     காமராசர் 1123. உலக துன்பத்திற்கு காரணம் ஆசை என்றவர்?     புத்தர் 1124. பாராசூட்டிலிருந்து  குதித்த முதல் உயிரினம்?     நாய் 1125. ரோஜாக்களின் தாயகம் எனப்படும் நாடு?     இங்கிலாந்து 1126. இந்தியாவின் மிக பழமையான பொறியியல் கல்லூரி     ரூர்கேலா ( Rourkela ) 1127. அணு உலை இல்லாத மாநிலம்?      கேரளா 1128. நைல் நதி எத்தனை நாடுகளின் வழியாக பாய்கிறது?     ஒன்பது நாடுகள் 1129. உலகின் மிகப்பெரிய அணு உலை எங்குள்ளது?     பிரான்ஸ் 1130. கோதுமை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு?     இந்தியா

பொது அறிவு ( 112 )

1111. இந்தியாவில் முதன்முதலில் எந்த மாநிலத்தில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது?     தமிழ்நாடு  1112. மாம்பழ நகரம் ?     சேலம் 1113. சரித்திரம் உரையும் பூமி?     சிவகங்கை 1114. ஒரே தலைநகரை கொண்ட இரண்டு நகரங்கள்?     பஞ்சாப் மற்றும் ஹரியானா ( தலைநகர் : சண்டிகர் ) 1115. இரண்டு தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம்?     ஜம்மு காஷ்மீர் ( தலைநகரங்கள் : ஜம்மு மற்றும் ஸ்ரீ நகர் ) 1116. இந்தியாவை போலவே மயிலை தேசிய பறவையாக கொண்ட மற்றொரு நாடு?     மியான்மர் 1117. உலகிலேயே அதிகமாக சினிமா தயாரிக்கும் நாடு ?     இந்தியா 1118. தடை செய்யப்பட்ட நூல் எவ்வாறு குறிக்கப்படுகிறது?     சிகப்பு புத்தகம் 1119. புகழ்பெற்ற தஞ்சாவூர் நந்தி சிலையின் எடை எவ்வளவு?     சுமார் 25 டன் 1120. டைகர் என்று அழைக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்?     பட்டோடி ( Nawab Mohammad Mansoor Ali Khan Pataudi )

பொது அறிவு ( 111 )

1101. இந்தியாவில் முதன்முதலில் எந்த மாநிலத்தில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது?     தமிழ்நாடு 1102. இந்தியாவில் தேர்தலில் போட்டியிட தகுதியான வயது ?     25 1103. DNAவில் இரண்டு இழைகள் உள்ளன என கண்டறிந்தவர்கள்?     வாட்சன் மற்றும் கிரிக் 1104. வெள்ளரிக்காயில் உள்ள நீரின் அளவு?     95 % 1105. தர்பூசணியில் உள்ள நீரின் அளவு?     91 ℅ 1106. பாரதியாரின் முப்பெரும் நூல்கள்?     கண்ணன் பாட்டு - குயில் பாட்டு - பாஞ்சாலி சபதம் 1107. பாரதியார் நடத்திய இதழ்கள் ?     இந்தியா மற்றும் விஜயா 1108. திருக்குறளின் பெருமையை உணர்த்தும் நூல்?     திருவள்ளுவமாலை 1109. திருவள்ளுவர் எச்சங்கத்துப் புலவர்?     கடைச்சங்கம் 1110. "தமிழ் மாதின் இனிய உயிர்நிலை" என போற்றப்படும் நூல்?     திருக்குறள்

பொது அறிவு ( 110 )

  1091. இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் நூலகம்?     திருவனந்தபுரம் மத்திய நூலகம் 1092. இந்தியாவின் மிகப்பெரிய நூலகம்?     கல்கத்தா தேசிய நூலகம் 1093. இந்தியாவில் முதன்முதலில் இரண்டு ஆஸ்கார் விருதுகளை பெற்றவர்?     ஏ.ஆர்.ரஹ்மான் 1094. உலக அளவில் தமிழ் நூல்கள் அதிகமுள்ள நூலகம்?     கன்னிமாரா நூலகம் - சென்னை 1095. மொத்த இந்திய பரப்பளவில் தமிழகத்தின் பரப்பு?     4 %   1096. சங்கை காதருகில் வைக்கும்போது கேட்கும் சத்தம்?     சுற்றியுள்ள காற்றின் எதிரொலி 1097. "நான் தனியாக வாழவில்லை... தமிழோடு வாழ்கிறேன்..." என கூறியவர்?      திரு வி.கலியாண சுந்தரனார்   1098. ஐ என்ற சொல்லின் பொருள்?     தலைவன் 1099. தூக்கத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்?     மெலட்டோனின் 1100. நீர் நிலைகளிலும் வாய்க்கால்களிலும் தானே வளர்வது?     ஆராக்கீரை

பொது அறிவு ( 109 )

1081  .  உலகின் முதல் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்?     எக்கோ 1082 .   தீச்சுடரின் நீல பகுதியில் உள்ள வாயு?     கார்பன் மோனாக்ஸைடு 1083 . வாகன புகையில் அதிகமுள்ள வாயு?     கார்பன் மோனாக்ஸைடு 1084 .  மொகலாய ஆட்சியின் பொற்காலம் என்றழைக்கப்படுவது யார் காலம்?     ஷாஜகான்   1085 . சீக்கிய மதத்தை நிறுவியவர்?     குருநானக் 1086  .  “மனிதனுள் புதைந்திருக்கும் முழுமையை வெளிப்படுத்துவதே கல்வியின் நோக்கம்” என்று கூறியவர்?     விவேகானந்தர் 1087 .   பெயிண்ட் தயாரிக்க பயன்படுவது?     அலுமினிய தூள்கள்  1088 . புத்தரின் மகன்?      ராகுல் 1089 .  பாபர் என்பதன் பொருள்?     புலி 1090 . பாபர் எந்த கலையில் வல்லவர்?     இசை

பொது அறிவு ( 108 )

1071  .  பருப்பொருட்களின் நான்கு நிலைகள்?     திண்மம் - திரவம் - வாயு - பிளாஸ்மா நிலை 1072 .   பிளாஸ்மா நிலை என்பது?     மின்னூட்டம் பெற்ற வாயு (Plasma is an electrically charged gas) 1073 . சங்ககாலத்தில் வில்லவர்கள் என அழைக்கப்பட்டவர்கள்?     சேர மன்னர்கள் 1074 .  சங்ககாலத்தில் வானவர்கள் என அழைக்கப்பட்டவர்கள்?     சேர மன்னர்கள் 1075 . சங்ககாலத்தில் மலையர்கள் என அழைக்கப்பட்டவர்கள்?     சேர மன்னர்கள் 1076  .  மருந்துகளின்‌ ராணி?     பென்சிலீன் 1077 .   ஞானக்கீரை?     தூதுவளை 1078 . 4'O Clock தாவரம் எனப்படுவது?     மல்லிகை 1079 .  சேரன் தீவு என அழைக்கப்பட்டது?     இலங்கை 1080 . "நிலா நிலா ஓடி வா" என்ற குழந்தை பாடலை இயற்றியவர்?     அழ.வள்ளியப்பா